யாதவப் பிரகாசர் - சரவணன் சந்திரன்: ஹாக்கி விளையாட்டின் நுணுக்கங்களை மையமாகக் கொண்ட கதை. வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால் குருவுக்கு சீடனின் திறமை தெரிந்து போகிறது. குரு சற்றே பாதையிலிருந்து கீழிறங்கி விட்டு, மீண்டும் பிரதானசாலைக்கு வந்து சேர்வது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தக்கையின் மீது நான்கு கண்கள் தாத்தா நினைவுக்கு வருகிறார். https://tamizhini.in/2023/01/31/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ அனாகதநாதம் - செந்தில் ஜெகன்நாதன்: விரும்பிய பெண்ணின் மீது ஏற்படும் disenchantment அப்படியே நாதஸ்வரத்திற்கு மாறிவிடுகிறது. காணுமிடமெங்கும் அவள் சிரிப்பு என்பது … Continue reading தமிழினி ஜனவரி 2023 சிறுகதைகள்:
தமிழினி அக்டோபர் 2022 சிறுகதைகள்:
தானச் சோறு- சரவணன் சந்திரன்: Beautifully written story, உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல, மொழிநடையாலும் தான். பழனிமலையும் சித்தரும். ஆன்மீகத்தின் குரல் ஆண்டிப்பண்டாரத்தை கயிற்றைக் கட்டி இழுப்பது போல் இழுக்கிறது. காட்டியதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது. தானச் சோறு கடவுளின் பிரசாதம். Fantasy சாயலில் ஒரு முடிவு. Perfect story. https://tamizhini.in/2022/10/11/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81/ சித்திரச் சபை - சுரேஷ் பிரதீப்: சுரேஷ் பிரதீப் Is back. மீண்டும் வாசகர் இட்டு நிரப்பிக்கொள்ளும் இடைவெளியைக் கொண்டிருக்கும் நல்ல கதை. தீராத … Continue reading தமிழினி அக்டோபர் 2022 சிறுகதைகள்:
தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
அரைப்பனை- சரவணன் சந்திரன்: சாமியாடி பற்றிய கதைகள் ஏராளம். சொல்லச்சொல்ல சுவாரசியமானவை. சுடலைக்கு ஆதரவு எவ்வளவு இருந்திருக்கிறதோ அவ்வளவு வெறுப்பும் சம்பாதித்திருக்கிறார். கடைசிவரை சுடலை குறித்த மர்மத்திரை விலக்கப்படாமலேயேஇருக்கிறது. மயில்சாமி சொல்வதில் பாதிப் பொய், மீதி உண்மை இருக்கலாம். எது எப்படியானாலும் அந்த கடைசிப் புறக்கணிப்பு மட்டும் ஊர்க்காரர்கள் பலர் பார்த்ததால் நிஜம். வெறுப்பு மண்டிக் கிடந்த சுடலையால் அதைத் தாங்க முடியாமல் போயிருக்க வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. https://tamizhini.in/2022/08/30/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/ எட்டு நிமிடங்கள் - இந்திரா … Continue reading தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
தமிழினி ஜூலை 2022 சிறுகதைகள்:
வீழ்ச்சி - பா.திருச்செந்தாழை: வாழ்ந்தவர் கெட்டால் கதைகளில் வருவதெல்லாம் இதிலும் வருகிறது, ஆனால் இங்கே குடும்பம் திரும்ப மேலேவந்து விடும் என்பதற்கான அறிகுறிகள், ஒரு வார்த்தை கூட கதையில் வராமலேயே ஒளிந்திருக்கின்றன. அம்மாவிற்கு இருக்கும் Instinctஉடன் ஆரம்பிக்கும் கதையில் சகுந்தலா பலசரக்குக் கடையை மீட்டெடுக்கும் பழையகதை காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தலைமுறையில் ஒருவர் கெட்டி அடுத்த தலைமுறை தத்தி என்பது மாறிமாறி வரும் போலிருக்கிறது. சிவபாலனிடம் சகுந்தலாவின் ரத்தம் அதிகம் ஓடுகிறது." ஒவ்வொரு அலைக்கும் கைப்பிடி மணலாகபறிபோய்க் … Continue reading தமிழினி ஜூலை 2022 சிறுகதைகள்:
தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
சன்னக்கட்டை - ஆழிவண்ணன்: ஒரே தொழிலில் இருப்பவர்கள் பொறாமைப் படுவது ஒரு உளவியல். உடன் பிறந்தோரில் ஒருவர் அந்தஸ்து உயர்ந்தால் மற்றவர்களது பொறாமைக்கணைகள் உடன் பாயும். யாரும் அம்பானியைப் பார்த்துப் பொறாமைப்படப் போவதில்லை. தேரையும், சன்னக்கட்டையையும் குறித்து இவ்வளவு விளக்கமாக இப்போது தான் வாசிக்கிறேன். கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்னே "மிக அருகில் வந்து நின்றது' என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. மானு மோராஸ் - சரவணன் சந்திரன்: மாய யதார்த்தம், பேண்டஸி, Hysterical realism போன்ற … Continue reading தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்: