Singular

மோகனாவிற்கு என் வயதே இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவளுக்கு பதினெட்டு ஆகிவிட்டது என்றாள். என்னை விட மூன்று வயது அதிகம். என்றாலும் பெயர்சொல்லிக் கூப்பிட்டு, போ,வா என்றே தொடர்ந்தேன். காலனியில் நூறு வீடுகளுக்கு மேல் இருந்தது. இரண்டு மூன்று வயது வித்தியாசத்தை அப்போது நாங்கள் பொருட்படுத்தியதில்லை. ஆறேழு வருடங்கள் இருந்தால் அக்கா, அண்ணன், பன்னிரண்டு, பதினைந்து வயது கூடுதல் என்றால் மாமி, மாமா என்று வாழ்க்கை மிக எளிமை. இரட்டை ஜடை போட்டுக் கொண்டு, மணமாகிப் … Continue reading Singular

பெண்ணுடல்

Kawakamiன் 'All the Lovers in the Night' நாவலில் பள்ளி இறுதியில் படிக்கும் பெண், உடன் படிக்கும் பையன் அழைத்தான் என்று அவன் வீட்டுக்குச் செல்கிறாள். சிறியதான அவனுடைய அறையில், அருகருகே அமர்ந்திருக்கையில், வாயிலிருந்து துர்கந்தம் அவனுடையதா இல்லை தன்னுடையதா என்பது தெரியவில்லை என்று யோசிக்கிறாள். மேலே விழுந்து அவளைக் கீழே தள்ளுகிறான். இவளுக்கு அதை எப்படி எதிர்கொள்வது தெரியவில்லை. மெல்லிய Noவை அவன் கண்டுகொள்வதேயில்லை. இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் தமிழில் ஒரு கதையைப் … Continue reading பெண்ணுடல்

வாசிப்பு ஒரு அனுபவம்

ஒரே இடத்தில் பிறந்து, வளர்வது நாம் பிரமிப்பாகப் பார்த்த விஷயங்கள் எவ்வளவு சாதாரணமானவை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்கிறது.மூன்றாம் வகுப்பு சாரை நான் கல்லூரிக்கு செல்கையில் பார்த்துப் பேசியபோது அவர் மூன்றாம் வகுப்பிலேயே இருந்தது தெரிந்தது. பத்துவயதுக் குழந்தையை ஐந்து வருடம் கழித்துப் பார்க்கையில் உடல்வளர்ச்சி கண்டு வியக்கிறோம். ஆனால் அறிவு வளர்ச்சி அவ்வளவு வெளிப்படையாகப் பார்த்த உடனே தெரிவதில்லை. வாசிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் படிக்க அடிப்படை ஆங்கில அறிவு … Continue reading வாசிப்பு ஒரு அனுபவம்

காலம் வகுத்த கணக்கு

அரசரடி மைதானத்தில், கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகாலைப் பொழுதுகள் தொடர் காப்பிகளிலும், புகைபிடித்தலிலும் கழியும்.ரோனி போன்ற நண்பர்கள் இரண்டும் செய்வதில்லை. மைதானத்தை மூன்று நான்கு முறைகள் சுற்றி வந்து, வேர்வையும், சோர்வும் வடிய அரைச்சுவரின் மேல் சாய்ந்து அமர்வார்கள். ரோனிக்கு ஏழெட்டு வருடக் காதல் இருந்தது. எங்களில் முதலாவதாக அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. காதலித்த பெண்ணை மணமுடித்து அடுத்த வருடம் பிறந்த பெண் குழந்தைக்குத் தனக்கு மிகவும் பிடித்த டென்னிஸ் வீராங்களையின் பெயருமிட்டான். பதவி உயர்வுக்குப் … Continue reading காலம் வகுத்த கணக்கு

தாம்பத்யம் ஒரு…..

"இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே" என்பது போன்ற பாடல்களைக் கேட்டுப் பதின்மவயதில் நான் கொண்ட கற்பிதமே வேறு. காதலும், காமமும் தமிழர்கள் அதிகமாகப் புனிதப்படுத்திய விஷயங்கள். அடைய முடியாதவர்களின் மீதான ஏக்கத்தை நாம் உயிர்காதல் என்ற உருக்கொடுத்து பீடத்தில் அமர்த்தி வைக்கிறோம். வருவோர் போவோர் எல்லாம் அதை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். உலகத்திலேயே மிக மோசமான கெட்ட வார்த்தை இந்த Soulmate என்ற வார்த்தை. தினமும் காலையில் நீங்கள் பல்துலக்கியதும், உங்களுக்கு … Continue reading தாம்பத்யம் ஒரு…..

