சந்திரா கதைகள்: வாழ்க்கையின் சோளக்கதிர்கள்:

சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து சேர்ந்து, பத்திரிகையாளராகப் பின் திரைப்படத்துறையில் பணியாற்றி என்று 27வருடங்கள் ஆன பிறகும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில், பூனைகள் இல்லாத வீடு என்ற முந்தைய தொகுப்பின் கதைகளும் இருக்கின்றன. பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து, ஒவ்வொருவராக வெளியேறி, முற்றத்தை வெற்றிடமாக்கிப் போவதைச் சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாய் பெரியம்மா … Continue reading சந்திரா கதைகள்: வாழ்க்கையின் சோளக்கதிர்கள்: