யாத்திரை – ஆர்.என். ஜோ டி குருஸ்:

ஆசிரியர் குறிப்பு: நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்தவர். எம்ஃபில் பட்டம் பெற்றவர். வணிகக் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவரது முதல்நாவல் ஆழி சூழ் உலகு வாசிக்காத இலக்கிய வாசகர்கள் குறைவு. அடுத்த நாவலான கொற்கை சாகித்ய அகாதமி விருது பெற்றது. இது சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல். மீண்டும் ஒரு கடற்கரையூரின் கதை. சிறுவனின் பார்வையில் விரியும் கதை அவன் வளர்ந்து பெரியவனாகும்வரைத்தொடர்கிறது. அவனுக்கு விடை தெரியாது ஆயிரம் கேள்விகள். குடிக்க நீரின்றி, பசிக்கு … Continue reading யாத்திரை – ஆர்.என். ஜோ டி குருஸ்:

தன்னெஞ்சறிவது….

"மீனாட்சி அம்மன் கோவிலில் தான் வழக்கமாக வெள்ளிக்கிழமை மாலை சந்திப்போம். போனமுறை பொற்றாமரை குளப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்த போது, குனிவது போல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டேன்" என்றான் அவன். அது சொந்தமாக டெலிபோன், விரல்விட்டு எண்ணும் வீடுகள் வைத்திருந்த காலம். STD கிடையாது. டிரங்கால் தான் பேச வேண்டும். அடுத்த வெள்ளி நான்கு நண்பர்கள் போய் காத்திருந்தார்கள். குளம் இருந்தது. ஆட்கள் வந்தார்கள். போனார்கள். அவனும் வரவில்லை. அவளும் வரவில்லை. மறுநாள் அவன் ஆரம்பிக்கக் காத்திருந்தோம். … Continue reading தன்னெஞ்சறிவது….

யாருக்கு நோபல்

சென்ற வருடத்தில் நோபல் பரிசு இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டதும் உலகெங்கிலுமிருந்து ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள். அதற்கு முன்பே கூட யாருக்கும் தெரியாத, யாராலும் யூகிக்கமுடியாத எழுத்தாளர்களை நோபல் கமிட்டி தேடிக் கண்டுபிடிப்பதாக பேசப்பட்டது. புக்கர் ஓரிரவில் எழுத்தாளரின் வாழ்க்கையை, அவர்களின் நூல்களின் விற்பனையை மாற்றுகிறது. நோபல் இன்று பெருங்காய டப்பாவாக இருக்கிறது. Louise Glückஐ நோபலுக்குப் பிறகு எத்தனை பேர் படித்தார்கள்? இன்றைக்கு இந்தியாவில், அவர்கள் ராஜகுடும்பம் என்று சொல்வது போல Nobel Laurette என்பது. Louise Erdrich … Continue reading யாருக்கு நோபல்

Bewilderment – Richard Powers: 13/13

ரிச்சர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன அறிவியலையும் புனைவையும் கலந்து எழுதுபவர். இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதியுள்ளார். புலிட்சர் பரிசை 2019ல் வென்றவர். புக்கர் பட்டியலுக்கு இவர் வருவது மூன்றாவது முறை. இந்த நாவல் புக்கரின் இறுதிப் பட்டியலுக்கும், National book awardன் முதல் பட்டியலுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்துள்ளது. தியோ வேறு கிரகங்களில் இருக்கும் கனிமங்களையும், உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வுசெய்யும் விஞ்ஞானி. அவனது பன்னிரண்டு வருட காதல் மனைவி அவனையும், ஏழுவயது மகனையும் … Continue reading Bewilderment – Richard Powers: 13/13

பதாகை அக்டோபர் 2021 சிறுகதைகள் :

வழிகாட்டி - உஷாதீபன்: இது ஒரு நல்ல கரு. வங்கியில் மனிதவளத்துறையில் தலைவராகக் கொடிகட்டிப் பறந்தவர் ஓய்வுபெற்று சில நாட்களில் ஒரு கிளைக்குப் போனதும் வெளியில் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். சந்திப்பில் ஓய்வுபெற்ற உயரதிகாரி தன்னடக்கமாகப் பேசுவதும், கீழ் வேலைபார்த்தவர்கள் அளவுக்கு மீறிப் புகழ்ந்து இப்போது ஒன்றும் சரியில்லை என்பதும் இயல்பாக வந்திருக்கிறது. ஆனால் மாமி இரண்டாயிரம் ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டு அமர்க்களமாக இருக்கையில் கதை முடியுமுன் கொல்வது நியாயம் தானா? https://padhaakai.com/2021/10/04/guide/ தாயம் - வேல்விழி … Continue reading பதாகை அக்டோபர் 2021 சிறுகதைகள் :

Madurai Days – Subramanian:

நெல்லையில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையில் முடித்தவர். ஆசிரியர். ஏற்கனவே இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இவரது மதுரை நினைவுகள் குறித்த கட்டுரை நூல். மதுரை என் முதல் கால்நூற்றாண்டின் நினைவுகளின் பேழை. எல்லா முதலும் அங்கே தான். எண்பதுகள், தொன்னூறுகளின் மதுரையைப் பற்றியே ஆசிரியர் எழுதியிருக்கிறார். தொன்னூறுகளின் மதுரை நான் அறியாதது. சித்திரை மாதம் அழகர் திருவிழா, மதுரை மக்களின் திருவிழா. பிற மதத்தினரும் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் பண்டிகை.அக்கம் … Continue reading Madurai Days – Subramanian:

வனம் அக்டோபர் 2021- இதழ் 8 சிறுகதைகள்:

காப்பு - பா. திருச்செந்தாழை: வழக்கம் போல் திருச்செந்தாழையின் கதையில் கரைந்தேன். மொழிநடையின் வசீகரம் ஒரு கையையும், கதை இன்னொரு கையையும் இழுக்கத் திணறிப்போனேன்.எவ்வளவு நுணுக்கமாக இவரால் கதை எழுத முடிகிறது! வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டுபெண்களின் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி. ஒரு கதாபாத்திரத்தை நல்லவிதமாகச் சொல்லி பின் அந்த பிம்பத்தை உடைப்பது பலரும் செய்தது, ஆனால் கடைசிப்பத்தி தூக்கிவாரிப் போடவைத்தது. திருச்செந்தாழை நிதானம் நிதானம் என்று பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் இதை உண்மையில் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. … Continue reading வனம் அக்டோபர் 2021- இதழ் 8 சிறுகதைகள்:

1232 KM – A Long Journey Home – Vinod Kapri:

வினோத் தேசிய மற்றும் உலக திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய திரைப்படங்களை எடுத்தவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன் இருபத்தி மூன்று வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தவர். இந்த நூல் சமீபத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தைப் பற்றியது. Ghaziabadல் இருந்து பீகாரின் கிராமத்திற்கு தூரம் கூகுள் மேப்பின்படி 1232 கி.மீ. 24/3/2020 திடீரென அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து சொந்த ஊருக்குப் பயணத்தை மேற்கொண்ட, ஏழு இளைஞர்களைக் காரில் தொடர்ந்து, ஆசிரியர் ஏழுநாள் பயணத்தின் நிகழ்வுகளைத் தொகுத்ததே இந்தநூல்.வீட்டுவேலை செய்பவரின் … Continue reading 1232 KM – A Long Journey Home – Vinod Kapri:

காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்:

தீயணைப்பு- சித்துராஜ் பொன்ராஜ்: "நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்றார் லா.ச.ரா. சித்துராஜின் விவரணையில் அக்னி ஆக்ரோஷமாக எழுப்பும் சத்தமும் கேட்கிறது. ஒரு நிகழ்வு+ ஒரு சபலம்+.ஒரு பயந்தாங்கொள்ளி, இது தான் இந்தக் கதை. சித்துராஜின் கதையில் அனாவசியமான சொல் என்பதே இல்லை. கறுப்புப்புகை பூச்சியாய் மாறுவது, இரவுச்சந்தை குறித்த இடம் என்று மொழிநடையும் கூர்மையாக வந்திருக்கிறது. கதையின் எந்த இடத்திலும் நிதர்சனப் பார்வையை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. எனக்கென்னவோ விமானப் … Continue reading காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்: