வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:

உடன் இருத்தல் - யுவன் சந்திரசேகர்: ஒரு இழப்பு மொத்தமாகப் பாதிக்கையில், தோற்றமயக்கத்தை மனம் வலிய ஏற்றுக் கொள்கிறது. முழுக்கவே புலிகளைப் பற்றிய கதையில் அந்த சோகம் நீறு பூத்த நெருப்பாக கண்ணுக்குப் புலப்படாமல் பதுங்கியிருக்கிறது. தற்செயலாக சந்திக்கும் ஒருவர் தன் கடந்தகாலத்தைப் பகிர்வது Haruki Murakami கதைகளில் அடிக்கடி நடப்பது. வில்லியம்ஸிடம் ஆடியபாதத்தைக் காண்பது போல, எனக்கு முரகாமியை யுவன் மொழிநடையில் படித்த உணர்வு. கதைக்குள் கதையாக Fable சாயலில் ஒரு சம்பவம் வருகிறது. கண்கள் … Continue reading வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:

வல்லினம் மே 2022 சிறுகதைகள்:

மேலங்கி - ஆங்கில மூலம் ஐசக் தினெசென்- தமிழில் சுசித்ரா: Infidelity மற்றும் அதனால் ஏற்படும் குற்ற உணர்வே கதை. ஏஞ்சலோவின் பார்வையிலேயே கதை நகர்கிறது. ஒரே சம்பவத்தை ஒட்டி வேறுவேறு கனவுகள் காண்கிறான். அல்லோரியின் மௌனமே இந்தக் கதையின் மிக நுட்பமான விஷயம்.லுக்ரீசியா தவறுக்குத் துணிந்தவள். அவள் கனவில் வந்தது போல் பேர் சொல்லி அழைக்காமல் இருந்திருக்கலாம். கணவன் முகத்தைப் பார்க்கும்வரை பேசாமல் இருந்திருக்கலாம். அல்லோரிக்குக் கடைசிவரை தெரியாமல் போயிருக்கலாம்.அவர் ஏஞ்சலோவின் கன்னத்தில் முத்தமிடுகிறாரே! ஆனால் … Continue reading வல்லினம் மே 2022 சிறுகதைகள்: