கலைந்தது கனவு – கே.எஸ்.சுதாகர்:

மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவி இப்படித்தான் அவனையாவது திருமணம் செய்திருக்கலாம் என்று வெதும்புவார்.

பார்வை ஒன்றே போதுமே – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி:

சர்ரியல் கதையா ஆனா கோர்வையா வருதே.

அடித்தல் திருத்தல் – செல்வராஜ் ஜெகதீசன்:

அலுவலகம் முடியும் நேரத்தில் எதையாவது எடுத்துக் கொண்டு, எதிரிலிருப்பவர் நெளிவதைப் பார்த்து திருப்தியடையும் Minimal Sadism நிறையப்பேருடன் இருக்கிறது. சிறுவர்கள் எறும்பைத் தொல்லை செய்வது போல. இத்துடன் சீனு ஒரு சுவாரசியமான பாத்திரம். இயல்பான கதையாக வந்திருக்கிறது.

உட்சலனங்கள் – காலத்துகள்

ஒரு extramarital relationship இல்லாமலேயே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி துரோகம் இழைக்க முடியும் என்பதைச் சொல்லும் கதை. Porn பார்ப்பது தவறு என்ற குற்றஉணர்வு இந்தியர்களுக்கு இப்போதும்
இருக்கிறது, அது தான் Spouseக்கு தெரியாமல் மறைக்கச் செய்வது. நன்றாக வந்துள்ளது.

ஏறு தழுவுதல் – அரவிந்த் வடசேரி:

சம்பவமாகவும் இல்லாமல் கதையாகவும் இல்லாமல் முடிந்து விட்டது. முதல் கதையா? கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சர்வ ஜாக்கிரதை சம்பத் ராம் – நந்து சுந்து

சிவசிவா!

இருவாட்சி குழாம் எது போன்ற சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூடிப்பேசி முடிவெடுக்க வேண்டிய தருணம் அவசரமாக வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். நாமெல்லாம் சிலநேரம் வெறுமனே உட்கார்ந்து பார்த்தால், பத்து பதினைந்து நிமிடங்கள் நகர்வதே சிரமமாக இருக்கும். இதில் கதை எழுதியவர்களில் பலர், தமிழ் சிறுகதையுலகை அநாயசமாக ஐம்பது, அறுபது வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள். ஏராளமான புதியவர்கள் தொடர்ந்து நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு பிரசுரிக்கக் கதை கேட்பதில் தவறில்லை. இல்லை வீணை பாலசந்தர் செய்தது போல் பாடல்களே இல்லாமல் படம் எடுப்பது கூட உத்தமம்.

Leave a comment