வனம் இதழ் 13-அக்டோபர் 2022 சிறுகதைகள்:

உயிர்தரிப்பு - ப.தெய்வீகன் : ஆஸ்திரேலியாவிற்குக் கள்ளத்தனமாய் வந்த இலங்கை அகதியின் கதை. குடியுரிமை பெறுவதற்கான எத்தனையோ யுத்திகளில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் வித்தியாசமான சட்டங்களில் ஒன்று Banning Home slaughtering.ஆனால் கண்முன்னே ஆடு சாவதைத் தாங்க முடியாத அளவிற்கு ஒரு போர் போராளியை மாற்றி வைத்திருக்கிறது என்பது கதையில் நுணுக்கமாக வந்திருக்கிறது. https://vanemmagazine.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%a9/ மிஸ் பிரில் - கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட் - தமிழில் கயல்: கம்பளி அங்கியுடன் பேசும் பெண் பைத்தியமோ என்று தோன்றியது. பின்னர் … Continue reading வனம் இதழ் 13-அக்டோபர் 2022 சிறுகதைகள்:

வனம் இதழ் 12 ஜூலை 2022 சிறுகதைகள்:

வலசை - கார்த்திக் பாலசுப்ரமணியன் : கார்த்திக்கின் கதைகள் பெரும்பாலும் அடங்கிய தொனியில், தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கூர்மையில், நுட்பமான விசயங்களைப் பேசுவதால் அதிக எண்ணிக்கை கொண்ட வாசகர்வட்டத்தை நம்பி எழுதப்படுவதில்லை என்று தோன்றுகிறது. ஆஸ்திரேலியா என்றில்லை, எங்கெல்லாம் நம் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் ஸ்டார்லிங் தான். வெளிநாட்டவர் பார்வையில் அந்தப்பறவையைப் போல நாம் ஒரே இடத்தில் குவிந்திருப்பது போல் தோன்றினாலும், நமக்கிடையேயான ஆயிரம் உட்பிரிவுகள் வெளிப்பார்வைக்குத் தெரிவதில்லை. இந்து- முஸ்லிம் என்ற பரஸ்பர அசூயை … Continue reading வனம் இதழ் 12 ஜூலை 2022 சிறுகதைகள்:

வனம் ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

அன்னையாதல் - சுதா ஸ்ரீநிவாசன்: மனம் திருந்திய மைந்தனுக்கு நடக்கும் உபச்சாரங்களைப் பார்த்து மூத்த மகன் எரிச்சலடைவான். கடைசியில் அன்பால் அண்ணன் தம்பி ஒன்று சேருவார்கள். பைபிள் காலத்திய கதை. அண்ணன் தம்பிக்குப் பதிலாக அக்கா தங்கை, அவர்கள் அண்ணன் தம்பியை மணப்பது, கடைசியில் மனம் திருந்துவது இந்தக்கதை. பலகை அடித்த சாளரம் - அம்புரோஸ் பியர்ஸ் - தமிழில் ராகவேந்திரன்: Horror story. ஒரு சின்னக்கதையை இவ்வளவு Disturbing ஆக எழுத முடியுமா! கதைத் தலைப்பின் … Continue reading வனம் ஏப்ரல் 2022 சிறுகதைகள்: