எட்டு வருடங்கள் அமெரிக்காவின் முதல் பெண்மணி, வழக்கறிஞர், எழுத்தாளர், மருத்துவமனை ஒன்றில் Vice President, லாபநோக்கில்லாத நிறுவனத்தின் இயக்குனர் என பலமுகங்கள் இவருக்கு. இந்தநூல் இவருடைய புகழ்பெற்ற சுயசரிதை நூல்.

“ஒரு ஜனாதிபதியின் மரசாமான்கள் வெளியேற மற்றவருடையது உள் நுழைகின்றன. அலமாரிகள் காலி செய்யப்பட்டு சில மணிநேரங்களில் நிரப்பப்படுகின்றன. புதிய தலைகள் புதுத் தலையணைகளில், புதிய உணர்வுகள், புதிய கனவுகள். எல்லாம் முடிகையில், உலகின் புகழ்மிக்க விலாசத்தை விட்டு நீங்கள் கடைசியாக வெளியேறுகையில், உங்களை மீண்டும் கண்டறிய உங்களுக்கு பலவழிகள் மிஞ்சுகின்றன.

“ஒரு கிண்டர் கார்டன் குழந்தை பள்ளியில், நிறங்களைப் படிக்கையில் வெள்ளை என்று படிக்கவே பயப்படுகிறது என்றால் அங்குள்ள பரஸ்பர அவநம்பிக்கையைப் புரிந்து கொள்ளமுடியும்.

பெண் குழந்தைகள் எல்லா நாட்டிலும் ஒன்றுபோல் இருப்பது ஒரு ஆச்சரியம். பிரான்ஸ்க்கு பள்ளியில் டூர் போவதை வீட்டில் சொல்லக்கூடத் தோன்றவில்லை, வேறு ஒருவர் மூலம் விசயம் தெரிந்து பெற்றோர் வருத்தப்பட்டனர் என்கிறார்.

எப்போது, யாருடன், எங்கே முதல்முத்தம் கொடுத்தேன், அம்மா வேறு ஆணைத் தேர்ந்தெடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்திருக்கிறாளா என்பது, ஆண் தோழனுடன் அவன் காரில் கஞ்சா குடித்தது, வேறு வேறு ஆண்நண்பர்கள் வாழ்க்கையில் வந்தது என்பது போல் இந்தியாவில் சொல்லத் தயங்கும் விசயங்கள் இயல்பாக வந்து போகின்றன.

எப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமைகிறது என்பதை யாரும் சொல்வதற்கில்லை. ஒபாமா இவர் ஏற்கனவே வழக்கறிஞராக இருக்கும் நிறுவனத்தில் இவரிடம் பயிற்சிக்கு வருபவர் காலதாமதமாக வருகிறார். உணவு இடைவெளியில் புகைபிடிக்கிறார். ஆரம்ப சமிக்ஞைகள் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை.

1992ல் திருமணம் 1998 வரை சகல முயற்சிகள் செய்தும் குழந்தைப்பேறு இல்லை. இடையில் சில குறைப்பிரசவங்கள். குழந்தையின்மை எப்படி ஒரு பெருஞ்சுமையாக பெண் மீது மட்டும் விழுவதை அழகாகச் சொல்லி இருக்கிறார்.

அரசியல் அறவே பிடிக்காத Michelleன் கணவன் மெல்ல மெல்ல அரசியலில் நுழைகையில் குடும்பத்தில் பிரச்சினை வளர்கிறது. இருவரும் Counselling சென்று திருமணத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். பதினோரு நீண்ட வருடங்கள் ஆகிறது ஒபாமாவுக்கு ஒரு சாதாரண State Legislator ஆவதற்கு. அதுவும் senior ஒருவர் விலகிக் கொள்ள, மற்றொரு முக்கிய வேட்பாளர் Scandalகளில் சிக்கிக் கொள்ள என்று அதிருஷ்ட தேவதை இவர் பக்கத்திலேயே நின்று கொண்டதால். வீட்டில் Michelle மற்றும் நண்பர்களிடம் இதில் தோற்றால் அரசியலை விட்டு விலகி வேலைக்குச் செல்கிறேன் என்று வாக்குத்தந்த பிறகு. வாழ்வா, சாவா என்று தீர்மானிக்க உருட்டும் சொக்கட்டான் பெரும்பாலும் சாவைக் கொண்டு வருவதில்லை.

Hillary ஏன் Obamaவுடனான போட்டியில் தோற்றார்? ஒபாமாவிற்கு இருந்த Grace, அமெரிக்க மக்களுக்கு நாம் ஒரு முஸ்லீமை, தலித்தை ஜனாதிபதியாக்கி இறையாண்மையை உலகுக்குக் காட்ட வேண்டியது போன்ற நிர்பந்தம். அதனையும் தாண்டிய விசயம் Hillary இவரை விடக் கூடுதல் வருடம் Senator ஆக இருந்த போதும் பெண். Trumpஉடனான போட்டியில் Democratic party இவரை நிறுத்தாமல் யாரை நிறுத்தியிருப்பினும் தோல்வியடைய வேண்டியிருந்திருக்காது. Joe Hiden Obama வுடன் பின்னர் Hillaryயுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியவில்லை. அவர் தான் இப்போது Trumpஉடன் போட்டியிட்டு ஜெயித்தவர்.

Michelle Princetonல் கல்லூரிப் படிப்பும், Harvardல் Lawம் படித்தவர். Obamaவும் Harvardல் Law படித்தவர். இருவருமே Corporate Lawyer ஆக வேலைபார்த்துப் பின் பாதையை மாற்றிக் கொண்டவர்கள். இருவரும் மிகச் சாதாரண குடும்பபின்னணியில் இருந்து வந்தவர்கள். இருவருமே பாதுகாப்பான வேலை, சூழ்நிலையை விட்டு வெளியே வந்தவர்கள். மூன்று பாகங்களாக அவரது இளமைப்பருவம், திருமணமும் ஒபாமா அரசியல் ஏணியில் ஏறுவதும் பின் White house அனுபவங்களும்.

ஒபாமாவிடம் அமெரிக்கா நிறைய எதிர்பார்த்தது. உன்னிப்பாக அரசியலைக் கவனிப்போருக்கு எவ்வளவு நிறைவேறியது என்று தெரியும். Michelle சொல்லியதை விட சொல்லாத விசயங்கள் அரசியலைப் பொறுத்தவரை நிறைய.. எட்டு ஆண்டுகள் பறவைக்கோணத்தில் பார்த்த அமெரிக்க அரசியலை இவரால் முழுதும் விமர்சிக்க முடியாததற்கு காரணங்கள் இருக்கக்கூடும். தன் வாழ்வில் ஏற்பட்ட நிறைய தடுமாற்றங்களை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்கவேண்டிய சுயசரிதைகளில் ஒன்று இது.

https://www.amazon.in/…/ref=cm_sw_r_wa_apa_dlC…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s