எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது. சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் … Continue reading இலக்கியம்
தமிழ் இலக்கியம்
Tomb of Sand அமெரிக்காவிலும் வெளியாகப்போகிறது. உலகத்தின் மிகப்பெரிய மார்க்கெட் அது. உண்மையில் கீதாஞ்சலிக்கு நிறையவே அதிருஷ்டம் இருக்கின்றது. பழகிய துணையை விடப் பக்கத்துவீடு அழகாக இருப்பது போன்ற பொதுமனப்பான்மைகளைக் களைந்து பார்த்தாலும், மீதி ஐந்து நாவல்களும் அதிக நுட்பம் வாய்ந்தவை. ஒரு இந்தியநாவல் உலகின் முக்கிய பரிசை வாங்கும் பொழுது, ஒரு இந்தியனாக மகிழ்வது நம் கடமை. நிறைசூலியின் நடையை விமர்சனம் செய்வது போல ஆகும், நம் நாட்டிற்குக் கிடைத்த பெருமையைக் குலைக்கும் செயலில் இறங்குவது. … Continue reading தமிழ் இலக்கியம்