விஷ்ணு சகஸ்ரநாமம்

விஜி என்ற விஜயாவை அவன் சந்தித்ததே ஒரு விபத்து. இருவரும் எட்டாவது படித்துக் கொண்டிருக்கக் கூடும். காலனியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை படித்து, திருப்பாவையும், பாவையும் பள்ளி எழுச்சியும் என்ற இரண்டு புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார்கள் என்றே போனான் அவன். விஜி இனம்புரியாத சோகம் ததும்பிய முகம். எப்போதும் கடவுள் வாழ்த்துக்கு அவள் தான். அந்த நேரத்தில் மட்டும் அவள் முகம் ஜெனிலியா போல் மாறிவிடும். அன்று அவன் நுழைந்த போது அவள் மட்டும் தான். அவன் … Continue reading விஷ்ணு சகஸ்ரநாமம்

தமிழ் இலக்கியம்

Tomb of Sand அமெரிக்காவிலும் வெளியாகப்போகிறது. உலகத்தின் மிகப்பெரிய மார்க்கெட் அது. உண்மையில் கீதாஞ்சலிக்கு நிறையவே அதிருஷ்டம் இருக்கின்றது. பழகிய துணையை விடப் பக்கத்துவீடு அழகாக இருப்பது போன்ற பொதுமனப்பான்மைகளைக் களைந்து பார்த்தாலும், மீதி ஐந்து நாவல்களும் அதிக நுட்பம் வாய்ந்தவை. ஒரு இந்தியநாவல் உலகின் முக்கிய பரிசை வாங்கும் பொழுது, ஒரு இந்தியனாக மகிழ்வது நம் கடமை. நிறைசூலியின் நடையை விமர்சனம் செய்வது போல ஆகும், நம் நாட்டிற்குக் கிடைத்த பெருமையைக் குலைக்கும் செயலில் இறங்குவது. … Continue reading தமிழ் இலக்கியம்

Staring

காலனியில் லட்சா என்ற லட்சுமணனின் வீட்டின் முன் பேசிக் கொண்டிருக்கையில், தற்செயலாகத் திரும்பிய போது, விஜி வீட்டு ஜன்னல் திரை சட்டென்று இழுத்துவிட்டது போல் ஒரு உணர்வு. அத்துடன் அதை மறந்து விட்டேன்.பத்து நாட்கள் கழித்து எதிர்பார்த்திருந்ததால், அதே நிகழ்வு மறுபடியும் நடந்த பின் அது என் கற்பனையல்ல என்பது புரிந்துவிட்டது. விஜி என்னிடம் நேரடியாகவே பேசுபவள். எதற்காக இப்படி செய்ய வேண்டும்? பள்ளி, கல்லூரி, மணமுடித்துக் கிட்டத்தட்ட நாற்பது வயது வரையிலும் அழகான பெண்களை உற்றுப்பார்க்கும் … Continue reading Staring

வாசித்தல்

அட்வுட், அகதா கிறிஸ்டி போன்ற மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே வாசிப்பவரில் 89% பெண்கள், 11% ஆண்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மேலைநாடுகளில் அதிகம் வாசிப்பது பெண்களே என்று பல புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே பதினோரு சதவீத ஆண்களே படிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெண்கள் எழுதுவதைப் பெரும்பாலான ஆண்கள் படிக்க விரும்புவதில்லை என்ற முடிவிற்கே வரவேண்டியதாகிறது. அதேவேளையில் பெண்கள் எழுத்தாளரின் பாலினம் பார்த்துப் படிப்பதில்லை என்பதும் உறுதியாகிறது. மேலைநாடுகளில் ஆண்கள் பெண்கள் … Continue reading வாசித்தல்

நாவல்

நாவல் எழுதுவது எப்படி என்று MFA போல் நமக்கு பயிற்றுவிக்கும் அமைப்புகள் இல்லை. இருக்கும் கல்லூரிகள் Fine arts கற்பித்தாலும் அதிலிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இங்கே சொல்லித் தருகிறேன் என்று வருபவர்களுக்கே, சொல்லித் தர வேண்டியது ஏராளமாக இருக்கிறது. Chimamanda Adichie போன்றவர்கள் எழுத்தாளர் பட்டறைகள் நடத்துகிறார்கள். அவை போன்றவைவளரும் எழுத்தாளர் தன் திறமையைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவலாம். ஆனால்எழுத்து என்பது ஒருவரின் உள்ளிருந்து வருவது, அதை யாரும் உருவாக்க முடியாது. முதலில் Idea … Continue reading நாவல்

வேடிக்கை பார்ப்போரின் சந்தை

மோகனின் பயணங்கள் முடிவதில்லை வந்த போது, சிவாஜி எல்லாம் நடிப்பில் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று சொல்லியே படம் பார்க்க நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள். மோகன் நாலு படங்கள் தாங்க மாட்டார் என்று நான் நினைத்தேன். இருதரப்புக் கணிப்பையும் காலம் பொய் என்று சொன்னது. மைக் மோகன் என்றால் மட்டுமே அவரை இன்று பலருக்குத் தெரியும். விஜயகுமார், கமலஹாசன் இருவரையும் வைத்து, கமலஹாசன் காணாமல் போவார் என ஆருடம் சொன்னார்கள் என்று R P ராஜநாயஹம் … Continue reading வேடிக்கை பார்ப்போரின் சந்தை

Singular

மோகனாவிற்கு என் வயதே இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவளுக்கு பதினெட்டு ஆகிவிட்டது என்றாள். என்னை விட மூன்று வயது அதிகம். என்றாலும் பெயர்சொல்லிக் கூப்பிட்டு, போ,வா என்றே தொடர்ந்தேன். காலனியில் நூறு வீடுகளுக்கு மேல் இருந்தது. இரண்டு மூன்று வயது வித்தியாசத்தை அப்போது நாங்கள் பொருட்படுத்தியதில்லை. ஆறேழு வருடங்கள் இருந்தால் அக்கா, அண்ணன், பன்னிரண்டு, பதினைந்து வயது கூடுதல் என்றால் மாமி, மாமா என்று வாழ்க்கை மிக எளிமை. இரட்டை ஜடை போட்டுக் கொண்டு, மணமாகிப் … Continue reading Singular

பெண்ணுடல்

Kawakamiன் 'All the Lovers in the Night' நாவலில் பள்ளி இறுதியில் படிக்கும் பெண், உடன் படிக்கும் பையன் அழைத்தான் என்று அவன் வீட்டுக்குச் செல்கிறாள். சிறியதான அவனுடைய அறையில், அருகருகே அமர்ந்திருக்கையில், வாயிலிருந்து துர்கந்தம் அவனுடையதா இல்லை தன்னுடையதா என்பது தெரியவில்லை என்று யோசிக்கிறாள். மேலே விழுந்து அவளைக் கீழே தள்ளுகிறான். இவளுக்கு அதை எப்படி எதிர்கொள்வது தெரியவில்லை. மெல்லிய Noவை அவன் கண்டுகொள்வதேயில்லை. இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் தமிழில் ஒரு கதையைப் … Continue reading பெண்ணுடல்

வாசிப்பு ஒரு அனுபவம்

ஒரே இடத்தில் பிறந்து, வளர்வது நாம் பிரமிப்பாகப் பார்த்த விஷயங்கள் எவ்வளவு சாதாரணமானவை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்கிறது.மூன்றாம் வகுப்பு சாரை நான் கல்லூரிக்கு செல்கையில் பார்த்துப் பேசியபோது அவர் மூன்றாம் வகுப்பிலேயே இருந்தது தெரிந்தது. பத்துவயதுக் குழந்தையை ஐந்து வருடம் கழித்துப் பார்க்கையில் உடல்வளர்ச்சி கண்டு வியக்கிறோம். ஆனால் அறிவு வளர்ச்சி அவ்வளவு வெளிப்படையாகப் பார்த்த உடனே தெரிவதில்லை. வாசிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் படிக்க அடிப்படை ஆங்கில அறிவு … Continue reading வாசிப்பு ஒரு அனுபவம்

காலம் வகுத்த கணக்கு

அரசரடி மைதானத்தில், கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகாலைப் பொழுதுகள் தொடர் காப்பிகளிலும், புகைபிடித்தலிலும் கழியும்.ரோனி போன்ற நண்பர்கள் இரண்டும் செய்வதில்லை. மைதானத்தை மூன்று நான்கு முறைகள் சுற்றி வந்து, வேர்வையும், சோர்வும் வடிய அரைச்சுவரின் மேல் சாய்ந்து அமர்வார்கள். ரோனிக்கு ஏழெட்டு வருடக் காதல் இருந்தது. எங்களில் முதலாவதாக அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. காதலித்த பெண்ணை மணமுடித்து அடுத்த வருடம் பிறந்த பெண் குழந்தைக்குத் தனக்கு மிகவும் பிடித்த டென்னிஸ் வீராங்களையின் பெயருமிட்டான். பதவி உயர்வுக்குப் … Continue reading காலம் வகுத்த கணக்கு