இலக்கியம் என்பதைப் பால் போல் யாரும், யாருக்கும் சங்கில் புகட்டுவதற்கில்லை. சிலாகித்து அல்லது விமர்சித்துப் பேசப்படும் பிரதிகளில், பல பரிமாணங்களின் சிறகுகள் உதிர்ந்து, ஒற்றைப் பரிமாணம் உருக்கொள்கிறது. வாசகனுக்கு தடித்த கயிறோ அல்லது சுளகோ, யானை என்ற அபிப்ராயம் மேலிடுகிறது. செறிவான இலக்கியம் எப்போதும், வாசிப்பவரின் அனுபவத்திற்கு, சூழலுக்கு, கிரகிப்பிற்கு ஏற்ப பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மாற்றும் திரவம் போன்றவை. ஜெயகாந்தனை என்னுடைய பள்ளியிறுதியில், முழுவதுமாக வாசிக்க ஆரம்பித்த போது அவரது சிறுகதைகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, மனித வாழ்க்கையில் … Continue reading வாசிப்பின்பம்
வாசிப்பு ஒரு அனுபவம்
ஒரே இடத்தில் பிறந்து, வளர்வது நாம் பிரமிப்பாகப் பார்த்த விஷயங்கள் எவ்வளவு சாதாரணமானவை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்கிறது.மூன்றாம் வகுப்பு சாரை நான் கல்லூரிக்கு செல்கையில் பார்த்துப் பேசியபோது அவர் மூன்றாம் வகுப்பிலேயே இருந்தது தெரிந்தது. பத்துவயதுக் குழந்தையை ஐந்து வருடம் கழித்துப் பார்க்கையில் உடல்வளர்ச்சி கண்டு வியக்கிறோம். ஆனால் அறிவு வளர்ச்சி அவ்வளவு வெளிப்படையாகப் பார்த்த உடனே தெரிவதில்லை. வாசிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் படிக்க அடிப்படை ஆங்கில அறிவு … Continue reading வாசிப்பு ஒரு அனுபவம்