பிறழ்வு - அரவிந்த் வடசேரி: வேட்டை மனநிலையில் இருப்பவன் பற்றிய கதை. எப்போதுமே கையிலிருப்பது கவர்ச்சியாக இருப்பதில்லை. காப்பிக்கலர் புடவை பணத்திற்குக் கிடைப்பவள் என்று தெரிந்ததுமே காமம் வடிந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரம் முக்கியமானது. அவனது அத்தனை தேடல்களிலுமிருந்து விலகி எதிர்துருவத்தில் இருக்கும் பெண். எந்தவித ஆரவாரமுமில்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் கதை. நன்றாக வந்துள்ளது அரவிந்த். வாழ்த்துகள். கும்பசாரம் - கு.கு.விக்டர் பிரின்ஸ்: Who dun it சிறுகதை. சிறுவன் மூலமாக … Continue reading ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:
ஆவநாழி இதழ் 15- டிசம்பர் 2022 சிறுகதைகள்:
கதவு- குஜராத்தி மூலம் ஹிமான்ஷி ஷேலாட் - தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி: அனுராதாவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பாக வருவதாக ஆவநாழியில் அறிவிப்பு வந்திருக்கிறது.Ecuador, Côte d'Ivoire நாடுகளின் கதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் கூடியிருக்கும் காலகட்டத்தில் இந்தியமொழிகளின் சிறந்த சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தது நல்ல முயற்சி. என்னைப் பொறுத்தவரையில் பத்திருபது அனுராதாக்களேனும் தமிழுக்கு வேண்டும். ஆனால் ஒரு அனுதாவின் தொகுப்பே இப்போது தான் வரும் சூழல் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மிட்டாய் தருகிறேன் வா என்று … Continue reading ஆவநாழி இதழ் 15- டிசம்பர் 2022 சிறுகதைகள்:
ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;
வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை - ஜேம்ஸ் தர்பர் - தமிழில் ஆர். பாலகிருஷ்ணன் : Fantasize செய்பவர்கள், அவர்களுக்கான தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது கடைக்கண் பார்வைக்காக எதிர்பாலினத்தினர் வரிசையில் நிற்பார்கள். இல்லை நிழல் நிஜமாகிறது ஷோபா போல், யாரையும் மன்னிப்பது/தண்டிப்பது குறித்த முழு அதிகாரம் பெற்றவர்கள். இதில் வருபவன் மனைவிக்கு பயந்த சராசரிக்கும் கீழானவன் எதையெல்லாம் பார்க்கிறானோ அதிலெல்லாம் சிறந்தவனாகிறான். Commanderஆக மருத்துவராக……… Firing squad முன் நின்றவன் தப்பித்துக் கொண்டானா தெரியவில்லை. … Continue reading ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;
ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
லாட்டி - ஷிவானி - தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி: அனுராதாவின் கதைகள் தேர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். இம்முறை தவறி விட்டது. குஜராத்தில் பள்ளிச்சிறுமிகள் போல் இருக்கும் பெண்கள் தலையில் அத்தனை வீட்டு வேலைகளையும் சுமத்துவதைப் பார்த்திருக்கிறேன். அனுதாபத்தைக் கோரி எழுதப்பட்ட கதை போல் தெரிகிறது. காப்டன் பானோவைக் கவனித்தது போல் எத்தனை கணவர்கள் கவனிப்பார்கள்? நூறு பிள்ளைகள் பெற்றவள் - எஸ். செந்தில் குமார்: நல்லம்மா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கோபம் கண்ணை மறைக்கையில் எதிரில் … Continue reading ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
ஆவநாழி இதழ் 12- ஜூன்- ஜூலை 2022 சிறுகதைகள்:
வானத்தின் பெயர் தான் வானம் - பிரபு தர்மராஜ்: தமிழ்க்கதைகள் உலகம் முழுக்கப் பறக்கின்றன. இதில் சிங்கப்பூர். ஆனால் சித்துராஜ், ஹேமா,லதா, ரமா போன்றவர்கள்காட்டும் சிங்கப்பூர் அல்ல இது. 12 சிங்கப்பூர் டாலர் செலவில் (இந்தியாவில் India kings Gold richன் விலையையே எடுத்துக் கொண்டு இன்றைய சிங்கப்பூர் டாலர் விலைக்கு மாற்றி இருக்கிறேன். சிங்கப்பூரில் India Kings பாக்கெட் பத்து டாலர் என்றால் இந்தக் கணக்கு தவறு). பெண்கள் சிங்கப்பூரில் மலிவாகக் கிடைக்கிறார்களாம். மன்டோவின் விபச்சாரிகளை … Continue reading ஆவநாழி இதழ் 12- ஜூன்- ஜூலை 2022 சிறுகதைகள்:
ஆவநாழி ஏப்ரல்-மே சிறுகதைகள்:
பதி - கமலதேவி: Simpleஐன Story ஆனால் ஒரு உளவியல் அதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மகனுக்குப் பிறகே கணவன். சிலர் அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், பலர் அதை மறைத்துக் கொண்டு அவர் தான் எனக்கு எல்லாம் என்கிறார்கள். வேண்டாத விருந்தாளி போல் குடிபுகுந்து எல்லோரது மனதையும் கவர்ந்த தாத்தா. பொம்பளைப் பிள்ளைய கால் செருப்பா நினைக்கிறவனோட எதுக்கு வாழனும்?தாத்தா அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்கென ஒரு மூலை- கன்னட மூலம்- … Continue reading ஆவநாழி ஏப்ரல்-மே சிறுகதைகள்:
ஆவநாழி பிப்ரவரி-மார்ச் 2022 சிறுகதைகள்:
மூன்று பயணிகள் - உண்ணி.ஆர்- தமிழில் அரவிந்த் வடசேரி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இரண்டு விதங்களில் Discharge செய்வார்கள். பூரண குணம் அடைந்தால் அல்லது ஒன்றும் செய்வதற்கில்லை என்ற போது. குழந்தைகளை மரணம் நெருங்குவதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் குதூகலமாக இருப்பதைக் காண்பதைக் காட்டிலும் வேறு என்ன துயரம் உலகில் இருக்கிறது. தச்சனின் மகன் அவசரப்படுவது ஏன்? அம்மா துக்கத்தை விழுங்கி வெளிக்காட்டாது சிரிப்பது எவ்வளவு கொடுமையானது! Simple but a strong story. நல்ல மொழிபெயர்ப்பு. எங்களைப் … Continue reading ஆவநாழி பிப்ரவரி-மார்ச் 2022 சிறுகதைகள்: