ஆசிரியர் குறிப்பு:

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பிறந்தவர். புதுச்சேரியைப் பூர்விகமாகக் கொண்டவர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளராகப் பணிபுரிகிறார். வாசிப்பில், பிரயாணங்களில் பேரார்வம் கொண்டவர். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

வீடுகளுக்கு Blue print ஒரு வடிவத்தைக் குறிப்பிடுவது போல, சிறுகதையில் வடிவங்கள் முக்கியமானவை. பக்க அளவுகள் பெரும்பாலும் வடிவத்தைப் பாதிப்பதில்லை. மையக்கதாபாத்திரத்தை வைத்து நகரும் கதைகளில் வாசகர்களை, அந்த மையக்கதாபாத்திரமாகவோ அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை மனதுக்குள் தொடர்பவர்களாகவோ உணர வைப்பதில் தான் சிறுகதை எழுத்தாளரின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்குமுன் நாம் எந்தந்தரப்பு வாசகருக்கு எழுதுகிறோம் என்பதைத் தெளிவாகத் தீர்மானித்து அதற்கேற்ப நம்முடைய எழுத்தைத் தயார் செய்து கொள்வது.

With the beatles போல ஏராளமான கதைகள் முரகாமியின் மையக்கதாபாத்திரத்தின் நினைவில் பின்னோக்கி நகரும் கதைகள். நகுநா கதை அதே வகையைச் சார்ந்தது. நகுநா கதைக்கு இருபத்திநான்கு பக்கங்கள் தேவைப்படுகிறதா என்ற கேள்வியை விட்டு விடுவோம். இதிலும் நினைவுப்பயணம் நடக்கிறது. முதலில் சந்தோஷ்குமாரின் கதை எதற்கு நினைவில் வரவேண்டும்? ஒருவேளை தன்னால் முடியாததை அவன் நடத்தியது Subconsciousல் இருந்து அந்தக்கதை வந்திருக்கலாம். அதைவிட மனைவியின் மார்பு சந்தோஷ்குமார் கதைக்கான எளிய பாதை. அந்தக் கதையில் சோழராஜா, செட்டியார் எல்லாம் வந்து கதையின் வேகத்திற்கு தடைபோடவில்லையா? கதையை முடித்ததிலும் ஒரு Melodrama தன்மை இருக்கிறது. இவையெல்லாம் மஞ்சுநாத் கவனிக்க வேண்டிய விசயங்கள்.

தனிமையின் விபத்து கதையும், பழனிராஜனின் கடந்த காலக்கதை. அதைச் சொல்வதற்கு, அந்தக் கதைக்கு கூடுதல் புரிதலை ஏற்படுத்துவதற்கு, நிகழ்காலத்துடன், இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் கதையும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதனாலேயே இது நல்ல கதையாகி இருக்கிறது. தனிமைக்கும் வெறுமைக்குமுள்ள வேறுபாட்டின் ஆன்மவிசாரம் கூடுதல் சுவாரசியம். தீவிர இலக்கியத்தில் பயணம்செய்ய விரும்பினால் மஞ்சுநாத்திற்கு இது போன்ற கதைகளே உதவிசெய்யும். தொகுப்பில் சராசரித் தரத்திற்கும் கீழான கதைகள் கணிசமாக இருக்கின்றன.

சித்த மருத்துவம் பற்றிப் பேசும் கதைகளில் பழகிய உடலில் பயணம் செய்யும் கைகளின் நேர்த்தி இவருக்குக் கிட்டியிருக்கிறது. குறிப்பாக ருத்ரவிந்து கதை. கதையின் முடிவில் வரும் அமானுஷ்ய டிவிஸ்ட் icing on the cake. அதே போல் தியானம், யோகம் போன்ற விசயங்களைப் பற்றி வரும் கதைகளின் விவரணைகளில் Clear authenticity இருக்கிறது. இந்த மூன்றும் கலந்து கதைகளை எழுத இவருக்கு Near competitor எவரும் தமிழில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை பின்னணியாகக் கொண்ட, அழுத்தமான கதைக்கரு கொண்ட கதைகளை எழுதினால் அவை நல்ல கதைகளாக மாறும் சாத்தியம் ஏராளமாக இருக்கின்றது. மஞ்சுநாத்துக்கு இதையே பரிந்துரை செய்கிறேன்.

சிறுகதைகள்

பிரதிக்கு:

அகநாழிகை பதிப்பகம் 70101 39184
முதல் பதிப்பு- அக்டோபர் 2021
விலை ரூ.200.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s