தெய்வமே- மணி. எம்.கே.மணி:
மணியின் வழக்கமான பாணிக்கதை. சிறுகதையும் இல்லாது திரைக்கதையும் இல்லாத ஒரு மொழிநடை. அருணாவில் ஆரம்பித்து அருணாவில் முடிகிறது. இடையில் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள் கடந்து போகின்றன.
” அடைய முடியாப்பொருளின் மீது ஆசை தீராது, அபிமானம் மாறாது”.
தெய்வமே!
பச்சோந்தி குறுங்கதைகள்:
ஐந்து குறுங்கதைகள். எல்லாவற்றிலும் புராணப்பாத்திரங்களுடன் சமகால வாழ்வு அல்லது பிரச்சினைகள் சேர்ந்து புதிய கோணத்தில் வருகின்றன. சர்ரியல் பாணியை அவ்வப்போது தொட்டுவரும் மொழிநடை கதைகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. புதிய முயற்சி.
பச்சோந்தி குறுங்கதைகள்
பேச்சொலிகள்- ஆக்டேவியா இ.பட்லர்- தமிழில் நரேன்:
கொரானாவைப் போலவே எதிர்பாராத நேரத்தில் வந்த ஒரு வைரஸ். எழுதுவது, பேசுவது எல்லாற்றையும் மறக்கச் செய்யும் நோய். பேச்சு இல்லாததால் ஏற்படும் பல தவறான புரிந்து கொள்ளல்களில் ஆரம்பிக்கும் கதை, பேச்சு எப்படி நம்பிக்கையைத் தரும் என்பதில் முடிகிறது. இடையில் ஒரு Real Life Hero வந்து போகிறான். நல்ல மொழிபெயர்ப்பு.
பேச்சொலிகள் – ஆக்டேவியா இ. பட்லர்
ஏவாளின் ஆதாம்- மயிலன்.ஜி.சின்னப்பன்:
வழக்கம் போலவே மயிலன் ஜி சின்னப்பனின் hitting the nail on the head பாணிக்கதை. இருவரும் பேசிக்கொள்வது ஆதவனின் கதாபாத்திரங்கள் பேசுவது போல, (குறிப்பாக நிழல்கள் கதையில்) இருக்கிறது. ஒரு சின்ன விளையாட்டு தான் கதை. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே என்பது ஒன்று. ஆட்டுவிப்பவருக்கும் ஆட்டம் காண்பது மற்றொன்று. எதற்காக வந்திருப்பாள். பழையதே Better எனத் தோன்றியிருக்குமா? கடந்தே போன வாழ்வை மீட்டுரு செய்வதா? இல்லை நினைத்து வந்ததை செய்யும் தைரியம் வரவில்லையா? போகத்தானே சொல்கிறாள் அவன் போகாமல் காலைக்கட்டிக் கொண்டால்! நல்ல கதைகள் எத்தனை திறப்புகள், எத்தனை சாத்தியங்களை அளிக்கும் என்பதற்கு அளவே இல்லை. மயிலனின் மொழிநடையும், கதையும் Sharp ஆக வந்திருக்கின்றன. Keep rocking.
ஏவாளின் ஆதாம்
ஒரு ஸ்டிக்கி நோட்டின் கதை- ஜீவ கரிகாலன்;
கரிகாலனின் dry-wit humour இந்தக் கதையிலும் மெல்லியதாக. புனைவுக்கும் அல்புனைவுகளுக்கும் இடையேயான இடைவெளி ஆங்கிலத்தில் சுருங்கிக் கொண்டே வருவது போல இந்தக் கதையிலும் முயற்சித்திருக்கிறார். விவாகரத்து கதையா இல்லை நவீனகவிஞர் எழுதுவது கதையா? எழுத்தாளர்களின் ஸ்டிக்கி நோட்களை சேகரித்தால் கதைகளுக்கான கதைகள் கிடைக்கக்கூடும்.
ரசித்துப் படித்தேன்.
யாஹையூம் – யாகையூம்- பாலைவன லாந்தர்:
தமிழ்க்கதைகளில் அதிசயங்கள் நடப்பது நிற்பதேயில்லை. வித்தியாசமான தொனியில் நகரும் கதை சற்று கவனம் செலுத்தியிருந்தால் நல்ல கதையாகி இருக்கக்கூடும்.
நூறாவது நாள் – ரமேஷ் ரக் ஷன்:
தன்மையில் சொல்லப்படும் கதைகளில் கொலையாளி என்றால் வாசகர் தானாகவே அது ஆண் என்று Assume செய்து கொள்வார்கள். காமத்தின் மொழியே கதை.
முருகக்கா- சுஷில் குமார்:
சுஷிலின் வழக்கமான பாணியிலிருந்து விலகிய கதை. முதலாவது வட்டார வழக்கு Missing. அடுத்தது, superstitionஐ நம்பும்படியே கதை நகரும். இதிலும் அது வந்தாலும் இறுதியில் அதை Break செய்கிறார். பர்ஸைக் கொடுக்கச் சொல்லிக் கேட்பார்களா என்ன? பத்துரூபாயை வாங்கிக்கொண்டு ஒன்று இல்லை இரண்டு ரூபாய் கொடுப்பதையே பார்த்திருக்கிறேன். கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி என்று சி.எஸ். ஜெ குரலில் அக்கா பாடுவது போல் கேட்கிறது.
முருகக்கா
அன்றொரு மழைநாள் – ரெ.விஜயலட்சுமி:
மழைநாளில் எதிரில் தெரியும் காட்சிகளைப் போல மங்கிய காட்சிகள் கதை முழுதும் வந்து போகின்றன. திரைப்படங்களில் பழைய காட்சிகள் Nostalgiaவை கொண்டுவந்து ரசிகர்களைக் கண்கலங்க செய்யும் யுத்தியை கடைசிப்பத்தியில் முயன்றிருக்கிறார்.
அன்றொரு மழை நாள்
மொழுக்காவியம் – ஜெயசுதன்:
நடப்புக்கதையை ராஜாபாணிக் கதையாக சொல்ல முயற்சித்து நூறு பழமொழிகளையும் கதையில் சேர்த்திருக்கிறார். இந்தியமக்களிடம் தான் உலகத்திலேயே Awareness இல்லை என்ற உண்மை இப்போது உலகமெங்கும் தெரிந்த சங்கதி ஆகிவிட்டது. வழமை போல் அரசாங்கங்களைக் குறை கூறுகிறோம்.
.
மொழுக்காவியம்