வல்லினம் மார்ச் 2024 சிறுகதைகள்:

முனி - பெருமாள் முருகன்: அழகான மனைவியின் கணவனைப் பார்த்தால் எரிச்சல் வரும்.  பணக்காரனை, பதவிஉயர்வு அடைந்தவனை….. இன்னும் எத்தனையோ பேர் மேல்.  எப்படியோ அதை அடக்கிக் கொண்டு புன்னகைக்கப் பழகிக் கொள்கிறோம்.  அது முடியாது போனவன் கதையிது.  பெருமாள் முருகனின் Short stories, கூர்மையாகவும், நுட்பமாகவும் இருக்கின்றன. (நாய்க்காரன், நாய்க்காரி!) மூன்றுகதைகள் - சுரேஷ்குமார இந்திரஜித்: இவை முதலில் குறுங்கதைகள் (Flash fiction) இல்லை.  அடுத்ததாக எந்தக் கதையிலும் ஒரு ஆழமில்லை.  இதே கதைகளில் சிறிய … Continue reading வல்லினம் மார்ச் 2024 சிறுகதைகள்:

வல்லினம் இதழ் 144- சிறுகதைகள்:

ரசவாதம் - யுவன் சந்திரசேகர்: " கதையென்பதே உண்மையும் பொய்யும் இரண்டறக் கலக்கும் மாயம் நிகழ்கிற தலம்"என்று கதையில் ஒரு வரி வருகிறது. யுவன் சந்திரசேகரின் எல்லாக் கதைகளுக்குமே பொருந்தும் வரியாக இதைக் கொள்ளலாம். நல்ல எழுத்தாளரின் கையில், இரும்பு ரசவாதத்தில் தங்கமாவது போல், கற்பனையும் யதார்த்தத்துடன் நீக்கமற கலந்து விடும். கரட்டுப்பட்டி என்ற ஊர் நினைவுகள் குறித்த கதையாகக் கொள்ளலாம். இல்லை அந்த ஊரின் வந்தேறிகளின் கதை. எல்லா ஊருக்கும் யாரேனும் வந்தேறிகள் வருவதும் போவதுமாய் … Continue reading வல்லினம் இதழ் 144- சிறுகதைகள்:

வல்லினம் செப்டம்பர் 2023 சிறுகதைகள்:

தனியன் - எம். கோபாலகிருஷ்ணன் : Lottery போன்ற வெகுசில சிறுகதைகளே, வாசித்து முடித்ததும் நம்மை முழுவதும் கலைத்துப் போட்டு, யாரிடமும் பேசத் தோன்றாமல், எதுவும் செய்யத் தோன்றாமல் ஆக்கி வைக்கும். அந்த வகைக்கதையிது. முதிர்கன்னிகளின் வருத்தங்களை ஐம்பது வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டார்கள். அதை ஆண்பால் ஆக்குவது புதிதில்லை. ஆனால் இந்த சொல் புதிது, சுவை புதிது. கோபாலகிருஷ்ணனின் அலட்டிக் கொள்ளாத, ஓசை எழுப்பாத மொழிநடை எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்தக் கதையில் அதன் … Continue reading வல்லினம் செப்டம்பர் 2023 சிறுகதைகள்:

வல்லினம் ஜூலை 2023 சிறுகதைகள்:

வகுப்பறையில் ஒரு திமிங்கலம் - எஸ்.ராமகிருஷ்ணன் : Name dropping தமிழ் சிறுகதைகளில் அடிக்கடிநிகழ்வது, ஆனால் முழுக்கவே ஒரு Classicஐப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. பவித்ரா ஒரு விலக்கப்பட்ட கனி. அவளது கவனஈர்ப்பு செயல்கள் எல்லாமே தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ள. சிவானந்தம் (ஒரு இடத்தில் சிவராமன் ஆகியிருக்கிறார்) உடன்பட்டு இருந்தாலும் கூட அதிகபட்சம் மூன்று மாதங்களில் அவள் விலகியிருப்பாள் என்று தோன்றுகிறது. சிவானந்தம் பதினாறு வருட மணவாழ்க்கையில் குழந்தை இல்லாதது, பாதர் புலிவாலை … Continue reading வல்லினம் ஜூலை 2023 சிறுகதைகள்:

வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:

உடன் இருத்தல் - யுவன் சந்திரசேகர்: ஒரு இழப்பு மொத்தமாகப் பாதிக்கையில், தோற்றமயக்கத்தை மனம் வலிய ஏற்றுக் கொள்கிறது. முழுக்கவே புலிகளைப் பற்றிய கதையில் அந்த சோகம் நீறு பூத்த நெருப்பாக கண்ணுக்குப் புலப்படாமல் பதுங்கியிருக்கிறது. தற்செயலாக சந்திக்கும் ஒருவர் தன் கடந்தகாலத்தைப் பகிர்வது Haruki Murakami கதைகளில் அடிக்கடி நடப்பது. வில்லியம்ஸிடம் ஆடியபாதத்தைக் காண்பது போல, எனக்கு முரகாமியை யுவன் மொழிநடையில் படித்த உணர்வு. கதைக்குள் கதையாக Fable சாயலில் ஒரு சம்பவம் வருகிறது. கண்கள் … Continue reading வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:

வல்லினம் மே 2022 சிறுகதைகள்:

மேலங்கி - ஆங்கில மூலம் ஐசக் தினெசென்- தமிழில் சுசித்ரா: Infidelity மற்றும் அதனால் ஏற்படும் குற்ற உணர்வே கதை. ஏஞ்சலோவின் பார்வையிலேயே கதை நகர்கிறது. ஒரே சம்பவத்தை ஒட்டி வேறுவேறு கனவுகள் காண்கிறான். அல்லோரியின் மௌனமே இந்தக் கதையின் மிக நுட்பமான விஷயம்.லுக்ரீசியா தவறுக்குத் துணிந்தவள். அவள் கனவில் வந்தது போல் பேர் சொல்லி அழைக்காமல் இருந்திருக்கலாம். கணவன் முகத்தைப் பார்க்கும்வரை பேசாமல் இருந்திருக்கலாம். அல்லோரிக்குக் கடைசிவரை தெரியாமல் போயிருக்கலாம்.அவர் ஏஞ்சலோவின் கன்னத்தில் முத்தமிடுகிறாரே! ஆனால் … Continue reading வல்லினம் மே 2022 சிறுகதைகள்: