மூத்ததும் குருத்து ஆகும் என்பதை அழகம்மை புரிந்து கொள்கிறாள். பலர் எழுதுகையில் கதை அத்துடன் முடிந்து விடும். ஆனால் ஜெயமோகன் ஒரு நாவல் படித்து முடித்த அனுபவத்தை இந்தக் கதையில் தந்து விடுகிறார். வயதானவர்களைப் பார்க்க வேண்டிய (அதுவும் கணவனின் தாத்தா, பாட்டி) பொறுப்பின் சுமையுடன், Economical independence இல்லாத பதற்றம், அதைக் கணவன் சொல்லிக் காண்பிப்பதில் அவமானம் என்று அழகம்மையே கதை முழுதும் Score பண்ணுகிறாள். அம்மி செய்வது குறித்த தகவல்கள் காரணத்துடன் இடையிடை வந்து கொண்டே இருக்கின்றன. கடையில் போய் அம்மி வாங்கலாம், ஆனால் அதற்குள்ள வித்தியாசத்தை தாணுலிங்கம் சொல்வதைக் கேளுங்கள். மூன்று தம்பதியர் இந்தக்கதையில். அவர்கள் மூவரது உறவையும் சிறுகதையில் பளிச்சென்று கொண்டு வருவது எளிதான காரியமில்லை. எந்தத் தொழிலை செய்தாலும் அதை எப்படி பக்தியோடு செய்வது என்பதற்கு தாணு தம்பதி. இரவில் நான் உன் பூனை என்பதற்கு கண்ணப்பன் விரல் சொடுக்கு எடுப்பது. தாத்தா சுக்கு வெள்ளம் என்று மாறிமாறி சொல்லும் போதே எனக்கு சந்தேகம். அவருக்கு காது மட்டும் சரியாகக் கேட்காதென்று. கடைசியில் அது தெளிவாகிறது. நினைவு தப்பியவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது என்பது………….உண்மையில் மூன்று தாம்பத்தியத்தில் ஒப்பிட முடியாது உச்சியில் போய் நிற்பது கிழவன்- கிழவி தாம்பத்தியம். பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு. Aesthetically well crafted story.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s