தமிழ் இலக்கியம்

Tomb of Sand அமெரிக்காவிலும் வெளியாகப்போகிறது. உலகத்தின் மிகப்பெரிய மார்க்கெட் அது. உண்மையில் கீதாஞ்சலிக்கு நிறையவே அதிருஷ்டம் இருக்கின்றது. பழகிய துணையை விடப் பக்கத்துவீடு அழகாக இருப்பது போன்ற பொதுமனப்பான்மைகளைக் களைந்து பார்த்தாலும், மீதி ஐந்து நாவல்களும் அதிக நுட்பம் வாய்ந்தவை. ஒரு இந்தியநாவல் உலகின் முக்கிய பரிசை வாங்கும் பொழுது, ஒரு இந்தியனாக மகிழ்வது நம் கடமை. நிறைசூலியின் நடையை விமர்சனம் செய்வது போல ஆகும், நம் நாட்டிற்குக் கிடைத்த பெருமையைக் குலைக்கும் செயலில் இறங்குவது. … Continue reading தமிழ் இலக்கியம்

சிந்துவெளி நாகரீகம் – இரவிச்சந்திரன்:

பெங்களூர் இரவிச்சந்திரன் பெயரை எண்பதுகளின் மத்தியில் கேள்விப்பட்டேன். தோழர் R P ராஜநாயஹம் இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்கக் கொடுத்தார். நாங்கள் தமிழில் தீவிர இலக்கியத்தைத் தவிர மற்றவற்றைக் கரப்பானைப் போல் ஒதுக்கிய காலமது. தோழர் அவரது உறவினர் ஒருவரின் பலத்த சிபாரிசில் இவரது நூல்களை வாங்கினார். இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரும் எல்லாத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கே என்றதும், சுஜாதா அதற்கான முன்னுரையில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் , தன்னுடைய காதலன் யார் என்பதை … Continue reading சிந்துவெளி நாகரீகம் – இரவிச்சந்திரன்:

Sparring Partners – John Grisham

அமெரிக்க எழுத்தாளர். வழக்கறிஞர். Legal thrillerகளை Courtroom Dramasஉடன் அதிகமாக எழுதியவர். உலகில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவருடையதும் உண்டு. 300 மில்லியனுக்கு மேல் இவரது புத்தகங்களின் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன. இது மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு, 31 மே 2022ல் வெளியாகியது. “God still loves you, Cody.” “Well, he sure has a strange way of proving it. What did I do to deserve this?” “He … Continue reading Sparring Partners – John Grisham

வாசகர்களுடன் ஒரு புனைவு விளையாட்டு;

நன்றி இந்து தமிழ் திசை தூயனின் முதல் தொகுப்பான இருமுனை பரிட்சார்த்தமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஐந்து வருடங்கள் இடைவெளி விட்டு வந்த கதீட்ரல் என்ற நாவல் தொன்மத்தையும், நிகழ்காலத்தையும் ஃபான்டஸியின் கூறுகள் இணைத்து எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவரும் இந்த நூல் மூன்று சிறுகதைகளையும், மூன்று குறுநாவல்களையும் கொண்ட தொகுப்பு. தலைப்புக்கதை, தெரிவதும் பின் மறைவதுமான ஒரு விளையாட்டு. அல்லது கதையில் சொல்வது போல் வாழ்க்கையில் தற்செயல்கள் எல்லாமே மேஜிக் தான். ஒரு பெரிய எலி மனதில் … Continue reading வாசகர்களுடன் ஒரு புனைவு விளையாட்டு;

Sorrow and Bliss by Meg Mason: Women Ficton Award 2022 Shortlist 2/6

Meg Mason நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். பத்திரிகையாளராக ஆரம்பித்து, இரண்டு சுயசரிதை நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான இந்த நூல், ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பை பெற்று, உலகின் பிற பகுதிகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது WFA இறுதிப்பட்டியலின் ஆறு நாவல்களில் ஒன்று. Snippet from the book:"Martha, no marriage makes sense. Especially not to the outside world. A marriage is its own world. We were dysfunctional. … Continue reading Sorrow and Bliss by Meg Mason: Women Ficton Award 2022 Shortlist 2/6

காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:

அவுரி - சத்யஜித்ரே- தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி: இந்தக்கதையை ஏற்கனவே தமிழில் படித்த நினைவிருக்கிறது. சத்யஜித் ரேயின் Horror stories, Poeவின் Styleல், ஆனால் இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். பெங்காலிகள் யாராக இருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் தாகூரை சிலாகிக்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் உலக அளவில் அவர் புகழ்பெற முடிந்தது. இந்தக் கதையின் ஒரு பகுதி Pure Horror. ஒரு மாளிகையில் தங்கியவுடன், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயனின் கடைசிநாட்களை revisit செய்ய … Continue reading காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:

ஆவநாழி இதழ் 12- ஜூன்- ஜூலை 2022 சிறுகதைகள்:

வானத்தின் பெயர் தான் வானம் - பிரபு தர்மராஜ்: தமிழ்க்கதைகள் உலகம் முழுக்கப் பறக்கின்றன. இதில் சிங்கப்பூர். ஆனால் சித்துராஜ், ஹேமா,லதா, ரமா போன்றவர்கள்காட்டும் சிங்கப்பூர் அல்ல இது. 12 சிங்கப்பூர் டாலர் செலவில் (இந்தியாவில் India kings Gold richன் விலையையே எடுத்துக் கொண்டு இன்றைய சிங்கப்பூர் டாலர் விலைக்கு மாற்றி இருக்கிறேன். சிங்கப்பூரில் India Kings பாக்கெட் பத்து டாலர் என்றால் இந்தக் கணக்கு தவறு). பெண்கள் சிங்கப்பூரில் மலிவாகக் கிடைக்கிறார்களாம். மன்டோவின் விபச்சாரிகளை … Continue reading ஆவநாழி இதழ் 12- ஜூன்- ஜூலை 2022 சிறுகதைகள்:

Staring

காலனியில் லட்சா என்ற லட்சுமணனின் வீட்டின் முன் பேசிக் கொண்டிருக்கையில், தற்செயலாகத் திரும்பிய போது, விஜி வீட்டு ஜன்னல் திரை சட்டென்று இழுத்துவிட்டது போல் ஒரு உணர்வு. அத்துடன் அதை மறந்து விட்டேன்.பத்து நாட்கள் கழித்து எதிர்பார்த்திருந்ததால், அதே நிகழ்வு மறுபடியும் நடந்த பின் அது என் கற்பனையல்ல என்பது புரிந்துவிட்டது. விஜி என்னிடம் நேரடியாகவே பேசுபவள். எதற்காக இப்படி செய்ய வேண்டும்? பள்ளி, கல்லூரி, மணமுடித்துக் கிட்டத்தட்ட நாற்பது வயது வரையிலும் அழகான பெண்களை உற்றுப்பார்க்கும் … Continue reading Staring

வாசித்தல்

அட்வுட், அகதா கிறிஸ்டி போன்ற மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே வாசிப்பவரில் 89% பெண்கள், 11% ஆண்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மேலைநாடுகளில் அதிகம் வாசிப்பது பெண்களே என்று பல புள்ளிவிவரங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களையே பதினோரு சதவீத ஆண்களே படிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெண்கள் எழுதுவதைப் பெரும்பாலான ஆண்கள் படிக்க விரும்புவதில்லை என்ற முடிவிற்கே வரவேண்டியதாகிறது. அதேவேளையில் பெண்கள் எழுத்தாளரின் பாலினம் பார்த்துப் படிப்பதில்லை என்பதும் உறுதியாகிறது. மேலைநாடுகளில் ஆண்கள் பெண்கள் … Continue reading வாசித்தல்

புக்கர் இன்டர்னேஷனல் 2022

புக்கரின் இரு விருதுகளில் புக்கர் இன்டர்னேஷனல் கூடுதல் சிறப்பு. உலகெங்கிலும் இருந்து பல நாடுகளில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் போட்டிக்கு வருவதே முக்கிய காரணம். இம்முறை இந்தி மூலத்தில் இருந்து முதல்முறையாக புக்கர் பட்டியலில் ஒரு நூல் இடம்பெற்று, விருதையும் வென்றுவிட்டது. நான்கு கண்டங்களில், பன்னிரண்டு நாடுகளில் இருந்து, பதினோரு மொழிகளில் எழுதப்பட்ட பதிமூன்று நூல்கள் இவை. இறுதிப்பட்டியல்: 1.Tomb of Sand - Geethanjali Shree- கீதாஞ்சலி மணிப்பூரியில் பிறந்து உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். … Continue reading புக்கர் இன்டர்னேஷனல் 2022