தவ்வை – அகிலா

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல். 1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. … Continue reading தவ்வை – அகிலா

மாயம்- பெருமாள் முருகன்

ஆசிரியர் குறிப்பு: படைப்புத்துறையில் இயங்கி வருபவர். அகராதியியல், பதிப்பியல், மூலபாடவியல் ஆகிய கல்விபுலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவரது பலநூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது 2020ல் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. கடைக்குட்டி: கடைசிவரியில் சட்டென்று எழுந்து நிற்கும் கதை. குடியும், இயலாமையும் அப்படித்தான் பேச வைக்கும். நுங்கு: ஆடுகளை வைத்து பூனாச்சி நாவல் எழுதியவருக்கு ஆடுகளை வைத்து சிறுகதை எழுதுவது சிரமமா என்ன! கதை முழுக்க ஆடுகள் வந்தாலும் இது ஆடுகள் … Continue reading மாயம்- பெருமாள் முருகன்

வண்ணநிலவன் கவிதைகள்

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். எழுபதில் எழுத ஆரம்பித்து ஏறக்குறைய நூற்றைம்பது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (குறுநாவல்கள்) என்று ஐம்பது வருடங்களில் எழுதியது குறைவாகத் தோன்றுகிறது. சமகாலத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். அவரது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இந்த நூல். வண்ணநிலவனின் எஸ்தரும், கடல்புரத்திலும் படித்து அது குறித்து எவ்வளவு நேரம் பேசியிருப்போம் என்பதை நினைவாற்றல் அதிகமுள்ள தோழர் R P ராஜநாயஹம் தான் சொல்ல வேண்டும். எஸ்தர் புத்தகம் கிடைக்காத நேரம் … Continue reading வண்ணநிலவன் கவிதைகள்

பதாகை டிசம்பர் 2020 சிறுகதைகள்

நிழற்குடை- கமலதேவி: கமலதேவியின் வழக்கமான பாணிக் கதை. அங்கங்கே சிதறிக்கிடக்கும் வாக்கியங்களில் கதையின் மர்மமுடிச்சு ஒளிந்திருக்கும். கண்டுபிடிக்க முடியாதவருக்கு கதை கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிக்க முடியாதவகையில் ஒளிந்து கொள்ளும். சிறுகதை வாசிக்க Link : நிழற்குடை இனி- ஸ்ரீரஞ்சனி: Custody என்ற ஒன்றை மையமாகச் சுற்றி வரும் கதை. கீழைநாடுகளுக்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே இது தான். அங்கே எல்லார் மனதிலும் பதிந்த விசயம், தம்பதிகள் பிரிந்ததற்காக பிள்ளைகளைத் தந்தையிடம் இருந்து பிரிக்கும் உரிமையில்லை என்பது … Continue reading பதாகை டிசம்பர் 2020 சிறுகதைகள்

காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்

செல்லப்பன்- சுந்தரராமசாமி: சு.ரா இருந்தபோது அவரது மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து, பலவீனமான கதைகள் என்று நான்கு கதைகளை விலக்குகிறார். அதில் இதுவும் ஒன்று என்று குறிப்பு சொல்கிறது. தப்புத்தாளங்கள் திரைப்படத்தின் கதை தான் இதுவும். ஆனால் இது கல்கியில் 1959லேயே வெளிவந்து விட்டது. சு.ராவின் ஆரம்பகால கதைகள் வேறுவிதமாக இருக்கும். புளியமரத்தின் கதைக்கும், ஜே ஜே சில குறிப்புகளுக்குமே கடலளவு வித்தியாசம். என்றாலும் இதற்கு முன் வெளிவந்த பிரசாதம், சன்னல் போன்ற கதைகளும் கூட அழுத்தமானவை. சு.ராவின் … Continue reading காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்

அம்புயாதனத்துக் காளி

ஆசிரியர் குறிப்பு: சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அபுதாபியில் வசித்து வருகிறார். இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. இந்தியத் தொன்மமரபில் கடவுளைக் காதலனாக உருவகித்து ஏராளமான கவிதைகள். பெண்கள் கண்ணனை அழைக்கும் சிருங்கார நடனம் வடக்கில் ஏராளம். சீதா, லட்சுமியின் அம்சம், அவளையும் வேறொருவன் காமுற்றான். தன்னை மறக்கச் செய்யும் போதை அபின், ஹெராயின் மட்டுமல்ல, பக்தியும், காமமும் தான். காமம் சிற்றின்பம், கடவுள் பேரின்பம் என்று முதலில் வகுத்தவன் யார்? காணாதது, கையில் சிக்காதது எப்போதுமே … Continue reading அம்புயாதனத்துக் காளி

இரவு- எலீ வீஸல்

இரவு- எலீ வீஸல்- பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல் தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன் எலீ வீஸல்: ருமேனியாவில் சிகெட் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே வதை முகாமுக்கு (concentration camps) கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரையும், தங்கையையும் அங்கே இழந்தவர். இவருடைய வதைமுகாம் அனுபவங்களே இந்த நூல். இவருடைய The Beggar in Jerusalem பரபரப்பாகப் பேசப்பட்ட நூல்.1986ல் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவர். ரவி.தி. இளங்கோவன்: திருவல்லிக்கேணி நடைபாதையில் தற்செயலாக வாங்கிய ஆங்கிலப் புத்தகம் தூங்கவிடாது … Continue reading இரவு- எலீ வீஸல்

Becoming – Michelle Obama

எட்டு வருடங்கள் அமெரிக்காவின் முதல் பெண்மணி, வழக்கறிஞர், எழுத்தாளர், மருத்துவமனை ஒன்றில் Vice President, லாபநோக்கில்லாத நிறுவனத்தின் இயக்குனர் என பலமுகங்கள் இவருக்கு. இந்தநூல் இவருடைய புகழ்பெற்ற சுயசரிதை நூல். "ஒரு ஜனாதிபதியின் மரசாமான்கள் வெளியேற மற்றவருடையது உள் நுழைகின்றன. அலமாரிகள் காலி செய்யப்பட்டு சில மணிநேரங்களில் நிரப்பப்படுகின்றன. புதிய தலைகள் புதுத் தலையணைகளில், புதிய உணர்வுகள், புதிய கனவுகள். எல்லாம் முடிகையில், உலகின் புகழ்மிக்க விலாசத்தை விட்டு நீங்கள் கடைசியாக வெளியேறுகையில், உங்களை மீண்டும் கண்டறிய … Continue reading Becoming – Michelle Obama