மீறல்கள்

பத்மஜாவின் பதிவுகள் பல நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன. குரோம்பேட்டை கிளை யூனியன் நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது. இரண்டுமுறை இருமினால் யூனியனுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் செய்தி போய்விடும். நான் கிளைக்குச் சென்று சில நாட்களிலேயே, Leather business செய்துவந்த வாடிக்கையாளரின் மொத்த குடும்பமும் விபத்தில் இறக்க, தப்பிப்பிழைத்தது இருபது வயதான பெண்ணும், பெண்ணின் கணவரும். மாதாந்திர விலக்கு கோயிலுக்குச் சென்ற குடும்பத்துடன் சேராமல் அவரைக் காப்பாற்றியது. அவர் வீட்டிற்கு சென்றால், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பூவும், குங்குமமும் … Continue reading மீறல்கள்

இலக்கியம்

எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது. சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் … Continue reading இலக்கியம்

அறை – தேவிலிங்கம்:

கு.ப.ராவின் ஆற்றாமை சிறுகதையை யார் மறக்க முடியும். தனக்கு மறுக்கப்பட்ட காமம் அடுத்தவளுக்குக் கிடைப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் பொறாமை தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் மையச்சங்கிலி. தேவி, கூட்டுக்குடும்பத்தில் கொழுந்தன் மேல் கொள்ளும் உரிமையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். வயது அதிகமுள்ள அண்ணிகளின் மூத்தபிள்ளைகளாகிப் போகிறார்கள் கொழுந்தர்கள். வித்தியாசம் குறைகையில் அந்த உறவில் ஒரு சீண்டல் இருப்பது இயல்பு. பெரும்பாலும் சீண்டலுடன் நிறுத்திக் கொள்ளப்படும். நுட்பமான உறவு அது. காமம் ஒடுக்கப்படுகையில் பெண்களின் எதிர்வினை பலவாக … Continue reading அறை – தேவிலிங்கம்:

வாசிப்பின்பம்

இலக்கியம் என்பதைப் பால் போல் யாரும், யாருக்கும் சங்கில் புகட்டுவதற்கில்லை. சிலாகித்து அல்லது விமர்சித்துப் பேசப்படும் பிரதிகளில், பல பரிமாணங்களின் சிறகுகள் உதிர்ந்து, ஒற்றைப் பரிமாணம் உருக்கொள்கிறது. வாசகனுக்கு தடித்த கயிறோ அல்லது சுளகோ, யானை என்ற அபிப்ராயம் மேலிடுகிறது. செறிவான இலக்கியம் எப்போதும், வாசிப்பவரின் அனுபவத்திற்கு, சூழலுக்கு, கிரகிப்பிற்கு ஏற்ப பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மாற்றும் திரவம் போன்றவை. ஜெயகாந்தனை என்னுடைய பள்ளியிறுதியில், முழுவதுமாக வாசிக்க ஆரம்பித்த போது அவரது சிறுகதைகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, மனித வாழ்க்கையில் … Continue reading வாசிப்பின்பம்

Reading slump

Reading Slump என்ற நோயே இதுவரை எனக்கு இருந்ததில்லை. கடந்த முப்பத்தைந்து வருடங்களாக வாசிக்கும் வேகத்தை விட வாங்கும் வேகம் அதிகரித்ததனால், படிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை, வருடாவருடம் அதிகரித்து வரும்பொழுது, Reading slump என்பது என்வரையில் Luxury. சிலர் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட வாசிக்காமல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பொதுவாகச் சொல்லும் காரணம் வாசிக்கும் மனநிலை இல்லை. என்னைப் பொறுத்தவரையில், குடிகாரனுக்கு சோகத்தைத்தீர்க்க, சந்தோஷத்தைக் கொண்டாட, வெறுமையை விரட்ட என்று பல்வேறு உணர்வுநிலைகளுக்கு, குடியே மருந்து போல, வாசிப்பே … Continue reading Reading slump

Compromises

தள்ளுவண்டி பழக்காரரிடம், " நீங்கள் எப்போதும் ஜாஸ்தி தான் சொல்வீங்க, ஆப்பிளுக்கு கிலோ நூறுரூபாய் தான் தரமுடியும்'' என்று விலைநிர்ணயம் செய்த பெண்ணின் கொஞ்சல், கணவரிடம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யப்போன மனத்தைக் கடிவாளம் போட்டு நிறுத்திவிட்டேன். தலை தெரிந்தாலே, கதவைச் சத்தமாகச் சாத்தும் எதிர்வீட்டுப் பெண், மாதாந்திர தண்ணீர் மீட்டரைக் கணக்கெடுப்பவரிடம், " இரண்டு பேர் இருக்கும் வீட்டிற்கு இவ்வளவு போடுகிறீர்களே" என்று கேட்ட தொனியும், முகபாவமும் சத்தத்தை Mute செய்து கேட்டால் " … Continue reading Compromises

இலக்கிய தாதாக்கள்

முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டதாக தொடர்ந்து வரும் Memories சொல்கின்றன. உண்மையில் எனக்குத் தமிழில் எழுதத் தயக்கம் இருந்தது. வாசிப்பிற்கு அது ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் செய்யும் என்ற அனுமானம் இருந்தது. தோழர் R.P. ராஜநாயஹம் என்னிடம் பேசும் பொழுதெல்லாம் வாசித்தது குறித்து தமிழில் எழுதச் சொல்லி விடாது வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். அது இல்லையெனில் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எழுத ஆரம்பித்து சில காலத்தில் நெருங்கிய நண்பர்கள், … Continue reading இலக்கிய தாதாக்கள்

விஷ்ணு சகஸ்ரநாமம்

விஜி என்ற விஜயாவை அவன் சந்தித்ததே ஒரு விபத்து. இருவரும் எட்டாவது படித்துக் கொண்டிருக்கக் கூடும். காலனியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை படித்து, திருப்பாவையும், பாவையும் பள்ளி எழுச்சியும் என்ற இரண்டு புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார்கள் என்றே போனான் அவன். விஜி இனம்புரியாத சோகம் ததும்பிய முகம். எப்போதும் கடவுள் வாழ்த்துக்கு அவள் தான். அந்த நேரத்தில் மட்டும் அவள் முகம் ஜெனிலியா போல் மாறிவிடும். அன்று அவன் நுழைந்த போது அவள் மட்டும் தான். அவன் … Continue reading விஷ்ணு சகஸ்ரநாமம்

தமிழ் இலக்கியம்

Tomb of Sand அமெரிக்காவிலும் வெளியாகப்போகிறது. உலகத்தின் மிகப்பெரிய மார்க்கெட் அது. உண்மையில் கீதாஞ்சலிக்கு நிறையவே அதிருஷ்டம் இருக்கின்றது. பழகிய துணையை விடப் பக்கத்துவீடு அழகாக இருப்பது போன்ற பொதுமனப்பான்மைகளைக் களைந்து பார்த்தாலும், மீதி ஐந்து நாவல்களும் அதிக நுட்பம் வாய்ந்தவை. ஒரு இந்தியநாவல் உலகின் முக்கிய பரிசை வாங்கும் பொழுது, ஒரு இந்தியனாக மகிழ்வது நம் கடமை. நிறைசூலியின் நடையை விமர்சனம் செய்வது போல ஆகும், நம் நாட்டிற்குக் கிடைத்த பெருமையைக் குலைக்கும் செயலில் இறங்குவது. … Continue reading தமிழ் இலக்கியம்

Staring

காலனியில் லட்சா என்ற லட்சுமணனின் வீட்டின் முன் பேசிக் கொண்டிருக்கையில், தற்செயலாகத் திரும்பிய போது, விஜி வீட்டு ஜன்னல் திரை சட்டென்று இழுத்துவிட்டது போல் ஒரு உணர்வு. அத்துடன் அதை மறந்து விட்டேன்.பத்து நாட்கள் கழித்து எதிர்பார்த்திருந்ததால், அதே நிகழ்வு மறுபடியும் நடந்த பின் அது என் கற்பனையல்ல என்பது புரிந்துவிட்டது. விஜி என்னிடம் நேரடியாகவே பேசுபவள். எதற்காக இப்படி செய்ய வேண்டும்? பள்ளி, கல்லூரி, மணமுடித்துக் கிட்டத்தட்ட நாற்பது வயது வரையிலும் அழகான பெண்களை உற்றுப்பார்க்கும் … Continue reading Staring