சிறார் பருவத்திற்கும் பெரியவர் ஆவதற்கும் இடைப்பட்ட பருவம் சந்தேகங்களால் நிரம்பியது. சந்தேகங்கள் வேறாயினும், சந்தேகப்படுதல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. சிறுவர்கள் தங்களால் முடியாது போகுமோ என்ற அச்சத்தை, அவனை விரும்பும் பெண்கள் குறித்தான கற்பனைக்கதைகளை நண்பர்களிடம் சொல்லிக் கடக்க முயல்வார்கள். இந்தக் கதை அந்த வயதில் இருக்கும் பெண்ணின் பயங்கள் குறித்தது. பெண்மை நிறைந்த கதைகள் என்று யாரேனும் பேசினால் உடன் நினைவுக்கு வருவது Red Dress story. பெண் எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை. … Continue reading A Red Dress – Alice Munro:
Voices – Alice Munro:
Munroவின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான 'Dear Life' என்ற தொகுப்பில் இடம்பெற்ற கதை இது. இந்தக் கதையிலும் சிறுவயதில் நிகழ்ந்த ஒன்றின் தாக்கம் வயதாகியும் தொடர்வது கதைக்கரு. பத்துவயதுப் பெண்ணின் பார்வையில் அம்மா, மிகவும் போலித்தனமாக நடந்து கொள்கிறாள். அப்பா யதார்த்தமாக நடப்பவர். பக்கத்தில் இருப்பவர் வீட்டுக்கு ஒரு நடனக்கொண்டாட்டத்திற்கு சென்ற போது நிகழ்ந்தவை பல தெளிவாகவும் சில மங்கலாகவும் சொல்லப்படுகின்றன. அம்மா தன்னைக் கற்புநெறி தவறாத குடும்பப்பெண் என்பதை ஸ்தாபித்துக் கொள்ள விரும்புகிறாள். அம்மா ஆடினாளா, … Continue reading Voices – Alice Munro:
Gravel – Alice Munro:
சில சிறுகதைகளை ஏன் இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் படிக்கிறோம்? ஏதோ ஒன்றை அதில் தவறவிட்டு விட்டோம் என்று மறுவாசிப்பு செய்கிறோம். பழகிய தடத்தில் நடக்கிறோம். எதுவும் மாறவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் அந்தக் கதையைத் தேடிப் படிக்கிறோம். Gravel சிறுகதையைப் பல பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். முதலில் அம்மா. அமைதியான தாம்பத்ய வாழ்க்கையை விட்டு விலகும் Adventure lifeஐ அவள் ஏன் தேர்ந்தெடுத்தாள்? அதிலும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை உடையவள். Stable ஆன வாழ்க்கையை … Continue reading Gravel – Alice Munro: