தமிழ்வெளி இதழை முழுதும் படித்த உடன் தோன்றிய சிந்தனை, இது போல் நான்கைந்து இதழ்கள் தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தான். பொருளாதார ரீதியாக பல சோதனைகள் இருக்கிறது என்றாலும் Nidhi Agerwalஐப் பார்த்து மோகிப்பது போல், நடைமுறையில் சிரமம் என்று தெரிந்தே விரும்புகிறோம்.

நேசமிகு சுவர்கள் – அமுதா ஆர்த்தி:

இது தான் நான் வாசிக்கும் இவருடைய முதல்கதை. கதைக்கரு என்றில்லாமல் ஒரு உணர்வை வெளிப்படுத்த, கதைகளைப் பயன்படுத்தும் முறை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. Charlotte Perkinsன்Yellow Wall Paper படித்தவர்கள் அதே யுத்தியை, இவர் வேறு Purposeக்கு உபயோகப்படுத்துவதை அறிந்து கொள்வார்கள்.

எந்த கதாபாத்திரங்களுக்கும் பெயரில்லை. கதைசொல்லியின் குரலில்ஒரு Melancholy
கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அவள் மற்றவர்களுடன் சேர்ந்து புதுத்துணி வாங்கித் தருவதில் இருக்கும் அசூயை, ஆனாலும் துணி நன்றாக இருக்கிறது. அவள் போட்டிருக்கும் புதுச்செருப்பு இவளது செருப்பு வாங்கப்போன பழைய கதையை நினைவுபடுத்துகிறது. அவளுக்கு பள்ளிக்குள் அப்பாவை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இவள் அப்பா, சந்தையில்…… இவளை அறியாமலேயே ஒப்பீடுகள் நடக்கின்றன. மௌனசாட்சியாக சுவர். இவளுக்கு ஆங்கிலம், கணிதம் தெரியவில்லை, சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை, ஆனாலும் மனது என்ற ஒன்று அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. அவளும் கூட பாவம் தான், எதில் தான் உண்மையில் பணக்காரி என்பது அவளுக்குப் புலப்படவில்லை. கதை நன்றாக வந்திருக்கிறது.

ச.ஆதவன் – குறுங்கதை:

குறுங்கதையில் மூன்று அத்தியாயம். ஆஹா ஓஹோ பேஷ்பேஷ்.

பெருந்தேவி குறுங்கதைகள்:

விரல்கள்:

இது Gothic கதை. குறுங்கதையல்ல. அம்மா கதாபாத்திரத்தில் ஏதோ குழப்பம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அம்மா என்றால் நள்ளிரவில் எங்கோ ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? குடித்து விட்டு எவன் வீட்டில் விழுந்து கிடக்கிறாளோ என்றால் தப்பா?

நெருக்கத்தை அனுபவித்தல்:

Fantasy கதை. Fantasy என்றால் பெரிதாக இறங்காமல் அருகிலிருப்பதை வைத்து, ஏதோ நம்மால் செய்ய முடிந்ததை செய்யும் குறுங்கதை. Fantasize செய்யாத உலகத்தில் வாழ்வது வீண்.

தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது:

தலைப்பு சொல்வது போலவே ஒரு Curiosityஐப் பற்றிய கதை. என்னதானென்று பார்ப்போமே என்பதில் தான் எல்லாமே ஆரம்பிக்கிறது. அது இடமாக இருந்தாலும் சரி, ஆளாக இருந்தாலும் சரி.

வெறி- சில்வினோ ஓகம்போ- தமிழில் அப்பணசாமி-

பல வருடங்கள் முன்பு இவரது கதைத் தொகுப்பைப் படிக்க ஆரம்பித்து, பயந்து போய் படிக்க முடியாது வைத்தது நினைவுக்கு வருகிறது. இந்தக் கதையிலும் குழந்தைகள் மீது காட்டும் வன்முறை தான்.
இரண்டு குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையைத் தாண்டி இந்தக் கதையில் வேறு எதுவும் Theme இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

தலை துண்டிக்கப்பட்ட கோழி- ஹோராஸியோ குவிரோகா-;தமிழில் சித்துராஜ் பொன்ராஜ்:

Poe போலவே Very dark and bleak moodsஐ ஏற்படுத்தும் கதை. ஒருவகையில் பெற்றோர் அவர்களது குழந்தைகளிடம் காட்டவேண்டிய இயல்பான அன்பைத் தவறவிடும்போது என்ன நடக்கும் என்பது. இன்னொரு வகையில் விவிலியம் மற்றும் இந்துமதம் சொல்லும் மூதாதையரின் பாவம் பிள்ளைகளாய்ப் பிறக்கும் என்பது. இன்னொரு வகையில் பெற்றோரின் அதிக கவனத்தை ஈர்க்கும் குழந்தையிடம் மற்ற குழந்தைகளுக்குத் தோன்றும் வெறுப்பு. Sibling rivalry. இன்னொரு View point என்னவென்றால் நாயகன் படத்தில் யாரை நாம் கவனிக்காது உதாசீனப்படுத்தினோமோ அவனே கதையின் முடிவை தீர்மானிப்பது போல, நம் கவனம் எல்லாம் கணவன்,மனைவி ,மகள் என்று இருக்கும் போது மகன்கள் கதையை முடித்து வைக்கிறார்கள். நல்ல கதை.
ஸ்பானிஸ்ஸில் இருந்து நேரடியாகத் தமிழ் மொழிபெயர்ப்பு, நுட்பமான கதையைத் தேடிக் கொண்டு வந்திருப்பது, திருத்தமான மொழிபெயர்ப்பு என்ற மூன்றுக்கும், மூன்று ஷொட்டுகள் சித்துராஜிற்கு.

இருத்தலியல் – யுவன் சந்திரசேகர்:

யுவன் சந்திரசேகர் Pure Test Player. குறுங்கதைகள் அவரது களமல்ல. இது போன்ற கதைகளில் இவரது Strength என்னவென்று தெளிவாக வெளிப்படுகிறது.
இதைக் கதையில்லை என்றூ அவர் சொல்லியிருந்த போதிலும். ” வந்தேறிகளான என் முன்னோர் நடந்தே இந்தியாவுக்குள் நுழைந்த பாதையின் துல்லியமான வரைபடம்” என்ற இடத்தில் வாய்விட்டு சிரித்துவிட்டேன். இதைக் குசும்பு, கிண்டல், ஹியூமர் என்று எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம். மன்னியும் அவர் கண்ணும் படும் பாடைப் பார்க்கையில், இவரது Bad bookக்குள் போய்விடக்கூடாது என்ற அச்சம் எழுகிறது. நாமே அலுமினியப் பாத்திரம் நசுங்கியபின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதது போல நம்மை அடையாளம் காணமுடியாது. தமிழ்வெளி போன்ற இதழில் பதிமூன்று பக்கங்கள் வந்திருக்கிறது, என்றாலும் அதற்குள் முடிந்ததா என்ற ஆதங்கம் எழுகிறது. Still my heart smiles.

தமிழ்வெளி – நவீனக் கலை இலக்கியக் காலாண்டிதழ் கிடைக்கும் இடங்கள்:

  1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர் – சென்னை
  2. பீ 4 புக்ஸ் – யாவரும், வேளச்சேரி – சென்னை
  3. பரிசல் புத்தக நிலையம், அரும்பாக்கம் – சென்னை
  4. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் – சென்னை
  5. பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை – சென்னை
  6. ரிதம் நூல் பகிர்வாளர், சைதாப்பேட்டை – சென்னை
  7. விஜயா பதிப்பகம், ராஜ வீதி – கோவை

இணையத்தில் வாங்க:

  1. Commonfolks.in
  2. Dialforbooks.in

மற்றும் நேரிடையாக ‘தமிழ்வெளி’ இதழ் வாங்க, சந்தா செலுத்த
Buy Books By Phone: wa.me/+919094005600

Leave a comment