புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:

நீர்க்கோழி - காளிபிரசாத்: நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண் வருவது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதே கதையை புதுமையாகச் சொல்லி இருக்கிறார் காளிபிரசாத். சட்டென்று காட்சிகள் மாறிச் செல்லும் கதையில் முஸ்லீமைக் காதலித்தால் முஸ்லீமாக மாற வேண்டும் என்ற கட்டாயம் போல் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.மெஹரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உவர்ப்பு - வங்காளத்தில் திலோத்தமா மஜூம்தார் - தமிழில் அருந்தமிழ் யாழினி: மிக எளிமையான கதை. இந்தியாவில் இன்னும் … Continue reading புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:

புரவி மே 2022 சிறுகதைகள் :

ஊழியம் - அண்டனூர் சுரா: ஊழியம் என்றால் Serviceஆ? நாம் ஊதியம்வாங்கிக்கொண்டு செய்வதையும் ஊழியம் என்றே சொல்கிறோம். குழந்தைகளைப் பார்க்கும் பெண்கள் தாயாகும் ஆசை கொள்வது இயற்கை. ஆனால் செல்போன் என்னைக் கேட்காமல் வாங்கக்கூடாது என்பது என்ன மனநிலை? கீவ் - கு.கு. விக்டர் பிரின்ஸ்: சாய்நிக்கேஸின் உண்மைக்கதையைத் தழுவி எழுதப்பட்ட கதை. இருந்த இடத்தில் செய்தித்தாள்களைப் படித்து உலகக்கதைகளை எல்லாம் சொல்லும் போட்டி வைத்தால் தமிழர்களே வெற்றி பெறுவார்கள். பதினான்கு சொற்கள் - பா.ராகவன்: சின்னக்கோடு … Continue reading புரவி மே 2022 சிறுகதைகள் :

புரவி ஏப்ரல் 2022 ஆண்டுவிழா சிறப்பிதழ் சிறுகதைகள்:

கொடிக்கால் - கார்த்திக் புகழேந்தி: நாட்டார் வாய்மொழிக்கதை சொல்லும் பாணியில் சொல்லப்பட்ட கதை. வட்டார வழக்கு வசீகரிக்கின்றது. ஜாதி பேதம், வர்க்கபேதம் காதலுக்கு சமாதி கட்டுவது காலங்காலமாய் நடந்து வந்திருக்கிறது. சாந்தியடையாது அலையும் ஆவியை சமாதானப்படுத்த, கதையில் சொல்லப்படும் யுத்தி innovative. ஆச்சி கதாபாத்திரம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக் புகழேந்தி தொடர்ந்து எழுதவேண்டும். கடவுளின் டி என் ஏ - கமலதேவி: இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மதுரையில் டி வி எஸ்க்காக … Continue reading புரவி ஏப்ரல் 2022 ஆண்டுவிழா சிறப்பிதழ் சிறுகதைகள்:

புரவி மார்ச் 2022 சில சிறுகதைகள்:

பழிதீர்ப்பு- கீ டூ மோப்பஸான் - தமிழில் கார்குழலி: பழிதீர்க்கும் கதைகள் நிறையவே எழுதி இருக்கிறார் Maupassant. பாரம்பரியக் கதைசொல்லலுக்கே உரிய Setting இந்தக் கதையில் முக்கியமானது. Bonifacioவின் புறநகர் பகுதிக்கு வாசகரை அழைத்துச் செல்லும் விவரணைகள். அடுத்தது பிரச்சனை, கடைசியில் தீர்வு என்ற Perfect short story model. Maupassant இதில் செய்திருப்பது இரண்டு விசயங்கள். இத்தாலி, பிரஞ்சுப் பகுதிகளில் கொலை செய்தால் கொல்லப்பட்டவர் சந்ததி பழிவாங்கக்கூடாது என்று அவர்களது ஆண்வாரிசுகளையும் சேர்த்துக் கொலை செய்வார்கள். … Continue reading புரவி மார்ச் 2022 சில சிறுகதைகள்: