காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

கிழிவு -. கலாமோகன்: கலாமோகனின் கதைகள் Fantasyக்கு கதை வடிவம் கொடுக்க முயல்பவை. நான் வாசித்த அநேக கதைகளில் காணும் பெண்களை எல்லாம் கூடும் வயதான பிம்பம் ஒன்று வந்து போகும். அவரது எழுத்தில் அலைபாயும் உணர்வுகளைக் கடத்த முயலும் சற்றே பிறழ்ந்த மனம் இந்தக் கதையிலும் வருகின்றது. சொந்த நாட்டில் அகதியாக நடத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுகின்றனர், ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். எல்லாம் OK. வாசித்து அந்த நேரத்தில் … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

ராஜேஷீம் மரியாவும் - சக்கரியா- தமிழில் சுகுமாரன்: மார்ச் மாதத்தில் பாஷா போஷிணியில் வந்த கதை அதற்குள் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளை பகடி செய்து எழுதப்பட்ட கதை. சிறுவயது முதல் பழகிய இரண்டு காதலர்களில், காதலி டில்லிக்கு மேற்படிப்புக்கு சென்று வந்து, போஸ்டர் ஒட்டுகிற, கோஷம் போடுகிற பழைய கம்யூனிஸ்டிலிருந்து மாறி புதிய கம்யூனிஸ்டுகள் ஆக வேண்டும் என்கிறாள். இரண்டு குடும்பத்தின் மதம் குறுக்கே வரவில்லை, வேறுபட்ட அரசியல் கட்சிகள் குறுக்கே வரவில்லை, சிந்தனை மாற்றம் குறுக்கே … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு மார்ச் 2022 சிறுகதைகள்:

சங்கிலி - யுவன் சந்திரசேகர்: பேருந்துக்குப் பணமில்லாமல் ஆற்றில் பிணம்போல் மிதந்து சென்று வேலைக்குப் போவது, ஞாபகங்களின் கனத்தில் கூன் விழுவது, முனியாண்டிக்கு நேர்ந்து விட்ட காளை, இனி எங்கை பார்க்கப்போறோம்என்பது போல் யுவன் சந்திரசேகரின் வழக்கமான வரிகளைத் தாண்டிய அர்த்தங்கள், கதையைத் தொடர விடாமல் தொந்தரவு செய்கின்றன. ஞாபகங்கள் ஒன்றை ஒன்று நான் முந்தி என தள்ளிவிட்டு வருகின்றன. அறுபது வயதில் அசைபோடுகையில், நிறைய செயல்களுக்குஅர்த்தமில்லாது போகிறது, சிலவற்றுக்குப் புதிய அர்த்தம் தோன்றுகிறது. Nostalgia தான் … Continue reading காலச்சுவடு மார்ச் 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்

செல்லப்பன்- சுந்தரராமசாமி: சு.ரா இருந்தபோது அவரது மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து, பலவீனமான கதைகள் என்று நான்கு கதைகளை விலக்குகிறார். அதில் இதுவும் ஒன்று என்று குறிப்பு சொல்கிறது. தப்புத்தாளங்கள் திரைப்படத்தின் கதை தான் இதுவும். ஆனால் இது கல்கியில் 1959லேயே வெளிவந்து விட்டது. சு.ராவின் ஆரம்பகால கதைகள் வேறுவிதமாக இருக்கும். புளியமரத்தின் கதைக்கும், ஜே ஜே சில குறிப்புகளுக்குமே கடலளவு வித்தியாசம். என்றாலும் இதற்கு முன் வெளிவந்த பிரசாதம், சன்னல் போன்ற கதைகளும் கூட அழுத்தமானவை. சு.ராவின் … Continue reading காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்