தஸ்தயெவ்ஸ்கி, ரா.கிருஷ்ணையா இருவருமே தமிழ் வாசகர்களுக்குப் பலமுறை அறிமுகமானவர்கள். இந்தக்கதை ஆங்கிலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழிலும் கூட இதே கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் ‘அருவருப்பான விவகாரம்’ என்ற பெயரில் நியுசெஞ்சுரி மற்றும் ஆதி பதிப்பகம் வெளீயீடாக வந்தது. லேபிள்கள் மாறிய போதும், பழைய ஒயினின் போதை அப்படியே இருக்கின்றது.

இந்தக்கதை ருஷ்யப்புரட்சிக்கு ஐம்பது வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. கதையில் புரட்சி வெடிக்கப்போகும் அறிகுறிகளை தஸ்தயெவ்ஸ்கி கோடிட்டுக் காட்டியிருக்கிறார் கதைகளில் வரும் இளைஞர்கள் மூலமாக. மூன்று கனவான்கள் பேசிக்கொள்வதில் இருக்கும் போலித்தனம் இப்போதும் உலகின் எந்த மூலையிலும் அப்படியே மாறாது இருக்கிறது.
Pseudorevolutionaries இந்தக் கதையில் மட்டுமல்லாது, எங்கெல்லாம் தன்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட நினைக்கிறார்களோ அங்கெல்லாம் சுயம்புவாகத் தோன்றுகிறார்கள்.

இவான் இலியீச், இவானவிச் தன் வண்டியில் கொண்டு போய் விடுகிறேன் என்ற போது ஒத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பிசெல்தனிமலின் விதி அந்த நேரத்தில் மோசமாக இருந்திருக்க வேண்டும். இவான் இலியீச் ஒரு முற்போக்கு பிம்பத்தைக் கட்டமைக்க, தற்செயலாக அவனது திருமணவிழா நிகழ்வைத் தேர்ந்தெடுத்தது அவனது துரதிருஷ்டம். எப்போதுமே, Comedy of errors அவற்றை செய்பவர்களை விட எதிரிருப்பவருக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ருஷ்ய இலக்கியங்களில், பெண்களின் காதல்களும், அவர்களது ஆண்தேர்வும் மற்ற நாடுகளை விட பலவருடங்கள் முன்னேறி இருப்பதைக் காட்டுகிறது. இதில் வரும் மணமகளுக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லை, கூடுதலாய் தந்தையின் நிரந்தரத் தொல்லை, அவளுக்குத் திருமணம் ஒரு விடுதலையுணர்வைத் தந்திருக்க வேண்டும். ஆனால் அவள் கண் இராணுவ அதிகாரியின் பின்செல்கிறது.
இந்தியாவில் வீட்டை விட்டு வெளியேறினால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற பயத்தினால் இன்றும்கூட பெண்கள் சகலத்தையும் சகித்துக் கொண்டு வீட்டோடு இருக்கிறார்கள்.

தஸ்தயெவ்ஸ்கி இந்தக் கதையில் அந்தக்கால பிரபுத்துவ மனநிலையைத் தெளிவாகக் கொண்டு வந்திருக்கிறார். கதையின் முடிவு அதற்கு ஒரு அழுத்தம் கொடுக்கிறது. ரா.கிருஷ்ணையா ஆயுள் முழுதும் மார்க்ஸியம் சார்ந்தே வாழ்ந்தவர். ருஷ்யாவில் பத்தாண்டுகளிருந்து ருஷ்ய மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். தஸ்தயெவ்ஸ்கி மட்டுமன்றி பல ருஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தஸ்தயெவ்ஸ்கி செய்யும் சின்னப்பகடி கூட இவரது மொழிபெயர்ப்பில் தெளிவாக வந்திருக்கிறது.

As flies to wanton boys are we to the gods. They kill us for their sport.- SHAKESPEARE.

பிரதிக்கு:

நற்றிணை பதிப்பகம் 94861 77208
முதல்பதிப்பு நவம்பர் 2022
விலை ரூ. 100.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s