பதினைந்து நாட்களில் ஒரு நாட்டின் புவியியல் பரப்பை, சமூகத்தை, முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, இன்னபிறவற்றை அறிந்தேன் என்று சொல்லுதல் பேதமை. நாற்பதாண்டுகள் உடன் வாழ்ந்தாலும் துணையை முழுதாக அறிந்தேன் என்று சொல்ல முடியாது. அந்தக் கோணத்தில் பார்த்தால் நம் வாழ்க்கையில் நமக்கு எது புரிகின்றதோ, சரி என்று படுகிறதோ அதையே வெளிப்படுத்துகிறோம். அந்த வகையான கட்டுரையே இது. இலங்கை சுற்றுலாப் பயணிகளை எதிர்கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்த பிறகு சுற்றுலாத்துறை இன்னும் முனைப்போடு செயல்பட்டால், ஏராளமான பயணிகளை … Continue reading BYE SRILANKA :
இலங்கைப்பயணம்-16
கிளிநொச்சி நிறையவே மாறி இருப்பதாக உடன் வந்தவர்கள் அபிப்ராயப்பட்டார்கள்.வைஜயந்திமாலாவை அவரது அறுபது வயதில் முதன்முதலாய் சந்தித்தது போலவே கிளிநொச்சியை வெகுதாமதமாய் 2023ல் முதலாகப் பார்க்கிறேன். கருணாகரன் சிவராசா நான் இங்கே வருவதற்கு முன்பே என்னைச் சந்திக்க ஆவல் என்று கூறியிருந்தார். அவரிடம் கிளிநொச்சி பற்றிய விஷயங்கள் நிறையவே கேட்டிருக்க முடியும். வெகு ஆவலாய் இருந்தேன். பஞ்ச சிவனார்களில் கோணேஸ்வரர், நகுலேஸ்வரர் ஆகிய இருவரைப் பார்த்துவிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரரைப் பார்க்காமல் போகிறீர்களே என்று யாரோ திரியைப் பற்ற வைத்ததால் … Continue reading இலங்கைப்பயணம்-16
இலங்கைப் பயணம் -15
யாழ்ப்பாணத்தில் வீடுகளில் பனைமட்டை, பனையோலை கொண்டு வேலிகள் செய்திருக்கிறார்கள். இயற்கை வேலி. வீடுகள், சாலைகள் பெரிதாக இருக்கின்றன. செம்மண் நிலம். வாழை, தென்னை செழித்து வளர்ந்திருக்கின்றன. புகையிலையும் நன்றாக வளர்கிறது. காங்கேசன் துறை கடற்கரை மற்ற கடற்கரைகளைப் போலவே ஆட்கள் நடமாற்றமின்றி. பாலியல் தொழிலாளிகள் இருவர் வாடிக்கையாளர் வரும் வரை கடல் பார்த்து மோனத்தவம் செய்வோம் என்று உட்கார்ந்திருந்தார்கள். படிக்கட்டுத்துறையுடன் உள்ள குளத்தில் கடல்நீர் வந்து கலக்கிறது. ஆண்களுக்கு, ,பெண்களுக்குத் தனித்தனியாய் குளங்கள். இரண்டிலும் தண்ணீர் உப்புக்கரிப்பதில்லை. … Continue reading இலங்கைப் பயணம் -15
இலங்கைப்பயணம்-14
யாழ்ப்பாணம் கோவில்களின் நகரம். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு மாதம் தங்கினாலும் முடிக்க முடியாத எண்ணிக்கையில் கோவில்கள் இருக்கின்றன. சிங்களவர்கள் குறைவு என்பதால், தமிழ்நாட்டுத் தமிழருக்கு இலங்கையின் மற்ற எல்லா ஊர்களை விட உணர்வு ரீதியாக நெருக்கத்தை இந்த ஊரின் நிலத்தில் காலடி வைத்ததுமே உணரமுடியும். பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில். மூலவர் ஆமை வடிவம். பிரதிஷ்டை செய்யப்படாத மூர்த்தி. இன்னொரு வகையில் இந்தக் கோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அல்பிரட் துரையப்பா கொலைமூலம் பிரபாகரன் பிள்ளையார் சுழி போட்டது … Continue reading இலங்கைப்பயணம்-14
இலங்கைப் பயணம்-13
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணம். விடுதலைப்புலிகள் கோலோச்சிய பகுதி. நிலம் எதுவுமறியாதது போல் அமைதியாக இருக்கிறது. பல இடங்களில் கண்ணிவெடி அச்சுறுத்தல் இருந்தது இங்கே தான். தமிழ்நாட்டில் கண்ணகிக்குக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை ஆனால் கேரளாவில் இருக்கிறது. அது போல் முல்லைத்தீவிலும் இருக்கிறது. வைகாசி பண்டிகையின் போது தண்ணீர் கொண்டு விளக்கேற்றுவார்களாம்.முதல் நாள் இரவு எல்லோரும் உறங்கிய பிறகு தண்ணீரில் எண்ணெயைக் கலப்பார்களா என்னவோ நமக்கெதற்கு வம்பு! முல்லைத்தீவு கடல். கப்பல்கள் வந்து போன கடலில் … Continue reading இலங்கைப் பயணம்-13
கல்யாணி என்கிற கலைவாணி என்கிற வானதி என்கிற தமிழ்நதி:
"தி.ஜாவின் முதல் நாவல் எது? " தமிழ்நதி என்னுடன் நடத்திய முதல் உரையாடல் இது.தமிழ் எழுத்தாளருக்கு எல்லாமே தெரிந்திருக்குமே, இவர் நம்மைக் கேட்கிறாரே என்ற ஆச்சரியத்துடன் ஆரம்பித்தது எங்கள் நட்பு. இந்த ஐந்து வருடங்களில் A-4 sheetல் எழுதினால் இரண்டு பக்கங்கள் பேசியிருப்போமா என்பதே சந்தேகம். இவ்வளவிற்கும், வணக்கம், பிஸியா போன்ற ஆரம்ப ஆலாபனைகள் இல்லாமல் எந்த விஷயம் குறித்தும் இவரிடம் நான் பேசலாம். இலங்கைப் பயணம் முடிவுசெய்யும் முன் இவரிடம் கேட்டதும், ஏப்ரல் நான்காம் தேதிக்கு … Continue reading கல்யாணி என்கிற கலைவாணி என்கிற வானதி என்கிற தமிழ்நதி:
இலங்கைப் பயணம் -11
இலங்கை பயணம் முடிவானதும் கூகுள் பயணத்திட்டம் சரிவராததால், நண்பர்களின் உதவியை நாட வேண்டியதாயிற்று. ரிஷான் ஷெரீப் நீண்ட பயணத்திட்டம், உடைகள், மற்ற விஷயங்களைப் பற்றிய நெடுங்குறிப்புகள் அனுப்பியிருந்தார். அருண் அம்பலவாணர் ஒரு நெடிய பயணத்திட்டத்தை அனுப்பியிருந்தார். உட்பெட்டியில் பலர் தொடர்பு கொண்டு அது சிறப்பான பயணத்திட்டம் என்று உறுதி செய்தார்கள். அய்யாத்துரை சாந்தன், எம்.எம்.நௌஷாத், தமிழ்நதி, உமா வரதராஜன் உள்ளிட்டுப் பலர் பயணத்திட்டங்களை அளித்தனர். முதலாவதாக யாழ்பாணத்திற்கு பெங்களூரில் இருந்து நேரடி விமானப் போக்குவரத்து கிடையாது. கொழும்புசெல்லும் … Continue reading இலங்கைப் பயணம் -11
இலங்கைப் பயணம்-10
மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, செங்கலடி, ஓட்ட மாவடி வரை வயல்காணியும் பசுமையும் இருக்கின்றன. வாழைச்சேனை, வாகரை, சேருநுவர, கிண்ணியா வந்து திரிகோணமலை வரும் வரை காடும் வறண்ட பகுதிகளும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லாத மனிதர்களும். கண்களை மூடினால் பெடியன்களும், பெடியள் பிள்ளைகளும் துவக்குகளைத் தூக்கிக் கொண்டு அவசரமாக ஓடினர். பதறிக் கண் விழித்தால் பாலை நிலம். திரிகோணமலை பதினாறாம் நூற்றாண்டில்போர்த்துக்கீசியப் படையெடுப்பிலிருந்து எத்தனையோ படையெடுப்புகளைச் சந்தித்திருந்தாலும் சிறைபிடிக்கப்பட்ட மகாராணி போல அழகும், கம்பீரமும் குறையவில்லை. … Continue reading இலங்கைப் பயணம்-10
இலங்கைப்பயணம் -9
தமிழ்நாட்டில் ஒரு சாதி மொத்தத்தையும் பழிக்கக்கூடாது என்று சொன்னால் நம்மை சங்கி என்பார்கள். இலங்கையில் அதை விட எளிதாக நம்மை Branding செய்வார்கள் போலிருக்கிறது. எனக்கு சாதி, மதம் இல்லை, கடவுள் நம்பிக்கை இல்லை என்று எத்தனையோ பதிவுகள் போட்டாயிற்று. எனக்குப் புத்தகம் போடும் எண்ணமில்லை. தமிழ்நாட்டில் அநேகமான முக்கிய பதிப்பாளர்கள் கேட்டும் போடவில்லை. முகநூல் புகழை வைத்துக் காணி வாங்கிப்போடலாம் என்ற கனவு எனக்கில்லை. என் மதம் அன்பு, என் சுவாசம் இலக்கியம். யாருக்கும் எதையும் … Continue reading இலங்கைப்பயணம் -9
இலங்கைப் பயணம்-8
நுவரெலியாவில் உள்ள காயத்ரி பீடம், இராவணனின் மகன் இந்திரஜித் வழிபட்ட தலம் என்று சொல்கிறார்கள். சகல சித்தர்கள் பற்றிய குறிப்புகளும் கோவிலில் இருக்கின்றன. நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் செல்லும் வழியில் பண்டாரவளை. முன்னர் தமிழர் பெருவாரியாக இருந்த இடம் . 1983 கலவரத்தின் பின், சிங்களவர், முஸ்லீம்கள் பெரும்பான்மைப் பகுதியாக மாறிவிட்டது.வலுவான இனம், மற்றொரு இனத்தை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்வது இலங்கை வரலாற்றில் இந்த ஒருமுறை மட்டும் நடந்திருக்கவில்லை. தாமோதர Nine arch bridge பிரிட்டிஷ் ரயில் ரோடு … Continue reading இலங்கைப் பயணம்-8