“இன்று அவனுக்கு காலையிலேயே பயங்கர மூட் அவுட், நான் பயந்துகிட்டு சாப்பிட்டாயா என்று கூட கேட்கவில்லை” என்றார் அந்த அம்மா. வேலையில் வரும் பிரச்சனையை எப்படி வீட்டில் காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வீடு ஒரு CD, அலுவல் மற்றொரு CD. ஒரே நேரத்தில் இரண்டையும் சுழல வைக்க முடியாது.

2000ல் 70 கோடி என்பது பெரிய கடன். கடன் பத்திரங்களில் அடமானச்சொத்துப் பத்திரங்கள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். EM பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்த நேரம். வெளியில் இருந்து வரும் RBI போன்ற ஆடிட்களில் கூட சற்று Empathyஐ எதிர்பார்க்கலாம். வங்கியின் சகஅலுவலர்கள் செய்யும் ஆடிட்டில் எவ்வளவு குறை கண்டுபிடிக்கிறார்களோ அவ்வளவு பெருமை அவர்களுக்கு. மதிய இடைவெளியில் சொத்துக்குரியவரின் வீட்டுக்குச்சென்று, கையெழுத்தை வாங்கிவிட்டு, வீட்டுக்கு சென்று Lunch முடித்து, மகள் இப்போதே வேண்டும் என்று சொன்ன பொருளை வாங்கிக் கொடுத்து விட்டு, அலுவலகம் சென்று, இதற்கு அடுத்த கடன்பத்திரங்கள் இருக்கும் கவரில் இந்த EM documentஐ வைத்தாயிற்று. EM கையெழுத்து Missing என்ற விலாங்கு மீன் நழுவியதில் அந்த அலுவலருக்கு வருத்தம். என் மேல் கொஞ்சம் சந்தேகம். ஆனால் எதையும் அவரால் நிரூபிப்பதற்கில்லை.

வீட்டில் உள்ளவர்கள், தங்களது பிரியத்துக்கு உரியவர்களுக்கு பணியிடத்தில் தெய்வம் அரிச்சந்திரனுக்கு இழைத்த அத்தனை அநீதிகளையும் இழைத்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.நாமே வழிப்போக்கன், எதற்கு கருத்து சொல்வது என்று பேசாமலும் இருந்திருக்கிறேன். காரை மோதியவர் எவ்வளவு கவனமாகச் செல்பவர் என்பதுவும், இதை விட நெரிசல் மிக்க வீதிகளில் அவர்தம் திறமையை முன்னர் காட்டியிருந்த போதிலும், இன்றும் இவரது எல்லா சாகசமுயற்சிகளையும் தாண்டி, எதிர்வந்தவனின் முட்டாள்தனம் மட்டுமில்லாது இவருக்கு இன்று போதாத வேளையாகிப் போனதால் இந்த சம்பவம் நேர்த்தது என்பதை முப்பது நிமிடங்கள் விளக்கிய பிறகு நீங்கள் என்ன மறுமொழி சொல்வீர்கள்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s