ஆவநாழி- ஏப்ரல்-மே 2024 சிறுகதைகள்:

சுயசரிதைக்கொரு முன்னுரை - அசோகன் சருவில் - தமிழில் அரவிந்த் வடசேரி: அசோகன் சருவில், அவர் குறித்து இந்தக் கதையில் குறிப்பிட்டிருப்பதை நம்பவே நம்பாதீர்கள்.  அவர் நல்ல எழுத்தாளர்.  கதைகளை அசோகமித்திரன் போலவே சன்னமான தொனியில் கொண்டு செல்பவர்.  ஒரு Escapist and hypocrite பற்றி இவ்வளவு சிறிய கதையில் இவ்வளவு ஆழமாகச் சொல்லமுடியுமா!  அரவிந்த் வடசேரி மலையாளத்திலிருந்து நாவல்களை மொழிபெயர்க்கும் நேரம் வந்து விட்டது.  மொழிபெயர்ப்பில் நல்ல சரளம். உருகுதல் - கலாமோகன்: கலா மோகனின் … Continue reading ஆவநாழி- ஏப்ரல்-மே 2024 சிறுகதைகள்:

ஜனவரி- மார்ச் 2024 சிறுகதைகள்:

இளையவள் - லாவண்யா சுந்தரராஜன்: தோசைக்கல்லை நன்கு தேய்த்துவிட்டு முதலாவதாக ஊற்றும் தோசை இந்தக்கதை, ஆவநாழியின் பழையதும், புதியதுமிற்குப் பிறகு.  லாவண்யாவின் நல்ல சிறுகதைகள், இப்போது புதிதாக வந்த நீலமிடறு தொகுப்பில் அதற்கு முன் வந்த முரட்டுப்பச்சையில், ஏன் முதலாவதாக வந்த புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை என்ற தொகுப்பிலும் இருக்கின்றன.  இந்தக் கதை மங்கையர்மலர் பாணி அல்லது தமிழ் தொலைக்காட்சித் தொடர் பாணிக்கதையில் லாவண்யாவின் Touch அங்குமிங்கும் உள்ள கதை என்று சொல்லலாம்.  லாவண்யா, கதை அவரை … Continue reading ஜனவரி- மார்ச் 2024 சிறுகதைகள்:

ஆவநாழி இதழ்-21- டிசம்பர் 2023-ஜனவரி 2024 சிறுகதைகள்:

பனைத்திணை கதைகள் - அல்போன்ஸ் பிரகாஷ்: ஐந்து குறுங்கதைகள். பெயருக்கேற்றபடி எல்லாக் கதைகளுமே பனைமரத்தைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கின்றன. பனையேறிகளின் வாழ்வியலைச் சொல்பவை. 1 மற்றும் 3 கதைகளில் உயிரோட்டம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருக்கலாம். மற்ற கதைகள் நாவலின் ஒருஅத்தியாயம் போல் கடக்கின்றன. அதிகமாக மெனக்கெடாமல் அவர்களது மொழியை, வாழ்வியலைச் சொல்வது இவரது பலம். அதில் சற்றே கதையம்சமும் இருக்கும்படி பால்த்துக் கொள்வது நலம். பென்சில் சிரிப்பு - விஜயகுமார் சம்மங்கரை: கதையை அழுத்தமாகக் கொண்டு … Continue reading ஆவநாழி இதழ்-21- டிசம்பர் 2023-ஜனவரி 2024 சிறுகதைகள்:

ஆவநாழி இதழ் 20- அக்டோபர்-நவம்பர் சிறுகதைகள்:

சுவடிகள் - கமலதேவி: இவர் நாவல் எழுத வேண்டும் என்று நான் காத்திருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் கமலதேவி. கமலதேவியின் மொழிநடையை , பழகிய வட்டார வழக்கோடு வாசிப்பது இதம். கமலதேவி பெரும்பாலும் முழுமையான கதையை சிறுகதையாகச் சொல்வதில்லை. எல்லாவற்றையும் விட உணர்வுகளைச் சொல்லவே இவர் கதைகளை உபயோகிக்கிறார். இந்தக் கதையும் விதிவிலக்கல்ல. இவரது பெரும்பாலான கதைகளில் இறந்தகாலமும், நிகழ்காலமும் சட்டென்று சேர்ந்து, காலமயக்கத்தை ஏற்படுத்துவது இந்தக் கதையில் இல்லை. நேர்க்கோட்டில் சென்று முடிகிறது. வாசித்துப் பாருங்கள். மீன் … Continue reading ஆவநாழி இதழ் 20- அக்டோபர்-நவம்பர் சிறுகதைகள்:

ஆவநாழி ஆகஸ்ட் -செப்டம்பர் 2023 சிறுகதைகள்:

வில்லுவண்டி -ரேகா.கே - தமிழில் அரவிந்த் வடசேரி: வில்லுவண்டி கதை ஒரு சென்டிமென்ட் மூட்டை. ஜாதிப்பிரிவினை, வர்க்கப்பிரிவினை என்று சாம்பாருடன் மோர்க்குழம்பைக் கரைத்து வைத்திருக்கிறார். உமாவின் அதீத மனிதாபிமானம் தலைதூக்கும் போதே, ஒருநீண்ட உரையை எதிர்பார்த்தேன். நான் ஏமாறவில்லை. அரவிந்தின் அழகான மொழிபெயர்ப்பு மட்டுமே கடைசியில் எஞ்சுகிறது. கெளுத்தி - ஆர். காளிபிரசாத்: ஆண்களின் பேச்சில் அரைவாசிக்கு மேல் காமக்கதைகள். அதில் தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் பொய்கள். பெண்கள் இது போன்ற விஷயங்களை எல்லோரிடமிருந்தும் மறைக்க முயல்கையில், … Continue reading ஆவநாழி ஆகஸ்ட் -செப்டம்பர் 2023 சிறுகதைகள்:

