பழிதீர்ப்பு- கீ டூ மோப்பஸான் – தமிழில் கார்குழலி:

பழிதீர்க்கும் கதைகள் நிறையவே எழுதி இருக்கிறார் Maupassant. பாரம்பரியக் கதைசொல்லலுக்கே உரிய Setting இந்தக் கதையில் முக்கியமானது. Bonifacioவின் புறநகர் பகுதிக்கு வாசகரை அழைத்துச் செல்லும் விவரணைகள். அடுத்தது பிரச்சனை, கடைசியில் தீர்வு என்ற Perfect short story model. Maupassant இதில் செய்திருப்பது இரண்டு விசயங்கள். இத்தாலி, பிரஞ்சுப் பகுதிகளில் கொலை செய்தால் கொல்லப்பட்டவர் சந்ததி பழிவாங்கக்கூடாது என்று அவர்களது ஆண்வாரிசுகளையும் சேர்த்துக் கொலை செய்வார்கள். இங்கே வயதான தாய் மட்டுமே எஞ்சியிருப்பது. எதிராளி பலமானவன். ஆகவே எதிர்பார்க்காத ஆயுதத்தை உபயோகிக்க வேண்டும். இன்று வாசிக்கும் போதும் சுவாரசியமாக இருக்கும் கதை, எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும். Maupassant one of the greatest short story writers of all times. கார்குழலியின் மொழிபெயர்ப்பு
absolutely perfect. இன்னும் இவருக்கு நாவல் மொழிபெயர்ப்புப்பணியை எந்த பதிப்பகத்தாரும் வழங்காதது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மாற்றப்பட்ட விதைகள் கொண்ட மனிதன் –
அரிசங்கர்;

Gene Editing பற்றிய கதை. தமிழில் முதன்முதலாக வருவதாக நினைக்கிறேன்.
அம்பானி ஒருவரே, Telecom Industryஐ நாசப்படுத்தி விட்டு தன் கவனத்தை Retail distributionக்கு திருப்பி இருப்பதை நினைக்கையில், Corporate செய்யும் மனிதஉரிமை அத்துமீறல் குறித்த இந்தக்கதை, கற்பனையில்லை, உண்மை என்றாகும் நாளும் தொலைதூரத்தில் இல்லை. பணியில் ஒத்துக்கொள்ள வைப்பதை, அந்த Corporate செய்வது அப்படியே American model. அழகாக, முழுக்கவே நிதர்சனத்தை ஒட்டி ( வேலை தேடும்போது உதவுபவர் பட்டியலைத் தேடினால் ஒருவர் கூட இல்லாதது) பயணம் செய்யும் கதையில் கற்பனையும் நிதர்சனமாக்கும் நல்ல Presentationஐச் செய்திருக்கிறார் அரிசங்கர்.

வதைகுரல் – எஸ்.பிரவின் குமார்.:

Back with the bang. இடைவெளிக்குப் பின் நல்ல கதையோடு திரும்ப வந்திருக்கிறார்
பிரவின் குமார். ஆந்திராவில் ரயில் கடக்கையில் முகத்தை மூடிக்கொள்வார்கள் என்று முன்னர் பலரும் விளையாட்டாகச் சொல்வதன் பின்னான வலிமிகுந்த கதையை எழுதியிருக்கிறார் பிரவின்.
குளியல் மறைப்பில் அரசியல் தலைவர் படம், ரயிலில் இருப்பவரின் குறுகுறு பார்வைகள், ஜோஸ்பின் போல சமரசம் செய்ய முடியாதது, காதல் முளைவிடுவது என்று இந்தக்கதை மிகவும் நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கிறது. இடைவெளிக்குப் பின் காதலனை பார்க்கும் ஆவலும் அவனிடமிருந்து எதிர்பாராத எதிர்வினையும், கதைக்கு ஒரு Perfect endingம் இந்தக் கதையின் தரத்தை வெகுவாக உயர்த்தி இருக்கின்றன. கௌசல்யாவின் எண்ண ஓட்டங்களை வேறொரு சூழலில் வாழும் ஆணாகிய நான் புரிந்து கொள்ளும் போது பிரவின்குமார் வெற்றியடைகிறார். அதிகம் சொல்லப்படாத களம் மட்டுமல்ல, அழகாகச் சொல்லப்பட்ட கதையுமிது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s