வரலாற்று நாவல்கள்:

பிரம்மதேசம் அத்தையின் வீட்டில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், பத்திரிகைகளில் இருந்து எடுத்து பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.பலரது வீடுகளில் நான் சிறுவனாக இருந்த போது அவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது படிக்கிறார்களோ இல்லையோ பளபளக்கும் Coffee table வடிவிலான புத்தகங்களே வரவேற்பறையில். கல்கி, சாண்டில்யன் முதலியோர் அறிமுகமானது பழைய பைண்டிங் புத்தகங்கள் மூலமே. சாண்டில்யன் ஏராளமாக எழுதியிருந்தார், நானும் அவரை ஏராளமாகப் படித்திருந்தேன். இன்று நான் நினைவில் வைத்திருப்பது யவனராணியை மட்டுமே. கல்கியை இப்போது நினைக்கையில் (என்னால் கல்கியை … Continue reading வரலாற்று நாவல்கள்:

திரில்லர் நாவல்கள்:

அம்புலிமாமா, காமிக்ஸ்க்குப் பிறகு நேரடியாக சமூகநாவலுக்கு வந்து விட்டேன்.வரதராசனார், நா.பா படித்து வளர்பவர்கள், பெரியவராகி, பத்தரைமாற்று தங்கமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். நான் பித்தளையாகக்கூட ஆகவில்லை. பின்னர் ஆரம்பித்தது தான் தமிழ்திரில்லர் படிப்பது. புஷ்பா தங்கதுரையின் திரில்லர் கூடப் படித்திருக்கிறேன். சுஜாதா தான் இந்த உலகத்தில் சிறந்த திரில்லர் எழுதுகிறார் என்று திடமாக நம்பிய காலமது. S.S.L.C முடித்த பிறகே Chaseல் ஆங்கில வாசிப்புத் தொடங்கியது. அநேகமாக எல்லா Chase booksம் படித்ததாக நினைவு. ஒரு கணக்கிற்குச் … Continue reading திரில்லர் நாவல்கள்:

சிறுகதைகள்

இணைய இதழ்களின் வளர்ச்சிக்குப் பிறகு, தமிழில் பெண்கள் எழுதுவது அதிகரித்திருக்கிறது. தேவியில், மங்கையர்மலரில் என் கதை வந்திருக்கிறது என்று உற்சாகம் கொப்பளிக்கும் குரல்கள் குறைந்து, அந்த இதழில் நான் எழுதிய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் என்று கேட்கும் குரல்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோருக்கும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. கூச்சம் காரணமாகப் பல கதைகள் சொல்லப்படாமல் போகின்றன. தமிழில் சொல்லப்பட வேண்டிய கதைகள் சொல்லப்படாமலும், எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆண்கள் இடைவிடாது கதைகளில் தொணதொணத்துக் கொண்டிருப்பதும் சமீபத்தில் … Continue reading சிறுகதைகள்

Rogue Banker -8:

Neighbour’s Envy, Owner’s Pride என்ற Onida விளம்பரம் போல், வங்கியின் விற்பனைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கில்லை. அப்போது, ஒன்றே போல் நிரந்தர வைப்பு, அதில் மாதவட்டி அல்லது கூட்டுவட்டி, மாதாந்திர சேமிப்பு ஆகியவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவை.பல தனியார் நிதி நிறுவனங்கள் 36% வட்டிக்கு பின்தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்து, பணத்தைச் சுருட்டிய காலகட்டத்தில், தனியார் வங்கிகள் குறித்த புரிதல் பொதுமக்களிடமில்லை. ICICI, UTI (now Axis) போன்ற பெரிய தனியார் வங்கிகள் தோன்றவேயில்லை. தனியார் வங்கிகளை … Continue reading Rogue Banker -8:

கால்பந்து

ராஜாவின் அம்மா மலையாளி. அப்பா தமிழ். இருவரும் மருத்துவர்கள். அனைவரும் உட்கார்வது, படிப்பது, படுப்பது எல்லாம் ஒரே ஹாலில் என்ற வீட்டில் வளர்ந்த என் போன்ற பலருக்கு, ராஜாவின் மொட்டை மாடியில் இருந்த தனியறை ஒரு ஆச்சரியம். வீட்டிலிருக்கும் தனியறையில் நினைத்தபொழுது புகைபிடிக்க முடியும் என்பது சுதந்திரத்தின் உச்சம். ஒரு சிகரெட் வாங்கி இருவர் அல்லது மூவர் பகிரும் பொருளாதாரச் சூழலில், ராஜா அவனுடைய அறையில் பாக்கெட் வாங்கி வைத்திருப்பான். ஆளுக்கொன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, அப்பா, … Continue reading கால்பந்து

காதலே காதலே!

கலா அக்கா எண்பதுகளில் நிச்சயமாக வித்தியாசமானவர். நண்பன் துரை அவரை அண்ணனின் காதலி என்று அடிக்கடி சொல்லியும் நான் பொருட்படுத்தவில்லை. அப்போதிருந்த ஆண்களில் தொண்ணூறு சதவீதம், பெண்கள் விஷயத்தில் பொய் சொல்வார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்கவே துரை என்னை கலா அக்கா வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.கலா அக்கா வீட்டில், அவர், அம்மா, தங்கை வசந்தி ஆக மொத்தம் மூன்றுபேர். துரையின் அண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் கலா அக்கா அவருடைய நிரந்தரக் காதலியாக இருக்கத் … Continue reading காதலே காதலே!

Rogue Banker -7:

இப்போது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அப்போது வங்கிகளில் வர்க்கபேதம் இருந்தது. எழுத்தர்களுடன் அலுவலர்கள் ஒன்றுசேர மாட்டார்கள். அலுவலரும் மேலாளரும் இருவருமே Scale II என்றாலும் மேலாளர் அலுவலரைத் தள்ளி வைப்பார். Hierarchy என்பது வங்கியில் இருந்தது, ஆனால் 4.59க்கு போட்டது போட்டபடி மூட்டையைக்கட்டும் ( காசாளரால் அது முடியாது) எழுத்தரையோ, சரி சரி என்று பணிவாகச் சொல்லிவிட்டு வேலையை முடிக்காத அலுவலரையோ மேலாளரால் ஒன்றும் செய்வதற்கில்லை. எந்த ஊருக்குப் புதிதாகச் சென்றாலும், உடனேயே அருகாமையில் உள்ள வேறு … Continue reading Rogue Banker -7:

Rogue Banker – 6.

வங்கியில் முதலாவது சேர்ந்தது நாகப்பட்டினம் கிளையில். சேர்ந்து மூன்றாவது நாள் தான் தெரிந்தது, கிளையில் மூன்று பேச்சிலர்கள் ஒரேயிடத்தில் மதிய உணவுக்கு செல்வது. நானும் உங்களுடன் வருகிறேன் என்றதும், அவர்கள் முகத்தில் தயக்கம். அதில் ஒருவர் சற்றுநேரத்தில் சுதாரித்துக் கொண்டு, சரி வாருங்கள், ஆனால் முதல்நாள் நாங்கள் பேசுகிறோம், நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என்றார். பழைய, சிறிய வீட்டின் கூடமது. நெருக்கி உட்கார்ந்தால் நான்கு பேர் ஒருபுறம், மீதி நான்கு மறுபுறம் என எட்டுபேர் ஒரே … Continue reading Rogue Banker – 6.

Rogue Banker – 5

வங்கியில் கடனுக்கு ஜாமீன் (Guarantee) இடுபவர்கள் பெரும்பாலும் நம்புவது, கடனாளியிடம் பணம் இல்லாது போனால் தான் நம்மிடம் வருவார்கள் என்பது. கடனாளி கடனைக் கட்டவில்லை என்றால் இருவருமே பொறுப்பு. ஒருவேளை வங்கி கடனாளியை அணுகாமலேயே ஜாமீன் போட்டவரைக் கட்டச் சொல்லலாம். அவனிடம் கேட்காமலேயே என்னிடம் எப்படி வரமுடியும் என்று வங்கியைக் கேட்க முடியாது. வங்கி எப்போதும் யார் Vulnerable என்றே பார்க்கும். எண்பதுகளில் பெரும்பாலான வங்கிப் பயிற்சிக் கல்லூரிகளில் சொல்லப்படும் கேஸ் ஒன்று உண்டு. புகழ்பெற்ற கிரிக்கெட் … Continue reading Rogue Banker – 5

Rogue Banker – 4:

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊரை மாற்றிக் கொண்டே இருப்பதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு நடுவே மற்றுமொரு பிரச்சனை, புதிதாகச் சேரும் கிளையில் அங்கிருப்பவர்களின் நம்பிக்கையைப் பெறுவது. மேலாளராகக் கிளையில் எந்நேரமும் இருப்பது சாத்தியமில்லை. சில விஷயங்களை நான் ஒப்புக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். வேற்று மாநிலங்களில் பணியாற்றுகையில் அவர்களில் ஒருவனாவது இன்னும் சிரமம். நான் சேர்ந்த முதல்நாளிலேயே சொல்வது அலுவலகம் என்றில்லை உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூடச் … Continue reading Rogue Banker – 4: