கலகம்- டிசம்பர் 2022 சிறுகதைகள்:

பொம்மைகளின் உரையாடல்கள் - கே.ஜே.அசோக்குமார் : புதுமைப்பித்தனின் துரோகம் கதையில் வேணு புலம்புவான். என்னுடைய ஒரே ஆடையான இலக்கியஉடுப்பைப் பறித்து என்னை அம்மணமாக்க முயல்கிறான் என்று. அன்னம் அதையே மாலினிக்குச் செய்கிறாள். மூன்று பெண்களின் ஆட்டத்தில் பாஸ்கரன் பொம்மை. சாமியாடுவதை சாதகமாக்கிக் கொள்வது எப்போதுமே நடப்பது. இது பொம்மைகளின் கதையல்ல, மனிதர்களின் கீழ்மை பற்றிய கதை. நன்றாக வந்திருக்கிறது. வாலெயிறு ஊறிய நீர் - அகராதி: அகராதியின் சிறுகதைகளில் முன்னைவிட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கால மயக்கத்தைத் … Continue reading கலகம்- டிசம்பர் 2022 சிறுகதைகள்:

கலகம் காலாண்டிதழ்-3 சிறுகதைகள்:

வைரமணி - அரவிந்த் வடசேரி: LGBT கதை. ஒரு ஆண் ஒரு பெண்ணை வெறித்தனமாகக் காதலிப்பது போல் ஒரு ஆண் இன்னொரு ஆணைக் காதலிப்பதை பேசுவது நமக்குப்புதிது, ஆனால் பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவிற்கும் பசித்த மானிடம் வெளிவந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு ஆகப்போகிறது. மேலைநாடுகளில் LGBT தனியாக ஒரு Genre.அரவிந்த் வடசேரியின் இந்தக் கதை நன்றாக வந்திருக்கிறது. தெளிவான சித்திரம் போல் எந்த பிசிறுமில்லாது வந்திருக்கிறது. இன்னும் கூட அரவிந்த் வார்த்தைகளில் கவனம் செலுத்த … Continue reading கலகம் காலாண்டிதழ்-3 சிறுகதைகள்: