தூண்டில் முள் வளைவுகள் – சிவகுமார் முத்தையா:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் அருகேயுள்ள விளமல்-தண்டலையைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை எழுதிவருபவர். நாளிதழ் ஒன்றில் துணையாசிரியராகத் திருப்பூரில் பணியாற்றும் இவரது ஆறு நூல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இது ஏழாவதாக வெளிவரும் குறுநாவல்களின் தொகுப்பு. ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. முதல் கதை, கடலோடியின் வாழ்க்கையைப் பற்றியும், அநேகமாக மீதிக்கதைகள் விவசாயக்குடும்பங்களை மையமாக வைத்தும் எழுதப்பட்டு இருக்கின்றன. இரண்டு வாழ்க்கைகள் குறித்துமே பரிச்சயமில்லாமல், இத்தனை தகவல்களைக் கொண்டுவந்து கதை எழுதுவது யாருக்குமே இயலாத காரியம். … Continue reading தூண்டில் முள் வளைவுகள் – சிவகுமார் முத்தையா: