Things Fall Apart – Chinua Achebe Literary Classics 5/100: SPOILER REVIEW

அச்சிபேயின் இந்த முதல் நாவல் வெளியாகி அறுபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும்அதிகம் வாசிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாவலும் இதுவே. இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட நூல். ஒருவகையில் பார்த்தால் இந்த நாவலை , மேற்கத்திய நாட்டினர் பலரும் ஆப்பிரிக்க சரித்திரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து பல புத்தகங்கள் எழுதியதற்கு, பதிலளிக்கும் முகமாகவே அச்சிபே எழுதியிருக்க வேண்டும். (நாவலின் இறுதியில் வெள்ளைக்காரக் கமிஷனர் இந்த சம்பவத்தை எப்படி எழுத வேண்டும் என சிந்திப்பார்) ஆப்பிரிக்க … Continue reading Things Fall Apart – Chinua Achebe Literary Classics 5/100: SPOILER REVIEW

Bleak House – Charles Dickens – Literary Classics 4/100:

சார்லஸ் டிக்கின்ஸ்ஸின் நாவல்களில் சிறந்தது எது என்றால் கலவையான பதிலே கிடைக்கும். David Copperfieldம் Great Expectationம் பலரும் படித்தவை. Oliver Twist, Hard Timesக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும். பெண்கள் மட்டும் ஓட்டளித்தால் Christmas Carol என்ற குறுநாவல் வெல்லும். ஆனால் என்னைப் பொறுத்தவரை Bleak House தான் அவருடைய சிறந்த நாவல். என்னுடைய போறாத காலம், ஷெர்லாக் ஹோம்ஸ்க்கும் முன்பாக, ஒரு டிடெக்டிவ் அறிமுகமாகும் முதல் ஆங்கில நாவல் இது. டிக்கின்ஸின் (மேற்குறிப்பிட்டவை மட்டுமே … Continue reading Bleak House – Charles Dickens – Literary Classics 4/100:

Animal Farm – George Orwell- 3/100

நாவலின் இறப்பு பற்றி ஆங்கிலத்தில் அடிக்கடி விவாதங்கள் நடந்திருக்கின்றன.தமிழில் கூட நாம் சாகாவரம் பெற்ற படைப்புகள் என்கிறோம். Animal Farm இறப்பில்லாத நாவல்களில் ஒன்று. இரண்டு உலகயுத்தங்களையும் பார்த்து வாழ்ந்த ஆர்வெல் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும், கட்டுரையாளரும் ஆவார். Burmese Daysல் ஆரம்பித்து தொடர்ந்து சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவல்களை எழுதிய ஆர்வெல் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இரு நூல்களை தன் வாழ்வின் கடைசி ஐந்தாம் வருடத்தில் எழுதினார். அவை The fable, ANIMAL FARM மற்றும் an … Continue reading Animal Farm – George Orwell- 3/100

Emma -Jane Austen 2/100:

ஜேன் ஆஸ்டன் அவரது பெற்றோருக்கு ஏழாவது குழந்தை. பெற்றோருடன், அண்ணனுடன் அவரது வாழ்க்கை கழிந்தது, நோயுற்று தன் நாற்பத்து இரண்டாவது வயதில் இறந்தார். ஏழுநாவல்களை எழுதிய ஜேன் ஆஸ்டனுக்கு அவருடைய இலக்கிய மேதைமை தெரிந்திருக்கவில்லை. நான்கு நாவல்கள் அவர் உயிருடன் இருக்கும் போது வெளிவந்திருந்தாலும், அவரது காலத்திற்குப் பின்னரே உலகமெங்கும் பரவலாக வாசிக்கப்பட்டார். அவருடைய முதல்நாவல் Northanger Abbey லண்டனைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்றால் £10க்கு வாங்கப்பட்டு, பதிப்பகத்துடன் அவருடைய பல போராட்டங்களுக்குப் பின்னரும் வெளியிடப்படாமல் அவர் … Continue reading Emma -Jane Austen 2/100:

The Metamorphosis by Franz Kafka:

காஃப்காவை நினைக்கையில் உடன் நினைவுக்கு வருவது நண்பருடனான அவரது இந்த உரையாடல் " கடவுளின் மோசமான தினத்தில் மோசமான மனநிலையில் படைக்கப்பட்டவர்கள் தான் நாம்". அதற்கு நண்பர் கேட்பது ஏதாவது முன்னேற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா?" அதற்கு இவரின் மறுமொழி " ஆமாம் நிறையவே, கடவுளுக்கு இருக்கிறது, ஆனால் நமக்கில்லை". இது தான் காஃப்கா. இவரது காதலி Melina Jesenska இவரது இரங்கலில் குறிப்பிட்டது போல " அவன் தனியன், வாழ்வைக்குறித்து பயப்படும் பார்வையைக் கொண்டிருந்தவன்". என்பது Capsule வடிவத்தில் … Continue reading The Metamorphosis by Franz Kafka: