பெண்களிடம் எது அழகு என்பது நம்முடைய ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறிவிடுகிறது போலும். மீசை முளைக்காத பருவத்தில், தாவணி அணிந்த பெண்கள் எல்லோரும் அழகு. ஒருவயதே குறைந்தவன், சின்னப்பயல், தம்பி என்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அப்பாவித்தனம் கூடுதல் அழகு. பின்னர் சிலகாலம் கழித்து Flirt செய்யும் பெண்களை விட மௌனிப்பெண்கள் அழகாக இருந்தார்கள். அதிகம் பழகுபவர்களிடம் இல்லாத அழகு, ஒதுங்கிப் போகிறவர்களிடம் சேர்ந்திருந்ததாகக் கற்பிதம் செய்த காலம் இருந்திருக்கிறது. வேலைக்குச் சென்று சிறிதுகாலம் ஆனதும்கற்பூரபுத்தி கொண்ட பெண்கள் … Continue reading எப்போதும் பெண்கள்