மணமும் குணமும் மாறாது

சின்ன வயதில் கேட்ட, பிச்சைக்காரன் வரமாகத் தங்கத் திருவோடு விரும்பிய கதை முழுக்கவே சொல்லியவரின் கற்பனையாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அது அடிப்படை உண்மை ஒன்றைச் சொல்கிறது.படித்த திருடனுக்கும் படிக்காதவனுக்கும் செயல்முறைகள் வேறு, எனில் செய்வது கடைசியில் திருட்டாகத் தான் இருக்கும். அதிக நூல்களை வாசித்தவர்கள் பண்பாளர்கள் என்ற நம்பிக்கை ஒரு மாயை. அவர்களால் மற்றவர்களை விட எளிதாக முகமூடிகளை மாற்றிக் கொள்ள முடியும். பெண்கள் உருகிஉருகி காதல் பண்ணும், கேள்விகள் நிறையக் கேட்கும் கதைகளை எழுதிய எழுத்தாளர் … Continue reading மணமும் குணமும் மாறாது

21-ம் நூற்றாண்டின் உலக இலக்கியம்,ஒரு கைப்பிடி:

நன்றி இந்து தமிழ் திசை: உலக இலக்கியம் என்பது மகா சமுத்திரம். ஒரு மனித ஆயுள் என்பது அதற்குமுன் ஒரு நாழிகை. உலக இலக்கியத்தின் வாசகர்கள் எல்லோரும், எவ்வளவு வேகமாக வாசித்தாலும், எவ்வளவு தேர்ந்தெடுத்துப் படித்தாலும், தான் வாசித்ததை விட, பலமடங்கு நூல்களை வாசிக்க முடியாத வருத்தத்தை மனதிலிறுத்திக்கொண்டே இறுதி மூச்சை நிறுத்தப்போகிறார்கள். 21-ம் நூற்றாண்டு உலக இலக்கியத்தை ஒரு கட்டுரையில் கொண்டுவர முடியாது. கங்கையில் சேந்திய நீர், கங்கையைக் கொண்டுவந்தோம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதுபோல இது … Continue reading 21-ம் நூற்றாண்டின் உலக இலக்கியம்,ஒரு கைப்பிடி:

மொழிபெயர்ப்பு

Jhumpa Lahiri நிலஞ்சனா என்று பெயரிடப்பட்ட, பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த பெண். மூன்று வயதில்அமெரிக்கா சென்றவர், தன்னை முழு அமெரிக்கனாகக் கருதிய இவர்முப்பத்து நான்காவது வயதில் நடந்த திருமணத்திற்குப்பின் ரோமில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார். இத்தாலி மொழியைக் கற்று அதிலேயே ஒரு நூல் எழுதியிருக்கிறார். இத்தாலியர்கள் இவரை தம் தேசத்தவர் என்று அமெரிக்கர்கள் போலவே கொண்டாடுகிறார்கள். இத்தாலியில் எழுதப்பட்ட நூலை இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் கூறியது தான் இந்தப் பதிவை எழுத வைக்கின்றது. " இத்தாலிய மொழியில் யோசித்து … Continue reading மொழிபெயர்ப்பு

சமயமது மோசமானால்…..

"இன்று அவனுக்கு காலையிலேயே பயங்கர மூட் அவுட், நான் பயந்துகிட்டு சாப்பிட்டாயா என்று கூட கேட்கவில்லை" என்றார் அந்த அம்மா. வேலையில் வரும் பிரச்சனையை எப்படி வீட்டில் காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வீடு ஒரு CD, அலுவல் மற்றொரு CD. ஒரே நேரத்தில் இரண்டையும் சுழல வைக்க முடியாது. 2000ல் 70 கோடி என்பது பெரிய கடன். கடன் பத்திரங்களில் அடமானச்சொத்துப் பத்திரங்கள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். EM பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. … Continue reading சமயமது மோசமானால்…..

எழுத்து

Beta Readerஆக சிலகாலம் இருந்தேன். பெயர்க்குழப்பம், தகவல் குழப்பம், சம்பவங்களில் முரண்பாடு போன்றவற்றை கண்டுபிடித்துச் சொன்னால், உடனே திருத்தி விடுவார்கள். ஆங்கில நூல்கள் பெரும்பாலும் ஆய்வுக்குப்பிறகே எழுதப்படுவதால், அதிகம் குறைகள் இருக்காது. வேறு ஏதேனும் கருத்து சொன்னால், ஆசிரியருக்கு விருப்பமிருந்தால் செய்வார்கள், இல்லை இப்படியே இருக்கட்டும் என முடிவு செய்வார்கள். அத்துடன் அந்த நூலுக்கும் நமக்குமான தொடர்பு முடிந்தது. தமிழிலும் எழுத்தாளர்கள் அவர்களுக்கு நம்பிக்கைக்கு உகந்தவர்களிடம் நூலை அனுப்பிக் கருத்து கேட்பதுண்டு. ஆனால் அது சிறிய வட்டம். … Continue reading எழுத்து