நடு இணையஇதழ் ஆடி 21 சிறுகதைகள்:

சத்தம் – சிந்து ராஜேஸ்வரி:

அறிமுக எழுத்தாளர். நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் எழுத்துப்பிழையாவது இல்லாமல் எழுதலாம் இல்லையா. சாப்பிட என்பதை சப்புட என்று எழுதியிருக்கிறார் பல இடங்களில். நல்லவேளை உகரம் தானே என்று கொஞ்சம் ஆசுவாசம் கொண்டேன். சுதந்திரத்திற்கு முன் வந்த Ismat Chughtaiயின் Lihaf படித்துப் பாருங்கள் சிந்து ராஜேஸ்வரி.

https://naduweb.com/?p=17278

கடன் – ஐ.கிருத்திகா:

Such a beautiful story. மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு வாழ்க்கை ஒருநாளும் முன்புபோல் இருக்கப் போவதில்லை. அதிருஷ்டம் செய்தவர்களுக்கு அந்தக் குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். மற்றவர்கள் குழந்தைகளுக்கு ஆயுள் நீள்கிறது. வெளியாட்களின் வேடிக்கை மற்றும் பச்சாதாபம் கூடுதல் சுமை. அந்தக் குழந்தையை வைத்து படும் சிரமங்கள், தம்பதியருக்கிடையே வரும் உறவுச்சிக்கல், வெளியுலகத் தொடர்பைத் துண்டித்துக்கொள்வது என்று எல்லாமே திருத்தமாக வந்திருக்கிறது. கீதையோ, பைபிளோ நம்பாரத்தை நாம் தான் சுமக்க லேண்டியதாகி இருக்கிறது. கதையின் முடிவு கதையை நல்ல கதைகளின் வரிசையில் அவசரமாகக் கொண்டு சேர்க்கிறது.

https://naduweb.com/?p=17276

நாய்கள் உலகம்- ஹிலால் ஷூமான்- தமிழில் மிஸ்பாஹூல் ஹக்:

மொழிபெயர்ப்புகளை இணையத்தில் இருந்து செய்வதை விட புத்தகங்களில் இருந்து அல்லது The New Yorker போன்ற தரமான இதழ்களில் இருந்துசெய்வது நல்லது. எழுத்தாளரின் இணையப் பக்கத்தில் இருந்து Copy செய்தது கீழ்வரும் பகுதி. இதுவும் சரியா என்பதை மூலத்தில் இருக்கும் அராபிய மொழி படிக்கத் தெரிந்தவர் தான் சொல்லமுடியும்.

The next day, he watched the live broadcast on TV, and saw his dream come true. Waste appeared in hills in the streets until some of them were almost submerged, so he thought that this was the first step of his dream, and that it remained for him to see the rubble, and for people to disappear, leaving the buildings deserted. He kept searching the broadcasts about El Helm Street, perhaps seeing it, but he did not appear. In the midst of the search, he wandered thinking that something in the buildings’ existence as in the dream still had to happen, and that it was not only about the buildings being empty of people, but something else in the buildings themselves that he could not determine. Something that connects, repeats, turns and says something.

And when she noticed that he was thinking, she asked him what was the matter, and he pointed to the TV and answered her without further saying that his dream had come true, so she laughed and asked him to dream about winning the lottery next time, for example. Gaaraha laughed, and did not disclose his theory to her. He lost the dream because it came true, and he is sure that he will never dream of it again, and what bothers him in all this is not loss as much as it is his continued lack of understanding of the thing that he knows exists and does not know how to define it, and what exacerbates his annoyance is that the dream crossed into this world without It acquires any addition or acquires any meaning. And because he did not disclose, and because such a discussion did not happen between them, he decided to engage in a home activity that would kill time and thoughts, and made himself sleep in the evening near her, hoping that he would see other dreams, which he would make sure to remember, and that they would be repeated without being realized.

https://naduweb.com/?p=17327

சின்ன மீன்கள் – ஜிஃப்ரி ஹாசன்:

இளவயதில் புரட்சி, மார்க்சியம் பேசி உணர்ச்சிவசப்பட்டுப்பின் அதிலிருந்து விலகி நடப்பவன் ஒருவனைப்பற்றிய கதை. அடுத்த நான்கு தலைமுறையாவது உட்கார்ந்துசாப்பிட வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட தேசத்தில், மதங்கள் மனிதர்களை மூளைச்சலவை செய்யும் தேசத்தில் காளான்கள் தான் வளரும்.

https://naduweb.com/?p=17321

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s