உறவு - கமலதேவி: பால்கொடுக்கும் மார்பில் வெடிப்பு வந்தால் குழந்தைக்கும் கொடுக்கமுடியாது, மார்கட்டிக் கொண்டு, தொடவே முடியாமல் நரகவேதனை. அதுவே வாய்பேசத்தெரியாத ஜீவனுக்கு வந்தால்! மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவு பற்றிய கதை, வெகு இயல்பாக ஒரு குடும்பத்தைக் கண்முன் கொண்டு வருகிறது. நாராயணனுக்கும் மாட்டுக்குமிருக்கும் உறவு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பது போன்றது. அம்மா,மகள்இருவரிடம் மட்டுமே ஒரு ஆணால் காட்ட முடிவது. அழகாக மலர்ந்திருக்கிறது. எக்ஸ்- அகராதி: எக்ஸ்ஸூடன் பெரும்பாலும் பார்த்தாலும் பேசாமல் தலையைத் திருப்பிக் கொள்ளும்படி … Continue reading தமிழ்வெளி ஜனவரி 2023 சிறுகதைகள்:
தமிழ்வெளி அக்டோபர் 2022 சிறுகதைகள்:
மதி - கார்த்திகா முகுந்த்: அடுத்த சிறுகதையாசிரியர் தயாராகி இருக்கிறார். தி.ஜாவின் கதைகளைப் படிக்கையில் ஏற்படும் பரவசம் இந்தக் கதையிலும் கிடைக்கிறது. சிறுவயதில் பார்த்த கோயில் அந்நியமாகிறது. ஊர் அந்நியமாகிறது. எனக்கும் வயதாகி விட்டது. ஆனால் உருவத்திலும், பிரியத்திலும் நீ எப்படி மதி அப்படியே இருக்கிறாய்! அடையாளம் அற்றவனின் ஆடை - அமுதா ஆர்த்தி: எது பிறழ்வு? எது சமநிலை? ஒருவேளை அவன் காவி உடுத்தியிருந்தால் அப்போது எல்லோருடைய பார்வைகளும் மாறிவிடும் அல்லவா? Judging a book … Continue reading தமிழ்வெளி அக்டோபர் 2022 சிறுகதைகள்:
தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:
குதிரை வண்டில் - ச.ஆதவன்: கதைகள் ஒரு சம்பவத்தையோ, ஒரு புறக்காட்சியையோ, பிரச்சனயையோ, உணர்வையோ ஏதாவது ஒன்றை மையமாக வைத்து எழுதப்படலாம். ஆனால் அது வாசகர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விழைய வேண்டும். இது அழிவு, பஞ்ச காலத்தைப் பற்றிய வர்ணனைகளுடன் நின்று விடுகிறது. கடல் என்னை நேசிக்கிறது- மியா கூட்டோ மியா கூட்டோவின் Sleepwalking Land அவரைத் தொடங்குவதற்கு சரியான புள்ளி. இந்தக் கதை அவருடைய புகழ்பெற்ற கதை. கவர்ச்சி, காமத்தில் ஆரம்பிக்கும் கதை, … Continue reading தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:
தமிழ்வெளி- காலாண்டிதழ்-6- ஏப்ரல் 2022 சிறுகதைகள்;
இரவில் -ஜமைக்கா கின்கெய்ட்- தமிழில் சமயவேல்: இரண்டுகாரணங்களால் கின்கெய்டை மொழிபெயர்ப்பது சிரமம். முதலாவது கவிதை கலந்த அவரது மொழிநடை. இரண்டாவது யதார்த்தவாதத்தில் நகரும் கதை திடீரென சர்ரியல் பேண்டஸிக்குச் சென்று திரும்புவது. சமயவேல் எளிதாக, எளிமையாக மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். இந்தக் கதை முழுக்கவே ஒரு சிறுபெண்ணின் பார்வையிலான உலகமும் அவள் கனவுகளும். அவள் உலகநடப்புகளைக் கேள்வி கேட்பதில்லை, அவள் பார்வையை மட்டும் சொல்கிறாள். வழக்கமாக இவர் கதைகளில் வரும் பெண்- அம்மா உறவின் Dynamics இந்தக் கதையிலும் … Continue reading தமிழ்வெளி- காலாண்டிதழ்-6- ஏப்ரல் 2022 சிறுகதைகள்;
தமிழ்வெளி காலாண்டிதழ் 5 – ஜனவரி 2022 சிறுகதைகள்:
தமிழ்வெளி இதழை முழுதும் படித்த உடன் தோன்றிய சிந்தனை, இது போல் நான்கைந்து இதழ்கள் தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தான். பொருளாதார ரீதியாக பல சோதனைகள் இருக்கிறது என்றாலும் Nidhi Agerwalஐப் பார்த்து மோகிப்பது போல், நடைமுறையில் சிரமம் என்று தெரிந்தே விரும்புகிறோம். நேசமிகு சுவர்கள் - அமுதா ஆர்த்தி: இது தான் நான் வாசிக்கும் இவருடைய முதல்கதை. கதைக்கரு என்றில்லாமல் ஒரு உணர்வை வெளிப்படுத்த, கதைகளைப் பயன்படுத்தும் முறை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. … Continue reading தமிழ்வெளி காலாண்டிதழ் 5 – ஜனவரி 2022 சிறுகதைகள்: