அகநாழிகை ஜனவரி 2023 சிறுகதைகள்:

சிற்பன் - அகராதி: ஃபாண்டஸி கதை. "இரு தினங்கள் படகு ஓட்டி….." என்பது போன்ற இடங்களில் அகராதி தெரிகிறார். கதை Impressive ஆக வரவில்லை. உடல்-உயிர்-உணர்வு - மஞ்சுநாத்: முதலில் வருபவரும் இடையில் வருபவரும் கடைசியில் வருபவரும் ஒரே நபர். கதை துண்டுதுண்டாகச் சொல்லப்படும் யுத்தி. கதைக்கரு இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். சிறு குடி - கி.தெ. மொப்பஸான் - தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்: பேராசையும் மோசம் செய்தலும் இந்தக் கதையின் தீம்கள். … Continue reading அகநாழிகை ஜனவரி 2023 சிறுகதைகள்:

நினைவில் நிற்கும் சில நாவல்கள்-2022

நன்றி அகநாழிகை/ பொன்.வாசுதேவன். தமிழில் பட்டியல் என்றாலே இப்போதெல்லாம் பயம் வருகிறது. மூளையின் செயலிக்கும், கைவிரல்களுக்கும் இருக்கும் தொடர்பு அறுந்து போகிறது. நினைவில் நின்றவை என்று சொல்வதில், பட்டியல் வந்தாலும் கூடப் பழி நினைவிற்குப் போய்ச்சேரட்டும். நாவல்கள் எப்போதுமே தமிழ் நவீன இலக்கியத்தின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். சிறுகதைகளில் ஒரு பொறியை வைத்து, பிரகாசமாகக் காட்டும் வித்தை நாவல்களில் கைகூடுவதில்லை. நாவல் நின்று விளையாட வேண்டிய களம். சிறுகதைகளில், கவிதைகளில் நாம் உலகத்தரத்தில் இருக்கிறோம் என்று … Continue reading நினைவில் நிற்கும் சில நாவல்கள்-2022

அகநாழிகை- அக்-டிசம்பர் 2022-சிறுகதைகள்:

முதுகன்னியின் ராமன் - நோயல் நடேசன்; Arranged marriagesல் வரும் discovery of each other சற்றே தாமதமாகப் பதினைந்து வருடங்கள் கழித்து நடக்கிறது. மகாலிங்கம் ஒரு வித்தியாசமான மனிதர். அவர் நர்ஸாகப் பணிசெய்கையில் வரும் நிகழ்வு பின்னால் வருவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. Contentment என்பது மிகையில் இல்லை, நெருக்கத்தில் கிடைப்பது என்பதே கதை. வசந்தியின் இடத்தில் வேறுபெண் பதினைந்து வருடத்திற்கு முன்னே மசாஜ் செய்யாது போனேனே என்று வருத்தப்படவும் செய்யலாம். மாறுபட்ட கதைக்கரு. ஸ்டார்ட் ஆக் … Continue reading அகநாழிகை- அக்-டிசம்பர் 2022-சிறுகதைகள்:

அகநாழிகை ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

அப்பாம்மை - ஆர். காயத்ரி : ஆயிரம் தான் சொன்னாலும் ஆணின் உலகம் வேறு, பெண்ணின் உலகம் வேறு. அது அவர்களின் எழுத்திலும் எப்படியும் வெளிப்பட்டே தீரும். நான்கு நாட்கள் டப்பாவில் அடைத்த முட்டைக்கோஸ் (அது புதிதாக வேகும் போதே பக்கத்தில் நிற்க முடியாது) ஆலிலை வயிறு என்ற வார்த்தைகளில் தோன்றும் வன்மம் ( ஆனால் பின்னால் இந்த வார்த்தைகள் பச்சாதாபத்தை வளர்க்க உதவப் போகின்றன) , பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்குமுள்ள கடலளவு வித்தியாசம் (சேனைக்கிழங்கை … Continue reading அகநாழிகை ஏப்ரல் 2022 சிறுகதைகள்: