Perrotta அமெரிக்க எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர். இவரது Election மற்றும் Little Children இரண்டும் பலத்த வரவேற்பை பெற்ற நாவல்கள்.

Henry என்ற பள்ளி மாணவனின் Coming of age story இது. அத்துடன் அவன் நெருங்கிப் பழகும் Carlos என்பவனுடனான நட்பும் குறித்தது. அங்கு படிக்கும் எல்லோரிடமும் வசதி இருந்தது. Carlosன் பெற்றோர் ஹோட்டலில் பணியாளர்கள். Carlosக்கு சாப்பாடு, உடை மட்டும் பிரச்சனையில்லை, அமெரிக்காவில் தங்கும் Documentsம் பிரச்சனை. ஆனால் அவனது அழகு, எளிதாகப் பழகும் குணம் அவனை எல்லோரையும் கவர வைக்கிறது. Henry ஆசைப்படும் பெண்ணையும் சேர்த்து. அதில் இருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

இந்தக் கதை முழுக்கவே Class differences, american whitish mentality கொண்ட கதைசொல்லியின் கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. Perrotta சிறிய கதையில் நிறைய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். முதலாவது, ,வர்க்க வேறுபாடு பள்ளியில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது. இரண்டாவது Henry பார்த்துப் பரிதாபப்படும் நிலையில் இருக்கும் ஒருவன், தான் விரும்பும் பெண்ணுடன் பழகுவதால் அவனைப் பார்த்துப் பொறாமைப்படுவது (இது உலகம் முழுதும் உள்ளது), அடுத்ததாக Prom என்ற பெயரில் பள்ளி இறுதியில் கிடைக்கும் பாலியல் அனுபவங்கள் (இது அமெரிக்கா போன்ற வெகுசில நாடுகளுக்கே பொருந்துவது, இங்கெல்லாம் ஆண் முயற்சி எடுக்காவிட்டால் பெற்றோர் பார்த்து இருபத்தி ஒன்பது வயதில் பெண்வாசம் பிடிக்க ஏற்பாடு செய்வார்கள்). அடுத்ததாக அமெரிக்கப் பெண்கள் அழகான வாலிபர்களை உபயோகித்துப் பின் அவர்களை Dump செய்து வசதியானவர்களை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, கடைசியாக விளையாட்டில் Talent என்பதை Hardwork சமன் செய்வது ( Boris Becker Vs Ivan Lendl) என்று Multilayered story. Henryக்குக் குற்றஉணர்வு வருவதில்லை,பெரும்பாலான அமெரிக்கர்கள் அப்படித்தான், ஆனால் அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலும் அமெரிக்க எழுத்தாளர்களுக்கே பொதுவாக இருக்கிறது.

Leave a comment