ஆசிரியர் குறிப்பு:
மதுரையைச் சேர்ந்தவர். MA M.Phil பட்டங்களைப் பெற்றவர். குங்குமம், பாவையர் மலர் போன்ற இதழ்களில் தொடர் எழுதியவர். இலக்கியம், நூல் விமர்சனம், பழங்குடி மக்கள் விழிப்புணர்வு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
முன்னுரைகளை கதைகளைப் படித்துத் தான் எழுதுகிறோம் என்பதை நிரூபிக்க முழுவதும் Spoilers முன்னுரைகளை எழுதுகிறார்கள் போலிருக்கிறது. விதிவிலக்கில்லாமல் எல்லோரும் செய்கிறார்கள். Suspense நாவல்களுக்குத் தமிழில் முன்னுரைகள் இருக்கின்றனவா?
பெண்களின் உலகம் கதைகளில் விரிகிறது.
நடுத்தரவயதுப் பெண் சிரிக்கையில் சிறுநீர் பிரிந்து பின்னால் ஈரமாகிறது. கடையில் பாத்ரூம் போக முடியாது, வேலை பார்க்கும் பெண்ணுக்கு dysuria தொந்தரவு. ஆசைப்படுபவன் குறித்துப் பேசுபவள் அவனைத் திட்டுவது போல் அம்மாவிடம் நடிக்கிறாள். வயதானவரை வீட்டில் வைத்திருக்கும் பெண் சாதத்தைக் குழையும் வரை வேகவைக்க வேண்டியதாகிறது. பெண்கள் காதலில் விழுந்து வாழ்க்கையிலும் தடுமாறி விழுகிறார்கள். பெண்களே எல்லாக் கதைகளிலும் மையக்கதாபாத்திரங்கள்.
சிறுகதைகள் எழுதுபவர்கள் தமிழின் தலைசிறந்த எல்லா எழுத்தாளர்களின் இருபது கதைகளையேனும் வாசிக்க வேண்டும். எல்லோரிடமும் கதைகள் இருக்கின்றன. அதை எப்படி எழுத்தில் கொண்டு வருகிறோம் என்பதில் தான் வித்தியாசப்படுகிறோம். தீபா நாகராணி நிறைய வாசித்துக் குறைவாக எழுத வேண்டும். செய்தால் அடுத்த தொகுப்பில் வரும் வித்தியாசத்தை அவரே உணரமுடியும்.
பிரதிக்கு:
ஹெர் ஸ்டோரீஸ் 75500 98666
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 120.