நகரங்கள் பெரும்பாலும் முதல் பார்வையில் எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதில்லை.சிலகாலம் அங்கேயே வாழ்ந்த பிறகு தான் அது உருவாகுகிறது. ஆனால் நுவரெலியாவைப் பார்த்த உடனேயே காதல் கொண்டேன். நுவரெலியா, வணிகமயமாக்கப்படாத கொடைக்கானல். சீதா எலிய கோவில் என்பது சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்று நம்பப்படுகிறது. உலகிலேயே சீதைக்கு இருக்கும் கோவில் இதுவே. மிதிலையிலோ, அயோத்தியிலோ எங்குமே சீதாவிற்குக் கோவிலில்லை. நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்று காதல் பேசிய மனைவிக்கு, வனத்திற்கு அவன் பொருட்டு வந்து கடத்தப்பட்ட மனைவிக்கு, எந்த … Continue reading இலங்கைப் பயணம்-6
கல்கத்தா நாட்கள் பெண்ணுடன் ஒரு நாள்:
நான் கண்டி வருகிறேன், பார்த்துக்கொள் என்று பொது நண்பர் நர்மியிடம் சொல்லி இருக்கிறார். என்னைத் தொடர்பு கொண்ட நர்மி, இப்போது தான் விடுமுறை முடிந்தது, அலுவல் கொஞ்சம் பிஸி, இல்லை என்றால் உடன் வந்திருப்பேன் என்றதும் எனக்குத் திருநெல்வேலி உபச்சாரம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்படியில்லை, நள்ளிரவில் Voice message நாளை விடுப்பு, உடன் வருகிறேன் என்று அனுப்பி விட்டார். பல ஆண்டுகள் பழகிய அன்பை முதல் சந்திப்பில் கொடுக்க நர்மி போல் சிலரால் மட்டுமே முடிகிறது. … Continue reading கல்கத்தா நாட்கள் பெண்ணுடன் ஒரு நாள்:
இலங்கை-4
வெள்ளவத்தையில் தங்குவதில் வசதி என்னவென்றால், தமிழர் பெரும்பான்மை பகுதி என்பது மட்டுமல்ல தமிழ் உணவுகள் எல்லாமே கிடைக்கிறது. இரவு ஒன்பதுக்கு என்ன தோசை வேண்டுமென்று கேட்டுக் கொடுக்கிறார்கள். இன்னொரு நல்ல விஷயம், நம் ஆட்கள் சிக்கனமாக, சுட்ட எண்ணெயை வீணாக்க வேண்டாம் என்று தோசைக்கு விடுவது போல் செய்வதில்லை, அசல் நெய்யை விடுகிறார்கள். கொழும்பு முகத்துவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு கோயில். பத்மாவதித் தாயாரின் முகம் அவ்வளவு திருத்தமாக இருக்கிறது. உன்னை எனக்குத் தெரியும் என்பது … Continue reading இலங்கை-4
இலங்கை -3
இலங்கை பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து இருக்கிறது. கொரானாவிற்கு முன் முப்பது ரூபாய்க்கு விற்ற டீ இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய். இந்தியப் பணம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு இருந்தாலும் டாலர் அல்லது ஈரோ கொண்டு வந்தால் தான் இந்த விலைவாசியைப் பொருட்படுத்தாது இருக்க முடியும். எளியோர் வாழ்வது இங்கே கடினம். எந்த இனமென்றாலும் எல்லோரும் ஒன்று சேர்ந்து, நாட்டை மீட்டெடுக்க வேண்டியதே உடனடித்தேவை. வெள்ளவத்தை தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். கடல் அதை ஒட்டியே ரயில்பாதை, அருகே … Continue reading இலங்கை -3
இலங்கை-2
புத்தகங்கள் குறித்து எழுதியவற்றை, சின்ன வட்டத்திற்குள் அனுப்பிய போது, நண்பர்கள் இவையெல்லாம் யாருக்கேனும், என்றேனும் உபயோகப்படும், முகநூலில் பதியுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அப்படித்தான் அது புலிவாலைப் பிடித்த கதையாகிப் போனது. அது போல் தான் இப்போது இலங்கைப் பயணம் குறித்து எழுதுங்கள், யாருக்கேனும் உதவும் என்று சொல்கிறார்கள். என் நண்பர்கள் பலருக்கு, மதுரையில் இருந்து சோழவந்தானோ, திருமங்கலமோ செல்வதற்குள்ளேயே அதிசய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. இப்போது யோசித்துப் பார்த்தால், இத்தனை காலத்தில், இந்தியா முழுதும் சுற்றியும், நான்கு பேர் … Continue reading இலங்கை-2
பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் – எம்.எம். நௌஷாத்:
ஆசிரியர் குறிப்பு: வத்தளையைச் சேர்ந்தவர். பல காலம் சம்மந்துறையில் வாழ்ந்தவர். மருத்துவக்கல்வி பயின்று மருத்துவராகப் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர். இதற்கு முன் இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இது இவரது முதல் நாவல். இது பயிற்சி நாவல், போதுமான அடர்த்தியை அடையவில்லை, நாவலில் போதாமையை உணர்கிறேன் என்றெல்லாம் நௌஷாத் முன்னுரையில் கூறி இருக்கிறார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. பலகாலம் பார்த்த வாழ்வின் சாரத்தை, நாவல் தன்னுள் கொண்டிருப்பதால், மொழிநடை, யுத்திகள், திருப்பங்கள் என்ற எல்லாவற்றையும் மிஞ்சி … Continue reading பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் – எம்.எம். நௌஷாத்:
இலங்கை 1
சின்னவயதில் இருந்தே இலங்கை என்றால் பெரிய இந்தியவரைபடத்தின் கீழ் மிகச்சிறியதாகப் பார்த்து, சிறிய தேசம் என்று மனம் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது. முகநூலில் இலங்கைப் பயணத்திட்டம் சரியாக இருக்கிறதா என்று கேட்டு, நண்பர்களின் பரிந்துரைகளைப் பார்த்ததும் அந்தக் கற்பிதம் உடைந்து, கைதட்டி விழுந்த மைக்குடுவை தரையில் சிதறிய வரைபடம் போல் பெரிதாக ஒன்றை மனதில் வரைந்து கொண்டேன். பொதுவாகப் புத்தகங்கள் குறித்த பதிவுகளைத் தவிர வேறு எதுவும் முகநூலில் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. இலங்கையை அயல்தேசம் என்று … Continue reading இலங்கை 1
தமிழ்வெளி ஏப்ரல் 2023 சிறுகதைகள்:
ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் - கார்த்திகா முகுந்த்: இந்தக்கதை ஒரு வித்தியாசமான முயற்சி. முழுக்கவே Fantasy கதையாக இல்லாமல் உண்மையில் நடந்தவைகளும் இடையிடை கலக்கின்றன. Going into shell என்பதும்claustrophobia வும் Mutually exclusive, ஆனால் அது இந்தக் கதையில் சாத்தியமாகிறது.அவள், கணவர், மகள் வரை போவதில் அழகியல் ஒளிந்திருக்கிறது. பாராட்டுகள் கார்த்திகா. கொண்டலாத்தி - ராஜேஷ் வைரபாண்டியன்: பருவ வயதில் பார்க்கும் பெண்கள் எல்லோருமே யட்சி தான். ஞாபகத்தில் முள்ளாய் … Continue reading தமிழ்வெளி ஏப்ரல் 2023 சிறுகதைகள்:
காலகட்டம் காலாண்டிதழ் கதைகள்:
அவளும் நானும் - களியக்காவிளை சினு: Modern short stories கதையம்சம் இல்லாமல் ஒரு விவாதம் அல்லது உரையாடலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது சொல்ல வரும் செய்தி வலுவானதாக இருக்க வேண்டும். இந்தக் கதை அதைச் செய்யவில்லை. திருப்பண்டம். செல்வராஜ்: விக்டர் பிரின்ஸ் எழுதிய செற்றைத் தொகுப்பின் கதை போலவே இருக்கிறது. எந்த மதம் என்றாலும் தலைவன் கொள்ளையடிப்பான், தட்டிக்கேட்க ஆள் இவ்வையென்றால் பெண்ணைத் தொடுவான். புதிதாகச் சொல்ல இந்தக் கதையில் எதுவுமில்லை. ஊர் பஞ்சாயத்து … Continue reading காலகட்டம் காலாண்டிதழ் கதைகள்:
மோகத்திரை – உமா வரதராஜன்:
ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் பாண்டிருப்பில் பிறந்தவர். கலை, இலக்கியம், ஊடகத் துறையில் 48 வருடங்களாக இயங்கி வருபவர். சிறுபத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது திரையுலகைப் பற்றிய நினைவுப்பயணக் கட்டுரைகள். ஒவ்வொருவரை நினைக்கையில் ஒவ்வொருவருக்கும் ஒருகாட்சி மனதில் வரும். எனக்குக் காஞ்சனா என்றால், முத்துராமனின் வேடம் கலைந்ததும் குத்து டான்ஸ் ஆடும் காஞ்சனா. கலர் படங்களிலே அதிகம் வந்ததால் கலர் காஞ்சனா என்று அழைக்கப்பட்ட, இவரது காதல் ஜோதி … Continue reading மோகத்திரை – உமா வரதராஜன்: