தேவிபாரதியின் நாவலுலகம்:

நன்றி சமயவேல் சார். நன்றி தமிழ்வெளி. தி.ஜாவின் நாவல்களில் அமிர்தம், அன்பே ஆருயிரே தவிர மற்ற எல்லா நாவல்களிலிருந்தும் ஒன்றை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கரம்சோவ் சகோதரர்களா இல்லை குற்றமும் தண்டனையுமா என்று கேட்டால் என்ன சொல்வது? நல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்குமே நேர்வது இது. தேவிபாரதியின் இதுவரை வெளிவந்த நான்கு நாவல்களில், நிழலின் தனிமை மாஸ்டர்பீஸ் என்று தமிழ் விக்கிப்பீடியா சொல்கிறது. நட்ராஜ் மகராஜ் என்று சொல்வோரும் உள்ளனர். நொய்யல் வெளிவந்ததும், அதுவா இல்லை … Continue reading தேவிபாரதியின் நாவலுலகம்:

நட்ராஜ் மகராஜ் – தேவி பாரதி

ஆசிரியர் குறிப்பு: 1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது நாவல். Last Emperor படத்தில் தான் அரசாண்ட அரண்மனைக்குப் பார்வையாளனாக வரும் மனிதனின் தளர்ந்த நடையைப் பார்த்திருப்பீர்கள். Last Mughal நாவலில் பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் இழைத்த அவமானத்தை விட, அவரது மனைவியால் வந்த … Continue reading நட்ராஜ் மகராஜ் – தேவி பாரதி

நிழலின் தனிமை – தேவிபாரதி:

ஆசிரியர் குறிப்பு: 1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது முதலாவது நாவல். "பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்"என்ற சினிமா பாடலின் வரிகளே இந்தக் கதையின் கரு. பழி வாங்கும் உணர்ச்சி ஒரு மனிதனை, மனிதத்துக்கும் மிருகத்தன்மைக்கும் மாறிமாறிச் செல்ல வைக்கிறது. ஒரு பொருளை உரிமைகோரி, … Continue reading நிழலின் தனிமை – தேவிபாரதி:

நொய்யல் – தேவிபாரதி:

ஆசிரியர் குறிப்பு: 1980களில் சிறுகதைகள் மூலம் தமிழிலக்கியத்தில் அறிமுகமானவர். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஏழாண்டு காலம் காலச்சுவடு பொறுப்பாசிரியராக, ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல் இது. இந்த நாவல் கதைகளின் கதை. இன்றைய எல்லாக் கதைகளுமே இது போன்ற ஒரு கதையை யாரோ யாருக்கோ நூற்றாண்டுகள் முன்பு சொல்லியதன் நீட்சி.கால்நூற்றாண்டாக இந்த நாவலைத் தொட்டுத் தொடர்ந்து, … Continue reading நொய்யல் – தேவிபாரதி: