அகழ் இணைய இதழ் மார்ச் 2023 சிறுகதைகள்;

ஆயிரத்து முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் - அஜிதன்: எவ்வளவு நீளமாக இருந்தாலும், கதை முடிகையில் அதற்குள் முடிந்துவிட்டதா என்று தோன்றச்செய்யும் எல்லாமே சுவாரசியமான கதைகள் தான். இக்கதையில் சுயசரிதைக் கூறுகள் எவ்வளவு கலந்திருக்கிறது தெரியவில்லை, ஆனால் beautiful and lucid narration. சிறுவர்களின் பார்வையில் உலகம் புதிதாகக் காட்சியளிக்கும். ஏழைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் வீட்டில் சாப்பிடச் சொன்னதும் தயங்காமல் சாப்பிடும் மனநிலை நம்மனதில் கள்ளம் புகுந்ததும் விலகிவிடுமாய் இருக்கும். பாப்பு குழந்தையாக இருந்தாலும் பெண். அஜி … Continue reading அகழ் இணைய இதழ் மார்ச் 2023 சிறுகதைகள்;

அகழ் அக்டோபர் – டிசம்பர் 2022 சிறுகதைகள்:

சரிவு - மயிலன் ஜி சின்னப்பன்: சரிவு குழந்தையைக் கூட்டி வராதது மட்டுமல்ல, செந்தி, கோமளாவை விட்டு பால்ராசிடம் கேட்காதது ஒரு சரிவு, அமுசு மூலமாக பால்ராசு தான் கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாதது சரிவு, சைக்கிளில் போகிறவன் முழுத்தப்பு செய்திருந்தாலும் கார்க்காரன் மேல் குற்றம் சொல்லும் சமூகக்கூட்டு மனநிலையைப் புரிந்து கொள்ளாதது சரிவு. இது போல் எத்தனையோ சரிவுகள். பையனைக் கூட்டி வந்தால் பின்னாடியே பால்ராசும் வந்து உட்கார்ந்து கொள்வான் என்று கடுங்கோபத்திலும் முன்யோசனையாக நடந்தது … Continue reading அகழ் அக்டோபர் – டிசம்பர் 2022 சிறுகதைகள்: