அவளும் நானும் – களியக்காவிளை சினு:
Modern short stories கதையம்சம் இல்லாமல் ஒரு விவாதம் அல்லது உரையாடலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது சொல்ல வரும் செய்தி வலுவானதாக இருக்க வேண்டும். இந்தக் கதை அதைச் செய்யவில்லை.
திருப்பண்டம். செல்வராஜ்:
விக்டர் பிரின்ஸ் எழுதிய செற்றைத் தொகுப்பின் கதை போலவே இருக்கிறது. எந்த மதம் என்றாலும் தலைவன் கொள்ளையடிப்பான், தட்டிக்கேட்க ஆள் இவ்வையென்றால் பெண்ணைத் தொடுவான். புதிதாகச் சொல்ல இந்தக் கதையில் எதுவுமில்லை.
ஊர் பஞ்சாயத்து – தெலுங்கில் இருந்து தமிழில் பேராசிரியர் பொருநை மாரியப்பன்:
பெண் உரிமைக்குரல் கொடுக்கிறாள். நம் லஷ்மி, அமுதா கணேசன் போன்றோர் இதை விடநல்ல கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
சிவப்புச்சிலுவை பிரவீன் குமார்:
பாவமன்னிப்பு கேட்கும் கதை. படித்து முடித்ததும் என்னையறியாமல் ‘செத்துரு’
என்று வாய் முணுமுணுத்தது.
தேவாங்கின் கண்கள் – கிருஷ்ண கோபால்:
ஒரு Superstionஐச் சொல்லும் கதை. நிறைய எடிட் செய்திருக்க வேண்டும், அருவிக்காட்சியில் இன்னும் கொஞ்சாம் உட்புகுந்திருக்க வேண்டும்
சொப்பனம் – வைரவன் லெ.ரா:
கிரிக்கெட்டில் மற்ற ஆட்டக்காரர்கள் சொதப்பும் போது நல்ல பேட்ஸ்மனும் சேர்ந்து சொதப்புவது வழக்கம். அப்பாவின் காதல் Ok அம்மா என்ன தப்பு செய்தாள்?
வெண்குழலில் மீந்த சாம்பல் – வாஸ்தோ
சத்யஜித் ரேயின் Indigo Terror) கதையில் வெள்ளைக்காரன் இதில் முதியதம்பதி. அதிக வித்தியாசமில்லை.
கண்ணகி சிலையை நிறுவ வந்த சோழ மன்னர்கள்- கு.கு. விக்டர் பிரின்ஸ்:
Political satire. விக்டர் பிரின்ஸ்க்கு நேரடியான அனுபவம் உள்ள கதைகளுக்கும் இது போன்ற நேரடி அனுபவம் இல்லாத கதைகளுக்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள
வித்தியாசம்.
புனித வியாழன் – ஜே. ஆர்.வி. எட்வர்ட்:
திருவிருந்துக்கு போக முடியாத வீடுகளுக்கு கடவுளே தேடி வருவார். ஆன்மீகக்கதை, பாவம்.
காலகட்டம் இதழின் நேர்காணல்கள், ஜோய் மேத்யூவில் ஆரம்பித்துக் கடைசிவரை வெகு சிறப்பாக இருக்கின்றன. அரைப்பக்கத்திற்குக் குறைவான நீலபத்மனாபனின் நேர்காணல் கூட நன்றாக வந்திருக்கிறது. அது போலவே எல்லாக் கட்டுரைகளும், நூல் மதிப்புரைகளும் தரமாக வந்திருக்கின்றன.
மொத்தமாகப் பார்க்கையில் அல்புனைவுகள் இடுப்புக்கு மேல் அப்படியே Arnold Schwarzenegger உடலமைப்பும், புனைவுகள்
இடுப்புக்குக் கீழ் ஓமக்குச்சி நரசிம்மனின் உடலமைப்பும் கொண்டிருக்கின்றன. கதைத் தேர்வில் கவனம் மிக அவசியம்.