தஸ் ஸ்பேக் - சுஷில் குமார்: எதற்காக ஜரதுஸ்த்ரா மலையிலிருந்து கீழே இறங்கினான்? அதிமனிதனைக் காண. அவனைக் கண்டானா? இல்லை. பாரபாஸ் செய்த குற்றம் என்ன? அவனுக்குப் பதிலாகத் தூக்கிலிடப்பட்டவன் புனிதன். முதலாவதில் அதிமனிதனைக் குறித்த கற்பிதம், இரண்டாவதில் கழிவிரக்கம். இரண்டையும் ஒரு அநாதைப் பெண்ணின் வாழ்க்கையில் அழகாக இணைத்திருக்கிறார் சுஷில். https://www.yaavarum.com/%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d/ தலைமுறை - கார்த்திக் புகழேந்தி: ஜாதி வெறி என்பது இரத்தத்தை விட அடர்த்தியானது என்பதைச் சொல்லும் கதை.வேறு பலர் சொல்லி இருந்தால் பிரச்சாரக் … Continue reading யாவரும் செப்-அக்டோபர் 2022 சிறுகதைகள்:
யாவரும் ஜூன்-ஜூலை 2022 சிறுகதைகள்:
கலகம் பிறக்குது - கார்த்திக் புகழேந்தி: குறைந்த பட்சம் ஒரு குறுநாவலாகவாவது எழுதியிருக்க வேண்டிய கதை. 1800ல் இங்கிலாந்து, Wales, ஸ்காட்லாந்து எல்லாம்சேர்ந்த ஜனத்தொகை 10.5 மில்லியன். அதே வருடத்தில் இந்தியாவின் ஜனத்தொகை 160 மில்லியன். போரில் வெல்ல மக்கள் எண்ணிக்கை முக்கியகாரணியல்ல, ஆனால் ஒருநாட்டை ஆக்கிரமித்துத் தொடர்ந்து ஆட்சிசெலுத்த அது முக்கியம். எப்படி அவர்களால் 200 ஆண்டுகள் முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம் நம்மவர்களின் துரோகமும், நமக்குள் அடித்துக் கொண்டதும் தான். ஒரு கலகத்தை கதையாக்கி … Continue reading யாவரும் ஜூன்-ஜூலை 2022 சிறுகதைகள்:
யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்:
ஜில்லா விலாஸம் - கார்த்திக் புகழேந்தி: அண்மைக்கால சரித்திரத்தை பின்னணியாக வைத்துக் கதை எழுதுவது மிகவும் சிரமம். இதில் கூட வ.வு.சியின் கைது 1908 எனவே மற்ற தேதிகளில் குழப்பம் இருக்கிறது.தேதிகளே இல்லாமல் கதையை எழுதியிருக்கலாம். இதைவிட்டுப் பார்த்தால் இந்தக்கதை ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்திருக்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் இருந்து தி.மு.க முதலாவதாகப் பதவியேற்ற காலம் வரை நகரும் கதையில் எப்போதோ செய்த mischief கண்டுபிடிக்கப் படுகிறது. தெளிவாக தங்கு தடையின்றி நகரும் கதை. … Continue reading யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்: