ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர். மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர். தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் … Continue reading கடவுளுக்கென ஒரு மூலை – அனுராதா கிருஷ்ணசாமி :
சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்:
நான் சிறுவயதில் இருந்தே எந்தப் பத்திரிகையிலும் ஒரு தொடர்கதை கூடப் படித்ததில்லை. காத்திருப்பில் பொறுமை இருந்திருந்தால் சில காதல்கள் கூட கைகூடியிருக்கும். இப்போது ஏராளமான நூல்களைத் தூங்கவைத்துவிட்டு வாரஇதழ், மாதமிருமுறை எதையும் வாசிப்பது மித்ரதுரோகம் போல் மனதை உறுத்துகிறது. எதனால் சொல்வனத்தை மட்டும் தவிர்க்கிறேன் என்று இப்போது நிறையப்பேர் கேள்வி கேட்பதால் இந்த விளக்கம் அவசியமாகிறது. அனுராதாவின் மொழிபெயர்ப்புகளில் என்னை முக்கியமாகக் கவர்ந்தது அவர் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் இந்திய எழுத்தாளர்கள், அநேகமாகப் பெண் எழுத்தாளர்கள். ஆஷா பூர்ணாதேவி, … Continue reading சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்: