வெனிலா - குமார செல்வா: வெனிலா வாசனையைத் தருவது போலவே பாலுணர்வையும் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. நிர்மலா டீச்சரின் பாலுணர்வு தான் மொத்தக்கதையும். voyeurism, சிறுவர்களுடன் Misadventures என்று அத்தனையும் செய்து பார்க்கிறாள் நிர்மலா. சம்பாத்தியம், டியூஷன், தோட்டம் என்று மெல்லக் கதைக்குள் புகுந்த பின்னரே Main story வருகிறது. டீச்சரின் கணவனின் Flashback எளிதாகச் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறது. அவன் கதையில் மட்டுமல்ல, வாசகர்களுக்கும் ஒன்றும் பிரயோஜனமில்லை, Score செய்வது எல்லாமே நிர்மலா டீச்சர் தான். கோழிகளுக்குப் … Continue reading குறி இதழ் 32- ஜூன்-செப்டம்பர் 2022 சிறுகதைகள்:
குறி இதழ்-31 – ஏப்ரல்-ஜூன் 2022 சிறுகதைகள்:
அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்- ஸ்பானிய மூலம் - ஹூவான் ருல்ஃபோ - தமிழில் சித்துராஜ் பொன்ராஜ்: பஞ்சகாலங்களில் மனிதம் செத்துவிடுவதைப் பற்றிப் பல கதைகள் வந்திருக்கின்றன. இந்தக் கதையின் கரு பழிவாங்குதல். ஒரு கொலையைச் செய்தவன், நாற்பது வருடங்களாகப் பயந்து ஒளிந்து திரிந்தது அதற்கான தண்டனையாக முடியுமா? மனைவி, பொருள் எல்லாவற்றையும் இழந்தது கொலைக்குற்றத்தை சரிக்கட்டி விடுமா?இரண்டு நாட்கள் சித்திரவதை அனுபவித்துதுடிதுடித்து இறந்த தந்தையின் கொலைக்குப் பழிவாங்க நினைப்பவன் கொலையாளியின் முகத்தைப் பார்க்காததிலும், … Continue reading குறி இதழ்-31 – ஏப்ரல்-ஜூன் 2022 சிறுகதைகள்: