LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:

சிவகுமார் மாவலி, ஷிவமோக்கா, சொரடாவின் மாவலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கே.நல்லதம்பி: தனியார் கம்பெனியில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவர். நூலின் ஆரம்பத்தில் 25 படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், 15 தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார் என்று குறிப்பு சொல்கிறது. இதை எழுதும் வேளையில் நிச்சயம் இந்த எண்ணிக்கை மாறியிருக்கும். Right man in … Continue reading LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:

சகீனாவின் முத்தம் – விவேக் ஷான்பாக்- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:

விவேக் ஷான்பாக்: பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் வசிக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், நான்கு நாவல்களையும், இரண்டு நாடகங்களையும் இதுவரை வெளியிட்டிருக்கிறார். காச்சர் கோச்சர் இவரது முக்கியமாகப் பேசப்பட்ட நாவல். கே. நல்லதம்பி: மைசூரில் படித்து அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தமிழில் இருந்து கன்னடத்திற்கும், கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பவர். மொழிபெயர்ப்புக்கான 2022 சாகித்ய அகாதமி விருதை வென்றவர். பார்த்துப் பார்த்து காதலித்த உருவம் தேவன்/தேவதை வடிவத்தில் இருந்து, சகிக்க முடியாத உருவத்தை … Continue reading சகீனாவின் முத்தம் – விவேக் ஷான்பாக்- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:

யசோதரை உறங்கவில்லை – எம்.எஸ். மூர்த்தி – கன்னடத்தில் இருந்து தமிழுக்கு கே.நல்லதம்பி:

எம்.எஸ். மூர்த்தி : பெங்களூரில் பிறந்தவர். ஓவியக்கலை, சிற்பக்கலையில் டிப்ளமோ கல்வியும், உளவியலில் பட்டமும் பெற்றவர். பத்திரிகையில் கலை இயக்குனராக, பன்னாட்டுக் கலைகண்காட்சிகளில் பங்களிப்பாளராக இருந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இந்த நூல் இவரது முதல்நாடகம். கே.நல்லதம்பி: மைசூரில் பிறந்தவர். தனியார் கம்பெனியில் உயர்பதவியில் இருந்தவர். தமிழில் இருந்து கன்னடத்துக்கு, கன்னடத்தில் இருந்து தமிழுக்குப் பல நல்ல படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து இருமாநில மக்களின் அபிமானத்தையும் பெற்றவர். ஐந்து காட்சிகளே கொண்ட … Continue reading யசோதரை உறங்கவில்லை – எம்.எஸ். மூர்த்தி – கன்னடத்தில் இருந்து தமிழுக்கு கே.நல்லதம்பி:

காஞ்சன சீதை- கிருஷ்ணமூர்த்தி சந்தர்- தமிழில் கே.நல்லதம்பி:

கிருஷ்ணமூர்த்தி சந்தர்: மைசூரில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். மைசூர் பல்கலையின் ஆங்கிலத்துறையில் தலைவராகப் பணியாற்றியவர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இருபத்தைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியவர். கே.நல்லதம்பி: மைசூரைச் சேர்ந்தவர். கன்னடத்தில் இருந்து தமிழிலும், தமிழில் இருந்து கன்னடத்திலும் தொடர்ந்து மொழிபெயர்ப்பவர். தி.ஜா, சு.ரா உள்ளிட்ட பலரை தமிழில் இருந்து கன்னடத்திற்கும்,விவேக் ஷாண்பாக், ஜயந்த் காய்கிணி, எஸ்.திவாகர், நேமிசந்திரா உள்ளிட்ட பலரை கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்தவர். காஞ்சனசீதை என்ற தலைப்பே அர்த்தம் பொதிந்தது. நான் … Continue reading காஞ்சன சீதை- கிருஷ்ணமூர்த்தி சந்தர்- தமிழில் கே.நல்லதம்பி:

புத்த மணியோசை – தொகுப்பும் மொழியாக்கமும் கே.நல்லதம்பி:

ஆசிரியர் குறிப்பு: லங்கேஷ்பாரதி, ஷான்பாக் புத்தகங்கள் உட்பட பலநூல்களைக் கன்னடத்திலிருந்து இருந்து தமிழுக்கும், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையையும், பெருமாள் முருகனின் பூக்குழி உட்பட சில நூல்களை தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்தவர். தி.ஜாவின் சில சிறுகதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஒரு மொழியில் இலக்கியம் வளர்கிறது என்றால் பெண்கள் அதிகம் எழுதுவதும் ஒரு அறிகுறி. குடும்ப சென்டிமென்ட் கொண்ட மங்கையர் மலர் வகையறாக் கதைகளை அல்ல, அம்பை பாணிக் கதைகள். கனடாவில் முக்கிய எழுத்தாளர்கள் என்றால், … Continue reading புத்த மணியோசை – தொகுப்பும் மொழியாக்கமும் கே.நல்லதம்பி: