மண்ணுள் உறைவது- சுஷில்குமார்:
வனம் இதழில் கதையின் முடிவில் தான் கதாசிரியர் பெயர் இருக்கும். இந்தக் கதையை இரண்டுபத்தி படித்ததுமே யார் எழுதியது என்று தெரிந்து விட்டது. கிணறு வறண்டது ஏதோ சாபம் பின்னால் கிணற்றில் தண்ணீர் வந்து விட்டது என்பதைத் தாண்டி எத்தனை விசயங்கள் இந்தக்கதையில்! வழமை போல் கிணறு வற்றுதல், துர்க்கந்தம் எல்லாம் அமானுஷ்யம். அம்மா- அத்தை Chemistry, அத்தைக்கு ஹிஸ்டீரியா வருவது, எப்போதும் போல் மகாலட்சுமி ஸ்டெல்லா ஆவது, தண்ணீரைப் பார்த்து அத்தையின் எதிர்வினை என்று எத்தனையோ பொடிப்பொடி சங்கதிகளைக் கதை வேகமாகக் கடந்து ஓடுகிறது.
முனகிய சடலம்- மார்ட்டின் விக்கிரமசிங்க- தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்:
ஒரு குற்றத்தை காவல்துறைக்குத் தெரிவிப்பவர் பல இன்னல்களுக்கு ஆளாவது கீழைநாடுகளில் சகஜம். அப்படி ஒன்றைப் பார்த்தவன் குடும்பமும், தன்னுடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுவதைக் குறித்த கற்பனையில் ஆள்வதைக் குறித்த கதை. தெளிவான மொழிபெயர்ப்பு.
லூப் – குமார நந்தன்:
vicious circleல் மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாத பெண்ணின் கதை. இதை எடிட் செய்து பாதியாகக் குறைக்கலாம். இவ்வளவு நீளம் இல்லாமலேயே உணர்வுகள் புரியும் இல்லையா!
Safnas Hasim கட்டுரைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்துப் பறவைக்கோணத்தை
அளிக்கின்றன.