கனலி மார்ச் 2024 சிறுகதைகள்:

புடுக்காட்டி - பெருமாள்முருகன்: பெருமாள்முருகனிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல கதை.  காரணமேயில்லாது அடித்தாலும்,  வாத்தியார் தானே என்று பொறுத்துக் கொண்ட மாணவர் கூட்டம் இன்றில்லை.  அதைவிட முக்கியமாகக் கதையை எப்போது, எப்படி, யார் திருப்புவார்கள் என்பதைச் சொல்வதற்கில்லை.  முகச்சவரம் செய்துவந்த தினமெல்லாம் யாராவது நான்கு மாணவரை அடிக்கும் யாகப்பன் ஐயா நினைவுக்கு வந்தார்.  அத்துடன் அவர் உதிர்க்கும் வார்த்தைகள்.  அவர் காலம், ஆசிரியர் காலம் தப்பித்துக் கொண்டார்.  அந்த அதிருஷ்டம் மாணிக்காசுரருக்கு இல்லை, பாவம்.  ஒரு கம்பீரம் … Continue reading கனலி மார்ச் 2024 சிறுகதைகள்:

கனலி நவம்பர் 2023 -சிறுகதைகள்:

ஜீவியம் - அரிசங்கர்: மதம் என்பது நம்பிக்கை. உணவு என்பது விருப்பு. Life style என்பது பழகியது. காதலுக்காக மதம் மாறுவது என்பது சக்கரவியூகத்திற்குள் நுழைவது. மதம் மாறித் திருமணம் செய்பவர்கள் அவரவது நம்பிக்கையைத் தொடரும் அளவிற்குக் காதல் வலுவானதாக இருக்க வேண்டும். நான் கவனித்த வரை இந்துவாக இருந்து மாற்று மதங்களுக்குச் சென்றவர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ் போல் அடித்து ஆடுவார்கள். பத்து தலைமுறையாக அதே மதத்தில் இருந்தவர்கள் இவர்களைப் பார்த்து வெட்கப்படவேண்டும். அரிசங்கரின் கதையில் ஒரு … Continue reading கனலி நவம்பர் 2023 -சிறுகதைகள்:

கனலி ஆகஸ்ட் 2023 சிறுகதைகள்:

மொச்சை - பெருமாள் முருகன்: இது போன்ற வித்தியாசமான கதைகளை Authenticஆக எழுத விரல்விட்டு எண்ணும் அளவிலாவது தமிழில் இருப்பார்களா என்பது சந்தேகம். சிறுகதைக்குரிய எல்லா இலக்கணங்களையும் கொண்ட கதை. முதல் பத்தியிலேயே வாசகரின் கையைப் பிடித்துக் கொள்வது, கிராமத்து வட்டார வழக்கு, கிராமத்தில் புழங்கும் சகஜமான கெட்ட வார்த்தைகள், விநோத வைத்தியம், சிறுவனின் பார்வையில் கதை சற்று மாறுபட்டுத் தெரிவது என்று சகல அம்சங்களும் நிறைந்த கதை. இங்கேயே தங்கிக் காலையில் போங்கள் என்று பலமுறை … Continue reading கனலி ஆகஸ்ட் 2023 சிறுகதைகள்:

கனலி ஆகஸ்ட் 2023 சிறுகதைகள்:

காற்றிலோர் கீதம் - குணா கந்தசாமி: இது குறுநாவலுக்கான கதைக்களம். சிறுகதையில் விவாகரத்து, விபத்து, வாய்ப்புத்தேடல் என்று பலவும் வந்து, ஒவ்வொரு திசையில் பயணிக்கின்றன. அதனால் கதையில் Focus என்பது இல்லாது போய்விட்டது. சிறுகதைகளில் பலவருடக் கதையைச் சொல்லும் பொழுது ஒரே சரடில் கதை செல்வது நல்லது. அதோ….சைபீரிய நாரை - சிவசங்கர் எஸ்.ஜே: பூமியில் இருந்து இரண்டடி உயரத்தில் நடப்போர் நண்பர்களானால் எப்போதும் தொல்லைதான். எப்போதோ நடந்த தனுஸ்கோடிப் புயலுக்கு இப்போது நடந்தது போல் கதறி … Continue reading கனலி ஆகஸ்ட் 2023 சிறுகதைகள்:

கனலி திகில்-குற்றம்- துப்பறிதல் சிறப்பிதழ்- ஜூன் 2023 சிறுகதைகள்:

கனலி திகில்-குற்றம்- துப்பறிதல் சிறப்பிதழ்- ஜூன் 2023 சிறுகதைகள்: மூக்குத்தி - சரவணன் சந்திரன்: தமிழில் பிரதாப்பின் 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்பதில் இருந்து பல ஆங்கிலப் படங்களில் வந்த கரு. ஆனால் Treatment புதிது. குறிப்பாக திருடனை நடிக்கச் சொல்லிக் காட்டி அதையே வீட்டில் போய் நடிப்பது, துளியளவு அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து நன்றாக வந்திருக்கின்றது. குற்றத்தைத் திறமையாகக் கண்டுபிடிக்கும் ஒவ்வொருவரினுள்ளும் ஒரு குற்றவாளி ஒளிந்திருக்கிறான். பழி - ஜா. தீபா: யாருக்கும் தீங்கு நினைக்காது, … Continue reading கனலி திகில்-குற்றம்- துப்பறிதல் சிறப்பிதழ்- ஜூன் 2023 சிறுகதைகள்:

கனலி மார்ச் 2023 சிறுகதைகள்:

அவக் - சரவணன் சந்திரன்: இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை விட, ஆண்பிள்ளைகளே அவர்களுக்கென்று குடும்பம் வந்தால் பெற்றோரை எளிதாகக் கைவிடுவது. நான் பெண் குழந்தை ஒன்றைப் பெறவில்லையே என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஒரு மாதத்திலேயே என் வீடு, பெற்றோரிடம், முறையாகச் செய்தால் தானே நமக்கு மரியாதை என்பது போல் சொல்வது காலங்காலமாக இருந்து வருவது தான். ஆண்களை விடப் பெண்கள் சுருதிபேதத்தை எப்போதும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். காளியாத்தாளோ இல்லை மாரியாத்தாளோ எப்படியும் கைகொடுப்பாள் என்றிருந்தால் … Continue reading கனலி மார்ச் 2023 சிறுகதைகள்:

கனலி டிசம்பர் 2022 சிறுகதைகள்:

பார்த்திருத்தல் - வண்ணதாசன்: அறுபது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறாரா வண்ணதாசன்! எழுத எழுத காப்பி டிக்காஷன் மூன்றாவது, நான்காவது என்றாவது போலத் தொடர்ந்து எழுதினால் ஆவதென்பது இவருக்கு நேரவேயில்லை. அதே நுணுக்கம். இந்தக் கதைக்குள் புகுந்து வேடிக்கை பார்ப்பவனாக அந்த மூவர் முகத்தை ஒருதடவை பார்க்கும் ஆசை எழுகிறது. கதை என்று எதுவுமில்லை, ஆனால் இது நல்ல கதை.எனக்கும் மற்ற வாழைப்பழங்களை விட நாட்டுப்பழமும், சிறுமலைப்பழமும் பிடிக்கும். https://kanali.in/parthiruthal/ ஏது எதங்கு - பெருமாள் முருகன்: … Continue reading கனலி டிசம்பர் 2022 சிறுகதைகள்:

கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:

ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் - வண்ணதாசன்: ஊசித்தட்டான் எந்த அவசரமுமில்லாமல் ஒரு நீலக்கோட்டை இழுத்து, கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. பொருட்கள், இடங்கள் பழைய நினைவுகளைக் கூட்டிவருவது யாருக்குமே தவிர்க்க முடியாதது. பிரேமா மட்டுமல்ல, பெண்களில் பெரும்பாலோர் பழையது எதையும் மறப்பதில்லை. எல்லாமே இருந்தாற்போல் இருந்து மாறும் வாழ்க்கையில் எதைத்தான் நிரந்தரம் என்று சொல்ல முடியும். ஆறாவது விரல் முதலில் பார்க்கையில் அசூயையா என்பது கூட வெளிக்காட்டாமல் அடங்கிக் கிடக்கிறது. சைக்கிளைக் கொடுத்து என்னவாகப் போகிறது. பிரேமாவிற்கு ஒரு … Continue reading கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:

கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:

ஊறா வறுமுலை - ஜா.தீபா: பால் ஊறாத முலை. நான் வாசித்த வரையில் தீபாவின் Best இந்தக்கதை. கனவும் நினைவும் கலந்து அரைமயக்க சாயலில் ஆரம்பிக்கும் கதை, பாண்டஸி கூறுகளை உள்வாங்கிப்பின், யதார்த்தத்தில் முடிகிறது. குதிரை பௌருஷத்தின் குறியீடு. திரௌபதி பேசுவதை பேச்சியால் கேட்க முடிவதில்லை, ஆனால் மாயா கேட்கிறது. மாயாவிற்காகவே அவள் பேசுகிறாள். அந்தப் பேச்சில் தான் எத்தனை அர்த்தங்கள்! Yugantaவில் கார்வே, திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்ததற்குப் பதிலாக பீமனைக் காதலித்திருக்க வேண்டும் என்று … Continue reading கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:

கனலி 17ஆவது இணைய இதழ்- May 2022 சிறுகதைகள்:

லூக்கா 5:8 - வைரவன் லெ.ரா: கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. சாபம் என்பது மற்றொரு நம்பிக்கை. இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் பற்றிய கதை இது. மனைவி ஏன் பொய்சாட்சி சொல்லும் ஒருவனை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்? அவளுக்கு வேண்டியது சொன்னதைக் கேட்டு நடக்கும் பாதுகாப்பான ஒருவன். மனைவி முழுக்கவே Practicalஆக இருக்கையில் இவனது பொறுப்புகள் குறைந்தது என்று நிம்மதியாக இருக்காமல் ஏன் அலைபாய்கிறான்! சிலர் அப்படித்தான் அவர்களே ஏற்படுத்திக் கொண்ட வளையத்தில் மாட்டிக் … Continue reading கனலி 17ஆவது இணைய இதழ்- May 2022 சிறுகதைகள்: