Rogue Banker – 4:

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊரை மாற்றிக் கொண்டே இருப்பதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு நடுவே மற்றுமொரு பிரச்சனை, புதிதாகச் சேரும் கிளையில் அங்கிருப்பவர்களின் நம்பிக்கையைப் பெறுவது. மேலாளராகக் கிளையில் எந்நேரமும் இருப்பது சாத்தியமில்லை. சில விஷயங்களை நான் ஒப்புக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். வேற்று மாநிலங்களில் பணியாற்றுகையில் அவர்களில் ஒருவனாவது இன்னும் சிரமம். நான் சேர்ந்த முதல்நாளிலேயே சொல்வது அலுவலகம் என்றில்லை உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூடச் … Continue reading Rogue Banker – 4:

Rogue Banker -3:

ஆவணங்கள் வங்கியில் மிகவும் முக்கியம்.என்னுடைய முதல்நாள் வங்கிப்பயிற்சி வகுப்பில், நல்ல வாடிக்கையாளர், கெட்ட வாடிக்கையாளர் என்பதே கடன் கொடுப்பதில் கிடையாது. சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றவல்லது, எல்லாக் கடன் ஆவணங்களையும், அந்தக்கடன் வராக்கடன் ஆகப்போகிறது என்றால் எவ்வளவு கவனமாக தயாரிப்போமோ அப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாலபாடத்தை வங்கியில் வேலைபார்த்த கடைசிநாள் வரைநான் மறக்கவேயில்லை. ஆனால் பலரும் கடன் ஆவணங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அன்றாட வேலைநெருக்கடிகளுக்கு நடுவில் கொடுப்பதில்லை. வழக்கறிஞர்கள் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்துக் … Continue reading Rogue Banker -3:

மீறல்கள்

பத்மஜாவின் பதிவுகள் பல நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன. குரோம்பேட்டை கிளை யூனியன் நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது. இரண்டுமுறை இருமினால் யூனியனுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் செய்தி போய்விடும். நான் கிளைக்குச் சென்று சில நாட்களிலேயே, Leather business செய்துவந்த வாடிக்கையாளரின் மொத்த குடும்பமும் விபத்தில் இறக்க, தப்பிப்பிழைத்தது இருபது வயதான பெண்ணும், பெண்ணின் கணவரும். மாதாந்திர விலக்கு கோயிலுக்குச் சென்ற குடும்பத்துடன் சேராமல் அவரைக் காப்பாற்றியது. அவர் வீட்டிற்கு சென்றால், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பூவும், குங்குமமும் … Continue reading மீறல்கள்