ஆவநாழி ஜுன்-ஜூலை சிறுகதைகள்:

ஒரு குழந்தையிறப்புப் பாடல் - அஜிதன்: வாழ்க்கையிலேயே மிகப்பெரிய சோகம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கொள்ளி வைப்பது. கதைக்கரு அதுவாயினும் உள்ளே பல மடிப்புகள் இருக்கின்றன. முதலாவது தாம்பத்யம். ஒருவர் நெருங்குகையில் அடுத்தவர் விலக்கம் காண்பிப்பது. இரண்டாவதாக குழந்தை விஷயத்திலும் கூட பெற்றோரில் ஒருவர் நெருங்குகையில் அடுத்தவர் தொலைவில். மூன்றாவதாக மெல்லிய மேகமூட்டம் போல் படரும் அமானுஷ்யம். கடைசியாக கடவுள் யாருக்கு நெருக்கம் என்று உறுதியாக நம்புகிறார்களோ அவர்களிடம் கடவுள் கண்ணாமூச்சி ஆடுவது. மொழிநடையும், கதை நம்மை அழைத்துச் … Continue reading ஆவநாழி ஜுன்-ஜூலை சிறுகதைகள்:

ஆவநாழி ஏப்ரல்-மே 2023 சிறுகதைகள்:

ஜாடி மலர்கள் - பா. திருச்செந்தாழை: சிறுகதைகள் ஒரு கதையைச் சொல்லாது, ஒரு நுட்பமான உணர்வைச் சொல்லுகையில், மொழி எவ்வளவு முக்கியமானது என்பது இந்தக் கதையை வாசிக்கையில் தெரிகிறது. Adopted mother உண்மையான மாமியாராக மாறுகையில், அவனால் அசல் மகன் போல் கத்த முடியாது.கதையின் ஆரம்பம் ஒரு உபாசனையில் தொடங்கி, மகிழ்வில் முடிகிறது. பெண்களால் ஒரே அறையில், அருகருகே அமர்ந்திருந்தாலும், மூடிய கதவின் வெளியே நாம் நிற்கும் உணர்வை லேகாவைப் போலவே வழங்க முடியும். சிறு குழந்தை … Continue reading ஆவநாழி ஏப்ரல்-மே 2023 சிறுகதைகள்:

ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:

பிறழ்வு - அரவிந்த் வடசேரி: வேட்டை மனநிலையில் இருப்பவன் பற்றிய கதை. எப்போதுமே கையிலிருப்பது கவர்ச்சியாக இருப்பதில்லை. காப்பிக்கலர் புடவை பணத்திற்குக் கிடைப்பவள் என்று தெரிந்ததுமே காமம் வடிந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரம் முக்கியமானது. அவனது அத்தனை தேடல்களிலுமிருந்து விலகி எதிர்துருவத்தில் இருக்கும் பெண். எந்தவித ஆரவாரமுமில்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் கதை. நன்றாக வந்துள்ளது அரவிந்த். வாழ்த்துகள். கும்பசாரம் - கு.கு.விக்டர் பிரின்ஸ்: Who dun it சிறுகதை. சிறுவன் மூலமாக … Continue reading ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:

ஆவநாழி இதழ் 15- டிசம்பர் 2022 சிறுகதைகள்:

கதவு- குஜராத்தி மூலம் ஹிமான்ஷி ஷேலாட் - தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி: அனுராதாவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பாக வருவதாக ஆவநாழியில் அறிவிப்பு வந்திருக்கிறது.Ecuador, Côte d'Ivoire நாடுகளின் கதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் கூடியிருக்கும் காலகட்டத்தில் இந்தியமொழிகளின் சிறந்த சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தது நல்ல முயற்சி. என்னைப் பொறுத்தவரையில் பத்திருபது அனுராதாக்களேனும் தமிழுக்கு வேண்டும். ஆனால் ஒரு அனுதாவின் தொகுப்பே இப்போது தான் வரும் சூழல் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மிட்டாய் தருகிறேன் வா என்று … Continue reading ஆவநாழி இதழ் 15- டிசம்பர் 2022 சிறுகதைகள்:

ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;

வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை - ஜேம்ஸ் தர்பர் - தமிழில் ஆர். பாலகிருஷ்ணன் : Fantasize செய்பவர்கள், அவர்களுக்கான தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது கடைக்கண் பார்வைக்காக எதிர்பாலினத்தினர் வரிசையில் நிற்பார்கள். இல்லை நிழல் நிஜமாகிறது ஷோபா போல், யாரையும் மன்னிப்பது/தண்டிப்பது குறித்த முழு அதிகாரம் பெற்றவர்கள். இதில் வருபவன் மனைவிக்கு பயந்த சராசரிக்கும் கீழானவன் எதையெல்லாம் பார்க்கிறானோ அதிலெல்லாம் சிறந்தவனாகிறான். Commanderஆக மருத்துவராக……… Firing squad முன் நின்றவன் தப்பித்துக் கொண்டானா தெரியவில்லை. … Continue reading ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;