மத்தியான நதி – செல்வசங்கரன்:

விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியில் தமிழ் பேராசிரியர். ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. செல்வசங்கரனின் கவிதைகள் ஒரு மாற்று உலகத்தை சிருஷ்டி செய்து கொள்ளும். நிதர்சனமில்லாத எல்லாமும் அங்கே, தினம் நடக்கும் சாதாரண நிகழ்வு போல் பகிரப்படும். இருத்தல் குறித்த விசாரம், Absurdism ஆகியவைகளால் நிரம்பியது செல்வசங்கரன் கவிதைகள். அஃறிணைகள் நம்மைப் போல் சிந்திப்பது என்பது சரி, இங்கே காலமும, மனிதனும் … Continue reading மத்தியான நதி – செல்வசங்கரன்:

கண்ணாடிச் சத்தம் – செல்வசங்கரன்:

ஆசிரியர் குறிப்பு: விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப்பேராசிரியர் பணி. ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகள் எழுதியுள்ள இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. மொழியின் செழுமையை நம்பாமல், கவிதை பயணிக்கும் தூரத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துபவர்களில் ஒருவர் செல்வசங்கரன். ஐந்தாவது தொகுப்பை வெளியிட்டிருக்கும் இவரை எத்தனைபேர் வாசித்திருப்பார்கள் என்பது எனக்கு வரும் சந்தேகம். தமிழில் கவிதைக் குவியல்களின் நடுவே செல்வசங்கரன் போன்ற நல்ல கவிஞர்களும், அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வருத்தத்தை … Continue reading கண்ணாடிச் சத்தம் – செல்வசங்கரன்: